காலக்கிரமமாகத்தொகுக்கப் பட்ட நிகழ்ச்சிக் குறிப்புகள் | CHRONICLE (2)

vஏரோது அந்திப்பா
üகலிலேயா, பெரேயா இவைகளின் கால் பங்கு தேசாதிபதி.
üசகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாளை தன் மனைவியாக கொண்டவன்.
üயோவான் ஸ்தானகனை சிறையில் அடைத்து, சிறச்சேதம் செய்தவள்.(மத் 14:10)
üபிலாத்து இயேசுவை இவனிடம் அனுப்பியபோது இயேசுவை பரியாசம் செய்தவன்(லூக் 23:1)
v ஏரோது பிலிப்பு
üதிபேரியா, இந்துரேயா, தினிகொத்திணி இவைகளின் கால்பங்கு தேசாதிபதி.
üஏரோதியாளின் கணவன்; சலோமியின் தகப்பன்(லூக் 3:1)
vஏரோது லிசானியா
üஅபிலேனேக்கு, எர்மோன் மலை, தமஸ்கு இடைப்பட்ட பகுதியின் கால் பங்கு
தேசாதிபதி.(லூக் 3:1)
பிலாத்து-பொந்தியு(கி.பி.25) தேசாதிபதி
üஇவன் கிலவுதியு ராயனால் யூதேயாவிற்கு 6ம் தேசாதிபதியாக நியமிக்கப்பட்டான்.
üஎருசலேமிற்கு பலியிடப்போன கலிலேயரை கொல்லுவித்தான்.
üஇயேசுவை நியாயம் விசாரித்து சிலுவை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்தவன் இவனே.
üஇவன் காலத்தில் யூதேயாவிற்கு ஏரோது அந்திபா கால் பங்கு தேசாதிபதியாக இருந்தான்.
அப்போஸ்தலர்களின் காலத்தில் ஏரோதுவின் ஆட்சி:
ஏரோது அகிரிப்பா1 (கி.பி44-52)
üமகா ஏரோதின் பேரன்.
üயாக்கோபை பட்டயத்தால் கொன்றவன்.
üபேதுருவை சிறையில் அடைத்தவன்
üதேவதூதனால் அடிக்கப்பட்டு புழு புழுத்து செத்தவன்(அப் 12:23).
üரோமபேரரசன் கலிகுலாவின் நண்பன்
üகலிகுலா இவனுக்கு ராஜா பட்டம் வழங்கினான்.
ஏரோது அகிரிப்பா2(அகிரிப்பா1ன் மகன்,கி.பி52-60)
üஇவன் யூதேயா, கலிலேயா, சமாரியா, பெரேயா பகுதிகளை இணைத்து மகா ஏரோதுபோல்
யூதேயா என்ற பெயரில் ஆட்சி செய்தான்.
üரோமப்பேரரசன் கிலவுதியுராயன், பிலிப்பு, லிசனியா ஆட்சி செய்த
பகுதிகளையும் இவனுக்கு கொடுத்தான்.
üசெசரியா தலைநகரமாக இருந்தது.
üபேலிக்ஸ், பெஸ்த்து தேசாதிபதிகளாக இருந்தனர்.
üபவுல், இவன் முன் சாட்சிபகர்ந்தான்.
பேலிக்ஸ்(கி.பி53-60)-தேசாதிபதி
üகிலவுதியு ராயனால் யூதேயா தேசத்திற்கு தேசாதிபதியாக நியமிக்கப்பட்டான்.
üபவுலை 2வருடம் சிறையில் வைத்து அவனிடம் லஞ்சம் பெற நினைத்தான்(அப் 23,24).
üஏரோது அகிரிப்பாவின் மகள் துருசில்லாவின் கணவன்.
பொர்கியு பெஸ்து (கி.பி60-62) தேசாதிபதி
üநேரோ(Nero)ராயனால் யூதேயா தேசத்திற்கு தேசாதிபதியாக நியமிக்கப்பட்டான்
üபேலிக்ஸ் என்பவனுக்கு பின் வந்தவன்(அப் 24:2)
üபவுலின் சங்கதியை அகிரிப்பா2, பெர்னீகேயாள் என்பவர்களின் முன்
விசாரித்தான்(அப் 25:14)
üபவுல் ராயனுக்கு அப்பீல்(அபயமிட்டபடியால்) செய்தபடியால் பவுலை
ரோமபுரிக்கு அனுப்பிவைத்தான்.
தேசாதிபதிகள் மற்றும் கால்பங்கு தேசாதிபதிகள்
ரோம பேரரசர்கள்(சக்கரவர்திகள்)
1.அந்திப்பார்தோர் கி.மு47
1.அகஸ்து ராயன் கி.மு27-கி.பி14 (லூக் 2:1)
2.மகா ஏரோது கி.மு33
3.ஏரோது அந்திப்பா கி.பி 4-39(கால் பங்கு தேசாதிபதி),
பிலாத்து
(தேசாதிபதி)
கி.பி 25
2.திபேரியுராயன் கி.பி 14-37(லூக் 3:1)
4.ஏரோது அகிரிப்பா1 கி.பி.39-44
ராஜா பட்டம் பெற்றவன்(அப்12:1-23)
3.கலிகுலா ராயன் கி.பி 37-41
5.ஏரோது அகிரிப்பா2 கி.பி 44-96(அப் 25:13-21,22) இவன் நீண்டகாலம் ஆட்சி செய்தான்
பேலிக்ஸ் (தேசாதிபதி)கி.பி 53-60
4.கிலவுதியு ராயன் கி.பி 41-59
பெஸ்து (தேசாதிபதி) கி.பி60-62.
5.நேரோ(Nero) கி.பி 54-68
6.கால்பா கி.பி 68-69
7.ஒத்தோ கி.பி 68-69
8.வெட்டிலியஸ் கி.பி 68-69
9.வெஸ்பாசிய்ன் கி 69-79
10.டைட்டஸ் கி.பி 79-81
11.டொமாஷியன் கி.பி 81-96
12.நெர்வா கி.பி 96-98
e.தற்போதையகலத்தில்இஸ்ரவேல்தேசம்:
1.கி.பி135:தீத்துராயன்ஆட்சிசெய்தகாலத்தில்பர்கோகேபா(போலிமேசியா)என்பவன்தேவாலயம்கட்டமுயற்சிசெய்தான்.
2.அலியாஎன்றரோமசக்ரவர்த்திகாலத்தில்யூதர்கள்கிளர்ச்சியை(உள்நாட்டுப்போர்)ஆரம்பித்தார்கள்.அப்போது6லட்சம்யூதர்கள்கொல்லப்பட்டனர்.மற்றயூதர்கள்சிதறடிக்கப்பட்டனர்.தேவாலயம்இடிக்கப்பட்டுஜுபிடர்ஆலயம்கட்டப்பட்டது.
3.கி.பி326:கான்ஸ்டன்டைன்என்றரோமசக்ரவர்த்தியுத்தத்திற்குப்போகும்போதுசிலுவைக்காட்சியைக்கண்டுகிறிஸ்துவைஏற்றுக்கொண்டுகிறிஸ்தவனானான்.நாட்டுமக்களும்கிறிஸ்தவர்களானார்கள்.புறஜாதிக்கோவில்கள்இடிக்கப்பட்டன.அந்தியோகியா,நோபில்,பட்டணங்கள்,கிராமங்கள்கிறிஸ்தவமாகமாறியது.கிறிஸ்தவஜெபஆலயம்கட்டினான்.ரோம்நாடுமுழுவதையும்கிறிஸ்தவநாடாகஅறிவித்தான்.இதுகிறிஸ்தவர்களின்பொற்காலமாகும்.
4.கி.பி637:முகமதியர்கள்எருசலேமைப்பிடித்துதேவாலயத்தைஇடித்துவிட்டுஓமர்மசூதியைகட்டினர்.அதுஇந்தநாள்வரையிலும்உள்ளது.எருசலேம்முகமதியர்வசம்வந்தது;இவர்களின்ஆட்சிக்காலத்தில்இஸ்ரவேல்நாடுஎன்னும்பெயரேஇல்லாமல்போயிற்று;பாலஸ்தீனதேசமாகமாறியது.
5.கி.பி1917:பிரிட்டிஷ்சாம்ராஜ்யத்தில்பிரிட்டிஷ்தளபதியாகவந்தஜெனரல்ஆலன்பிஎன்பவர்முகமதியரிடமிருந்துஎருசலேமைப்பிடித்தார்.
30ஆண்டுகள்பிரிட்டிஷ்எருசலேமைஆட்சிசெய்தனர்.
6.கி.பி1948ல்யூர்கள்தங்களுக்குஒருநாடுவேண்டும்எனகேட்டனர்.பிரிட்டிஷ்அரசாங்கம்இஸ்ரவேல்நாட்டைஉருவாக்கி,இஸ்ரவேல்ஜோர்தான்எனபிரித்துக்கொடுத்தார்கள்.உலகெங்கும்சிதறியிருந்தயூதர்கள்மறுபடியும்வந்தனர்.தேவாலயம்இருந்தஇடமாகியஎருசலேம்ஜோர்தானில்இருந்தது.பின்புஇஸ்ரவேலர்6நாள்யுத்தம்செய்துஎருசலேமைத்தங்கள்வசமாக்கினார்கள்.தற்போதுஎருசலேம்இஸ்ரவேல்நாட்டில்உள்ளது.ஆனால்எருசலேமில்தேவாலயம்இருந்தஇடத்தில்தற்போதுமசூதிஉள்ளது.இஸ்ரவேலர்அதைஇடித்துவிட்டுஅங்குதேவாலயம்கட்டமுயற்சிஎடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.இப்பொழுதுஇஸ்ரவேல்தேசத்தில்யூதர்கள்,முகமதியர்கள்வாழுகின்றனர்.இதில்தற்சமயம்இரட்சிக்கப்பட்டகிறிஸ்தவர்கள்சுமார்3%தான்இருக்கின்றனர்
என்றுஅறியப்படுகிறது.
முற்பிதாக்கள்மற்றும்இராஜாக்கள்காலம்
பெயர்கள்
காலம்கி.மு
ஆயுசுநாட்கள்
ஆதாம்
3900-2969
930வருடங்கள்
சேத்
3769-2857
912வருடங்கள்
ஏனோஸ்
3664-2759
905வருடங்கள்
கேனான்
3574-2664
910வருடங்கள்
மகலாலெயேல்
3504-2609
895வருடங்கள்
யாரேத்
3439-2477
962வருடங்கள்
ஏனோக்கு
3277-2912
365வருடங்கள்
ஏனோக்கு(3277-2912) 365வருடம்உயிரோடுஇருந்தான்:
A.300வருடம்தேவனோடேசஞ்சரித்தான்ஆதி5:22.
B.மரணத்தைக்காணாமல்எடுத்துக்கொள்ளப்பட்டான்
C.நியாயத்தீர்ப்பைக்குறித்துமுதல்முதல்தீர்க்கதரிசனம்உரைத்தான்யூதா14,15.
D.இவன்ஆதாமுக்குஏழாம்தலைமுறை.
மெத்துசாலா(3212-2243) 969வருடம்உயிரோடுஇருந்தான்:
A.உலகிலேயேஅதிகமானவயதுவரைவாழ்ந்தவன்.
B.ஜலப்பிரளயம்வரும்போதுவயது969;ஜலப்பிரளயத்தில்இறந்தான்.
லாமேக்கு(3025-2248) 777வருடம்உயிரோடுஇருந்தான்,
நோவா(2843-1893) 950வருடம்உயிரோடுஇருந்தான்:
A.நோவாதேவனோடேசஞ்சரித்தான்.
B.நோவாகாலத்தில்ஜலப்பிரவாகம்வந்தது.
C.நோவாவும்,அவன்மனைவியும்,மூன்றுகுமாரரும்அவர்களுடையமனைவிகளும்காக்கப்பட்டனர்.நோவாபிள்ளைகள்பெயர்காம்,சேம்,யாப்பெத்,
சேம்(2341-1741) 600வருடம்உயிரோடுஇருந்தான்:
ஆபிரகாம்மரிக்கும்போது565வயதோடுவாழ்ந்துகொண்டிருந்தான்.
ஏபேர்(2176-1712) 464வருடம்உயிரோடுஇருந்தான்:
ஆபிரகாம்மரிக்கும்போதுஏபேர்400வயதோடுஉயிர்வாழ்ந்துகொண்டிருந்தான்.
பேலேகு(2142-1903) 239வருடம்உயிரோடுஇருந்தான்:
A.இவன்காலத்தில்பூமிபகுக்கப்பட்டது.
B.பாபேல்கோபுரம்கட்டப்பட்டது.
C.பாஷைகள்பிரிக்கப்பட்டது.
D.ஏபேரின்மகன்ஆதி11:16.
தேராகு(2021-1816) 205வருடம்உயிரோடுஇருந்தான்:
இவன்ஆபிரகாமின்தகப்பன்.கானானுக்குப்போகப்புறப்பட்டான்.ஆரானிலேமரித்தான்.
ஆபிரகாம்(1951-1776) 175வருடம்உயிரோடுஇருந்தான்:
ஆபிரகாமுக்கு58வயதாயிருக்கும்போதுநோவாமரித்தார்.
View Original Image
யாக்கோபின்சந்ததியார்70பேர்எகிப்துக்குச்சென்றார்கள்.யோசேப்புஎகிப்துதேசம்முழுமைக்கும்அதிகாரியாகஇருந்தபோதுஇஸ்ரவேலர்மிகுந்தசெல்வாக்குடன்இருந்தார்கள்.யோசேப்புமரித்தபின்இஸ்ரவேல்கோத்திரத்தார்400வருடங்கள்அடிமைகளாகஇருந்தனர்.தேவன்மோசேயைதெரிந்துகொண்டுஇஸ்ரவேலரைஅடிமைத்தனத்திலிருந்துமீட்டுக்கொண்டுவந்தார்.மோசேயின்தலைமையில்சுமார்25லட்சம்பேர்எகிப்திலிருந்துபுறப்பட்டுவந்தனர்.புருசர்கள்மாத்திரம்6லட்சம்பேர்கள்.
மோசே:(1526-1406) 120வருடம்உயிரோடுஇருந்தான்;
இவர்லேவிகோத்திரத்தைச்சேர்ந்தவர்.முதல்40வருடம்பார்வோன்அரண்மனையில்வாழ்ந்தார்.
40வருடம்மீதியான்தேசத்தில்ஆடுமேய்க்கிறவனாகஇருந்தார்.
40வருடம்இஸ்ரவேல்ஜனங்களைஎகிப்தில்இருந்துவிடுதலையாக்கிகானானுக்குஅழைத்துச்சென்றார்.தேவனிடமிருந்து10கட்டளைகளைப்பெற்றவர்;நியாயப்பிரமாணங்களைபெற்றவரும்இவரே;வேதத்தில்முதல்5ஆகமங்களைஎழுதியவர்இவரே.
யோசுவா(1484-1374) 110வருடம்உயிரோடுஇருந்தார்,
மோசேகானான்தேசத்தைச்சென்றடையவில்லை,வழியிலேமரித்தான்.மோசேயின்வேலைக்காரனாகஇருந்தயோசுவாவை,இஸ்ரவேல்ஜனங்களைவழிநடத்திச்செல்லும்படிதேவன்தெரிந்துகொண்டார்.யோசுவாகானான்தேசத்திற்குஜனங்களைநடத்திச்சென்றுதேசத்தைஜனங்களுக்குபங்கிட்டுக்கொடுத்தார்.யோசுவாமரித்தபின்இஸ்ரவேலர்தேவனைவிட்டுசோரம்போய்அந்நியதேவர்களைவணங்கும்படிசென்றபோதெல்லாம்அருகிலும்சுற்றிலும்இருந்தராஜாக்களகையில்அவர்களைஒப்புக்கொடுத்தார்.அப்பொழுதுஇஸ்ரவேலரைஇரட்சிக்கும்படிதேசத்தில்தேவன்நியாதிபதிகளைஏற்படுத்தினார்.
இனி நடக்க வேண்டிய சம்பவங்கள்
****பரிசுத்தவான்கள் எடுத்துக் கொள்ளப்படுதல்
இயேசு கிறிஸ்துவின் மத்திய ஆகாய வருகையில் லட்சோப லட்சம் உத்தம கிறிஸ்தவ
விசுவாசிகள் திடீரென்று மாயமாய் மறைந்து இவ்வுலகத்தை விட்டு எடுத்துக்
கொள்ளப்படுவார்கள்.
"ஏனெனில் கர்த்தர்தாமே ஆரவாரத்தோடும் பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ
எக்களத்தோடும் இறங்கி வருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மறித்தவர்கள்
முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும்
கர்த்தருக்கு எதிர்கொண்டு போக, மேகங்கள் மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில்
எடுத்துக்கொள்ளப்பட்டு இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட
இருப்போம்."-1 தெசலோனிக்கியர் 4:16,17
1கொரி 15:51,53,54 இவ்வசனங்கள் விசுவாசிகள் இப்பொழுது இருக்கிற உடலோடு
போகமாட்டார்கள்; மறுரூபமாகி விண்ணக உடல் உண்டாகி மேலோகத்துக்கு எடுததுக்
கொள்ளப்படுவார்கள் என்று விளக்குகிறது. இது எப்படி நிகழும் என்று
சந்தேகப்படுபவர்கள் 1கொரிந்தியர் 15ம் அதிகாரம்முழுவதையும் படித்து
தியானிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
(அதற்கு மரியாள் தேவ தூதனை நோக்கி: இது எப்படியாகும் ? புருஷனை அறியேனே என்றாள்.
தேவ தூதன் அவளுக்குப் பிரிதியுத்தரமாக பரிசுத்தஆவி உன்மேல் வரும்;
உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும்
பரிசுத்தமுள்ளது 'தேவனுடைய குமாரன் என்னப்படும்'-லூக்கா 1-:34 ,35,)
புருஷனை அறியேனே என்று கேட்ட மரியாள் என்ற கன்னியின் வயிற்றில் பரிசுத்த
ஆவியினால் கருவுருவாகி இயேசு கிறிஸ்து பிறந்தார்.
(அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து நான்
கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மொய்யோ என்று சொல்வானேன்? கர்த்தரால்
ஆகாத காரியம் உண்டோ? உற்பவ காலகட்டத்தில் உன்னிடத்திற்கு திரும்ப
வருவேன். அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான்
என்றார்.ஆதி.18:13-15) உயிர்த்தெழுதல் என்பதுதான் கிறிஸ்தவத்தின்
மாபெரும் நம்பிக்கையாகும். ஆகையால் சந்தேகப் பேர்வழி தோமாபோல் இல்லாமல்
இந்த வாக்குத்தத்தத்தைக் குறித்து ஆவலோடு விசுவாசத்தோடு காத்திருப்போம்.
இதைப்பற்றிய பலவித விளக்கங்கள் அந்நாளில் விஞ்ஞானிகளால் அறிவிக்கப்படும்.
விண்வெளியிலிருந்து மறைபொருளான ஒரு பலாத்கார உட்புகுதல் ஏற்பட்டு,
இம்மனிதரை ஆவியாக மாற்றி கடத்திப் போய்விட்டது போன்ற பல விளக்கங்களை
அவர்கள் கூறுவர்.
மெய்யான காரணமோ தள்ளப்பட்டு பரிகாசத்திற்கு உள்ளாகும். காரணமென்னவெனில்
எல்லா கிறிஸ்தவர்களும் எடுத்துக் கொள்ளப்படமாட்டார்கள்.மாய்மாலமற்ற,
விசுவாசமுள்ள, சத்தியத்தை அறிகிற அறிவு இருக்கிற உத்தம கிறிஸ்தவ
விசுவாசிகளடங்கிய ஒரு கூட்டத்தார் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.
கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகிற பெருங்கூட்டத்தார்
கைவிடப்படுவதினாலும், வீட்டுக்குத் தெரியாமல் இயேசு கிறிஸ்துவை
விசுவாசித்து ஞானஸ்நானம் எடுத்து இரகசியமாக ஆராதனைக்குச் செல்கிற மற்ற
மதத்திலுள்ள ஒருசில ஆரம்பகால விசுவாசிகளும் எடுத்துக் கொள்ளப்படுவதினால்
இது ஒரு மத ரீதியிலான எடுத்துக் கொள்ளப்படுதல் என்று சொல்ல முடியாது.
எனவே இந்த நிகழ்ச்சி அனேகரால் பரிகசிகசிக்கப்படும். மேலும் எடுத்துக்
கொள்ளப்பட்டவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்று கூட இவ்வுலகத்தில்
கைவிடப்பட்டவர்கள் கூறலாம். ஏனெனில் ஆதியாகமம் 19ம் அதிகாரத்தில் சோதோம்,
கொமோரோ நகரங்கள் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் அழிக்கப்படும்
சம்பவத்தை நாம் வாசிக்கிறோம். 14வது வசனத்தில் லோத்து தன்
மருமகன்மார்களோடே பேசி: நீங்கள் எழுந்து இந்த இடத்தை விட்டு
பறப்படுங்கள்; கர்த்தர் இந்த பட்டணத்தை அழிக்கப் போகிறார் என்றான்.
அவனுடைய மருமக்கள்மாரின் பார்வைக்கு அவன்(லோத்து) பரியாசம் பண்ணுகிறதாகக்
கண்டதுஎன்று வாசிக்கிறோம்.
இந்த நிகழ்ச்சிப் பற்றின முன்னறிவிப்பு விசுவாசியாதவர்களுக்கு
பரியாசமாகத்தான் தோன்றும் என்பதில் நாம் ஐயம் கொள்ள வேண்டிய தேவையில்லை.
இயேசுகிறிஸ்து சீக்கிரத்தில் வரப்போகிறார் என்று நாம் ஓங்கி, உரக்கச்
சத்தம் போட்டால் ரோட்டில் போவோர், வருவோர் நம்மை நமட்டுச் சிரிப்போடு
பார்த்துவிட்டு செல்கிறார்கள். சிலர் இயேசு கிறிஸ்து எப்பொழுது
வருகிறார், பஸ்ஸில் வருகிறாரா, காரில் வருகிறாரா, அல்லது ஏரோபிளேனில்
வருகிறாரா என்று நம்மை பரியாசம் செய்கின்றனர். ஒருசில
மேடைப்பேச்சாளர்கள்"இயேசு கிறிஸ்து வருகிறாராமே வந்தால் வரட்டுமே.
மறுபடியும் பிடித்து சிலுவையிலறைந்து விடுவோம்"என்று பேசுகிறார்கள்.
பெரம்பலூரில் அரசியல் கூட்டத்தில் ஒருவர் பேசும்போது"இயேசு கிறிஸ்து
வந்தால் என்ன ! 63 நாயன்மார்களோடு 64வது நாயன்மாராக வைத்துக்
கொள்வோம்"என்று பேசினார்.இப்படி பரிகாசம் பண்ணுவது இக்காலத்தில்
மிகுதியாயிருக்கிறது.
இந்த நிகழ்ச்சி நடைபெறும்போது ஆகாய விமானம், இரயில், கப்பல், லாரிகள்,
பேருந்துகள், கார்கள் போன்றவற்றில் ஓட்டுநர்கள் விசுவாசிகளாக இருந்தால்
அவர்கள் எடுத்துக் கொள்ளப் படுவார்கள்; இதனால் ஓட்டுநர்கள் இல்லாததால்
ஏராளமான விபத்துகள் உண்டாகும்; ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கலாம்;நீங்கள்
இந்த கர்த்தரின் வாக்குத்தத்தத்தை நம்பவில்லையென்றால் லட்சோப லட்சம்
மக்கள் மாயம் என்ற தலைப்புச் செய்தியுடன் தினமலர், தினத்தந்தி, THE HINDU
பேப்பரில் என்றாவது ஒருநாள் வந்தாகும். அந்த நாள் விரைந்து வந்து
கொண்டிருக்கிறது; காலம் கடந்தபின் செய்தித்தாளை படித்து கிறிஸ்துவை
விசுவாசிப்பதில் பிரயோஜனமாகுமா? ஆகவே இந்த அற்புதமான நிகழ்ச்சிக்கு
நீங்களும் கிறிஸ்துவை விசுவாசித்து தயாராகும்படி அன்புடன் கேட்டுக்
கொள்கிறேன்.
அந்தி கிறிஸ்துவின் ஆட்சிப்பீடம் | THE KINGDOM OF THE ANTICHRIST
ஐரோப்பிய யூனியனின் பாராளுமன்ற அவை(europian parliment) அக்காலத்தில்
கட்டிமுடிக்கப்படாத நிலையில் கடவுளால் அழிக்கப்பட்ட
பாபிலோன் கோபுரம் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதில் 751 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. முக்கிய தகவல் என்னவென்றால்
666ஆம் எண்ணுள்ள நாற்காலி மட்டும் காலியாக இருக்கிறது. அப்பணியிடம்
நிரப்பப்படவில்ல. 2005ம் ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய ஐக்கிய மாநாட்டில்
அரியணை ஏறியவர்களின் பின்னால் அமைக்கப்பெற்ற தலைப்புப் பதாகையில் மூன்று
ஒரே மாதிரியான தலைப்புள்ள பதாகைகளை ஒட்டியுள்ளனர். இவைகள் அந்தி
கிறிஸ்துவின் வருகைக்கு முன் ஏற்பாடுகளாகவே சுட்டிக்காட்டலாம்.
ஐரோப்பிய குடியரசின் கமிட்டி வளாகத்தில் மிருகத்தின் மேல் ஏறியுள்ள
ஸ்திரீயின் உருவம் நிறுவப்பட்டுள்ளது.
வெளி.17:7,9ம்வசனங்களில் சொல்லப்பட்டுள்ள ஏழு தலைகலுள்ள மிருகத்தின்மேல்
ஸ்திரீ உட்கார்ந்திருக்கிறதாக வசனம் விளக்குகிறது. ஏழு மலைகலுள்ள நகரம்
யாதெனில் அது ரோம் நகரமாகும்; பாபிலோன் என்ற வார்த்தையின் பொருள்
ரோம்(ரோம சாம்ராஜ்யம்)மற்றும் இவ்வுலகத்தைக் குறிக்கும்.
****உலகில் அந்தி கிறிஸ்துவின் ஏழு ஆண்டு ஆட்சி
உலக நாடுகள் அனைத்தும் இன்று மேற்கத்திய நாடுகளையும் அவற்றின்
அமைப்புகளையும் எதிர்பார்த்து ஏங்கி நிற்கின்றன. உலக வங்கி, அனைத்துலக
நிதியம் இவற்றை எதிர்பார்த்தே தம் செயல்திட்டங்களை வகுக்கும் அவல
நிலையிலுள்ளன. உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கை இவற்றின் பொருளாதாரக்
கொள்கைகளை முடி முதல் அடிவரை பாதிக்கிறது. இதனால் நாட்டின் பொருளாதாரக்
கொள்கை, நாட்டு அமைப்புகளால் நிர்ணயிக்கப்படாமல் வெளியிலிருந்து நாட்டு
மக்கள் மீது சுமத்தப்படுகின்றன. இப்பொருளாதாரச்சார்பு அரசியல் உலகத்தில்
முக்கியமாக சர்வதேச அரசியலில் வளரும் நாடுகளின் கைகளை கட்டிப்போடுகின்றன.

1995 ஜனவரியில் 117 நாடுகளால் கையெழுத்திடப்பட்டு
ஏற்றுக்கொள்ளப்பட்டுGATT ஒப்பந்தம்நிறைவேறியது. முதலில்முரண்டுபிடித்த
இந்தியா உலகம் போற போக்கு போனால்தான் கொஞ்சமாவது பிழைக்க முடியும்
என்றெண்ணி வேறு வழியின்றி GATT ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.GATT
ஒப்பந்தத்தைத் தொடர்ந்து WTO என்று சொல்லக் கூடியWorld Trade
Organisationஎன்ற அமைப்பு ஐ.நா.வால் உருவாக்கப்பட்டது. இன்று WTOதான் உலக
பொருளாதார மையமாக இருக்கிறது. மத, இன, தேசிய பேதங்கள் மறைந்து உலக உணர்வு
ஏற்படவேண்டுமென்று இன்று எங்கும் பிரச்சாரங்கள் செய்யப் படுகின்றன. இன்று
நாட்டரசுகள் இருப்பதுபோல, உலக அரசு ஒன்று உருவாகி நாமனைவரும் உலகமக்கள்
எனக் கருதும் போக்கு வருங்கால உலகில் வளர்ந்துவரும் என்றும்,
அப்படியிருந்தால்தான் இன்றைய பிரச்சனைகளுக்கும், பிற்போக்கு நிலைக்கும்
தீர்வாக விளங்கும் என்றும் இன்றைய பத்திரிக்கைகளின் செய்திகள்
கூறுகின்றன.
உலக வாணிபக் கழகம், உலக வங்கி, உலக வங்கி, உலக நீதிமன்றம், உலக
தொழிலாளர் நிறுவனம், உலக வானிலை அமைப்பு,உலக மதிநுட்ப சொத்து சார்ந்த
அமைப்பு(WIPO)இப்படி உலக அமைப்புகள் பல தோன்றியிருப்பதை'உலக அரசு'என்ற
பெயரால் இந்து நாளிதழ் வர்ணித்துள்ளது. -The Hindu 28.04.1994. இப்படி
உலக அரசு அமைந்தால் அதற்கு வித்திட்டவர் என்ற பெருமை மறைந்த
விஞ்ஞானிடாக்டர்.ஆல்பர்ட் ஐன்ஸ்டைனையேச் சாரும்.ஜனநாயக உலக அரசுஒன்றை
நிறுவ வேண்டும் என்பது அவர் கருத்தாகும்.1948ல் உலக சமாதான அறிஞர்
மாநாட்டின் அமைப்புக் குழுவுக்கு ஐன்ஸ்டைன் ஒரு செய்தியனுப்பினார்.
அந்தக் குழு அதை ஏற்றுக் கொள்ளவில்லை. போலந்தில்'ராக்லால்'என்னுமிடத்தில்
கூடிய மாநாடு அது.
அவர் அனுப்பிய செய்தியின் ஒரு பகுதி வருமாறு:
"நாடுகளுக்கு மேற்பட்ட அமைப்பு ஒன்றிற்கு மட்டும் ஆயுதங்களை உற்பத்தி
செய்யவும், வைத்திருக்கவும் அதிகாரம் இருந்தால் மக்கள் குலம்
அழிக்கப்படாமலும் ஒழிக்கப்படாமலும் இருக்க முடியும்".
தீவிரவாதத்தினால் பாதிக்கப்படுகிற இன்றைய உலக சமுதாயம் மேற்கண்ட
ஐன்ஸ்டைனின் கூற்றைக் குறித்து யோசிக்க தொடங்கிவிட்டது.'ஒரே உலக
இராணுவம்'என்று இப்போதே பல அரசியல் தலைவர்கள் சப்தம் போட
ஆரம்பித்துவிட்டனர்."உலக சமாதானம்"என்று கத்தோலிக்க போப்.ஜான்பால்
அடிக்கடி தன் சுற்றுப் பிரயாணங்களில் கூறிக் கொண்டு வந்தார். U.N.O.வின்
முன்னால் பொதுச்செயலாளர் யூதாண்ட் அணு ஆயுத அழிவினின்று உலகை காப்பாற்ற
வேண்டுமென்றால் ஒரே உலக தலைவன், உலக அரசு அமைய வேண்டுமென்று கூறினார்.
இப்படி உலக அரசு அமைந்தால் தன் அரசாங்கத்தின் முழு பொருப்பையும்
ஒப்படைக்கத்தயார் என்று இங்கிலாந்து பாராளுமன்றம்16.05.1960ல்
அறிவித்தது. மற்ற 9 நாடுகளும் இதை ஆதரித்தன. ஐரோப்பிய யூனியனின் முன்னால்
தலைவர்'ஹென்றி ஸ்பார்க்'பொருளாதாரத்தில் செழிப்பையும், சமுதாயத்தில்
சமாதானத்தையும் கொண்டுவரக்கூடிய ஒரு தலைவன், ஒரே தலைவன் எங்களுக்கு
வேண்டும்; அந்தத் தலைவன் தேவனாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப் போகிறோம்;
அல்லது சாத்தானாக இருந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அப்படிப்பட்ட
தலைவன் எழும்பி வரட்டும், அவனுக்காக காத்திருக்கிறோம் என்று கூறினார்.
ஒரே உலக அரசு, ஒரே பண ஒழுங்குமுறை, ஒரே உலக இராணுவம், ஒரே பொருளாதாரக்
கொள்கை, ஒரே உலகச்சட்டங்கள் இவ்வாறாக உலக அரசு அமையும் காலம்
வெகுதொலைவில் இல்லை என்பதை இன்றைக்கு நடக்கும் சம்பவங்களைக் கொண்டு நாம்
அறிந்துகொள்ளலாம். ஏற்கனவே ஒரு குட்டி உலக அரசாகஐரோப்பிய யூனியன்இயங்கிக்
கொண்டிருக்கிறது. அமெரிக்கா,கனடா, இரஷ்யா, ஜப்பான்,சீனா, ஆகிய நாடுகள்
ஐரோப்பிய யூனியனின் நெருங்கிய நட்பு நாடுகள் என்ற அந்தஸ்தில்
இருக்கின்றன. இந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைய உள்ளன. இந்த
ஐரோப்பிய யூனியனுடன் உலக நாடுகள் தஞ்சமடையும்போது தானாகவே உலக அரசு
அமைந்துவிடும். அப்படி அமைந்துவிட்டால் அதன் சர்வாதிகார தலைவன்அந்திக்
கிறிஸ்துஎன்பதில் ஆச்சரியப்படத் தேவையில்லை. இன்று அமெரிக்காவின்
டாலரைவிட யூரோவின் மதிப்பு 10ரூபாய் கூடுதலாக உள்ளது.
ஐரோப்பிய யூனியனின் அதாவது உலக அரசின் தலைவனாகிய அந்திக் கிறிஸ்து யூத
இனத்தைச் சார்ந்தவனாக இருக்கக் கூடும் என்று பலராலும் நம்பப்படுகிறது.
அந்திக் கிறிஸ்துவின் எண்666ஆகும். சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த
ஆங்கிலம் மற்றும் தமிழ் சினிமாப்படங்களில் 666 என்ற எண்ணை வைத்து
உருவாக்கி வசூலை அள்ளினார்கள். இன்றைய தமிழக பொதுமக்களுக்கு 666 என்றால்
பேய் என்ற விபரம் சினிமாப் படங்கள் மூலமாக தெளிவாக அறிந்து
வைத்திருக்கிறார்கள். பட்டிதொட்டியெல்லாம் இந்த 666 எண் இப்பொழுது
பிரபலமாகிவிட்டது. அமெரிக்காவில்LEFT BEHIND PART1, PART2என்ற சினிமா
படம் தயாரித்து வெளியிடப்பட்டு உள்ளது. அது இப்போது வெளிநாடுகளில் பல
சினிமா தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதில்வெளிப்படுத்தின
விசேஷத்திலும், சுவிசேஷங்களிலும், தானியேல், ஏசாயா தீர்க்கதரிசன
புஸ்தகங்களில் எழுதப்பட்டுள்ளதின்படி அந்தி கிறிஸ்துவின் வெளிப்படுதல்
எப்படியிருக்கும் என்பதை விளக்கியுள்ளார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு மாலை மலர், மாலை முரசு பேப்பரில் 666 எண்
தலையில் காணப்பட்ட ஒரு குழந்தை அமெரிக்காவில் காணப்பட்டதாக மக்கள்
ஆச்சரியப்படும் வகையில் செய்திகளை வெளியிட்டது.
1)உலக வங்கியின் சங்கேத எண் 666.
2)அமெரிக்க ஐக்கிய நாட்டு ஊழியர் அட்டை எண் 666.
3)அமெரிக்க கடன் அட்டை எண் 666ல் தொடங்குகிறது.
4)இஸ்ரேல் நாட்டிலுள்ள அரேபியருக்குச் சொந்தமான எல்லா பதிவு எண்களும்
666-ல் தொடங்குகிறது.
5)இஸ்ரேல் நாட்டின் அயல்நாட்டு தொலேபேசி எண் 666.
6)எருசலேம் நகராட்சியின் தொலைப்பேசி எண் 666-666 என்று 1977ம் ஆண்டு மாற்றப்பட்டது.
7)இன்டர்நெட் மூலம் செய்தியனுப்புவோர் முதலில் மூன்று WWW-வை
உபயோகப்படுத்த வேண்டும். எபிரேய மொழியில் W என்பது 6 என்ற எண்ணுக்கு
குறியீடு. ஆகWWW(World Wide Web)என்றால்666என்று வருகிறது.
8)இஸ்லாமியரின் திருக்குரானின் மொத்த வசனங்கள்6666.
9)Computer எனபதை அதன் A,B,C வரிசைப்படி 6-ஆல் பெருக்கினால் கிடைக்கும்
கூட்டுத்தொகை 666 ஆகும்.
A=6; B=12; C=18; D=24; E=30; F=36; G=42; H=48; I=54;
J=60; K=66; L=72; M=78; N=84; O=90; P=96; Q=102; R=108
S=114; T=120; U=126; V=132; W138; X144;
Y=150;Z=156.COMPUTER=18+90+78+96+126+120+30+108=666
போப்பாண்டவருடைய தலையில் வைக்கப்படுகிற கிரீடத்தில் பதிக்கப்பட்டிருக்கிற
எழுத்துக்களை ரோம எண்களின்படி கூட்டிப்பார்த்தால் 666 என்ற எண் வருகிறது.
போப்பாண்டவருடைய கிரீடத்தில் பதிக்கப்பட்டிருக்கிற வாக்கியமாவது:VICARIUS
FILII DEIஎன்பதே; இது'தேவ குமாரனுக்குப் பதிலாள்'என்னும் இலத்தீன் சொல்
ஆகும்
V=5
I=1
C=100
A=0
R=0
I=1
U=5
S=0
F=0
I=1
L=50
I=1
I=1
D=500
E=0
I=1
மொத்தம்=666
இன்றைக்கு 666 என்ற எண் ராசியான எண்ணாக பலராலும் கருதப்படுகிறது.
அதனால்தான் 6666 என்ற எண்களை தங்கள் வாகனங்களுக்கு வைக்கிறார்கள்.
இவ்வாறாக 666 எண் என்பது இப்போது எல்லோராலும் சர்வ சாதாரணமாக
விரும்பப்படுகிறது. மேற்கண்ட 666 எண்கள் எல்லாம் அந்திகிறிஸ்து வர ஒரு
முன்னேற்பாடுகள் எனலாம்.
இப்பொழுது கிரெடிட் கார்டுகளும், பணமும் சேர்ந்து பயன்படுத்தக்கூடிய
காலத்தில் இருக்கிறோம். ஆனால் இனி வரும் காலத்தில் பணப்புழக்கம்
முற்றிலும் போய்விடும்; பணம் கொள்ளையடிக்கப் படுவது, கள்ள நோட்டு
அச்சடிப்பு, கருப்பு பணம் பதுக்கி வைக்கப்படுவது ஹவாலா மோசடி போன்ற
சிக்கல்களை தீர்ப்பதற்கு ஒரு பண ஒழுங்குமுறை அவசியம்|கரன்ஸி (ரூபாய்)
நோட்டுகளை கையில் எடுத்துச் செல்வதால் ஏற்படும் பிரச்சனைகளுக்குப்
பரிகாரமாக அறிமுகமானதுதான் கிரெடிட் கார்டு(Credit Card) இந்த
எலக்ட்ரானிக் அட்டைகளை பயன்படுத்துவதிலும் பல இடையூறுகள் உருவாகின:
1)தொலைந்துவிடக்கூடியது
2)திருடப்பட வழியுண்டு
3)உடையக்கூடியது
4)தவறானவர்கள் பயன்படுத்தும் ஆபத்து
5)அவ்வப்போது புதுப்பிக்க வேண்டியுள்ளது
இதற்கு மாற்றுவழி Bio Chips:
மைக்ரோ சிப்ஸ்(Micro Chips) என்ற மிகச்சிறிய கருவியில் ஒருவருடைய சகல
விபரங்களையும் பதிவு செய்துவிடுதல்; டிரான்ஸ்பாண்டர் என்ற நுண்ணிய
கருவியின் மூலம் இதில் பதிவு செய்யப்பட்டதை வாசிக்கலாம். இதை
இயக்குவதற்கு மிகச்சிறிய லித்தியம் பேட்டரியையும் இணைத்து Bio Chips என்ற
உலோக மாத்திரைக்குள் அடக்கி வைத்து விடுகிறார்கள். இந்த பேட்டரி மனித
உடலிலுள்ள வெப்பத்தின் மூலம் ரீசார்ஜ் ஆகிக்கொண்டே இருக்கும். இந்த Bio
Chips அளவு ஒரு அரிசியின் அளவுதான் இருக்கும். இதை உடலில்
பதித்துவிட்டால் மேலே கூறப்பட்ட எந்த பிரச்சனையும் ஏற்படாது. அதாவது இது
தொலைந்துவிடாது; யாரும் திருட முடியாது; தவறானவர்கள் பயன்படுத்த வழி
இல்லை.
உடலில் எந்த இடத்தில் இதை பதிப்பது?
இந்த Bio-Chipஐ உடலில் எந்த இடத்தில் பதிய வைப்பது பொருத்தமாக இருக்கும்
என ஆராய நிபுணர் குழு நியமிக்கப்பட்டது.இதை ஆராய்ச்சி செய்து அறிக்கை
தாக்கல் செய்ய சுமார் 1.5 மில்லியன் டாலர் செலவானது(சுமார் 7கோடி ரூபாய்)
ஆய்வின் கண்டுபிடித்தது என்ன? உடலில் இரண்டு இடத்தை தேர்ந்தெடுத்து அங்கே
இதை வைக்க பொருத்தமானது என்று முடிவு செய்யப்பட்டது:
1)நெற்றி
2)வலது கையின் வெளிப்புறம்
இது வேதாகமத்தின் தீர்க்கதரிசனத்தை மெய்ப்பிக்கிறது. அரிசி அளவுள்ள அந்த
சிறு கருவியியை நெற்றியிலோ, வலது கையிலோ பதித்துவிட்டால் இதை யாரும்
எடுக்க முடியாது; அப்படியே யாரும் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்ற
முயன்றால் Bio-Chips(உலோக மாத்திரை) உலோக மாத்திரை உடைந்துவிடும்;
அதிலிருந்து வெளியேறும் ரசாயனப் பொருள் சம்பந்தப்பட்டவர்களின் உடலில்
பாதிப்பை உண்டுபண்ணும். அதிலிருந்து வெளியேறும் மைக்ரோ அலை மூலம்மத்திய
அலுவலகத்திற்கு (GPS-Global Positioning System)தானாய் செய்தி
சென்றடையும்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை
கண்டறிந்து விரைந்து வந்து நடவடிக்கை எடுப்பார்கள்.
அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர்,
அடிமைகள் இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது, நெற்றிகளிலாவது
ஒரு முத்திரையை பெரும்படிக்கும்,
அந்த முத்திரையையாவது, அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின்
இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும்
விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.-(வெளி 13:16,17)
இதிலே ஞானம் விளங்கும். அந்த மிருகத்தின் இலக்கத்தை புத்தியுடையவன்
கணக்குப் பார்க்கக் கடவன்: அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது.அதினுடைய
இலக்கம் அறுநூற்றறுபத்தாறு(வெளி 13:16-18)
Mondex Smart Card:
இந்த Bio Chips(உலோக மாத்திரை) என்ற சிறிய எலக்ட்ரானிக்கருவியை Mondex
Smart Card என்ற நிறுவனத்திற்காக மோட்டரோலா(Motorola) என்ற கம்பெனி
தயாரிக்கிறது.
Mondex என்ற இந்த நிறுவனத்தின் பிரதிநிதிகளாக 20 நாடுகளில் 250க்கும்
அதிகமான கம்பெனிகள் உலகமெங்கும் இதை விற்பனை செய்து வருகின்றன.
பிரிட்டன், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இஸ்ரேல்,
ஹாங்காய், சீனா, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர்,
தாய்லாந்து, இந்தியா, தைவான், இலங்கை, கோஸ்டரிக்கா, குவாட்டமாலா,
நிகரகுவா, பனாமா, ஹோண்டுராஸ், எல்சால்வடார், பிரேசில் ஆகிய நாடுகள் இந்த
கம்பெனிகளின் பொருட்களை பயன்படுத்துகின்றன.
இந்த Mondex கம்பெனியின் பங்குகளில் 51 சதவிகித பங்குகளை மாஸ்டர்கார்ட்
நிறுவனம் பெற்று Bio-Chipsஐ விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.Mondex
நிறுவனம் வருடத்திற்கு 100 கோடி Bio Chips உற்பத்தி செய்கிறது.Mondex
என்றால் பணம் உன் கையில் என்று பொருள்.
Mon=Monetary
Dex=Dexter=Righthand side
இந்த எலக்ட்ரானிக் அடையாளத்தை தன் உடலில் தரித்தவன் மிருகம் என்று
கூறப்பட்டுள்ள அந்திக்கிறிஸ்துவின் அடையாளத்தை தன் உடலில் பெற்றவன் என்று
பொருள்.இந்த அடையாளத்தை உடலில் பெற்ற ஒருவரும் பரலோகம் செல்லமாட்டார்கள்.
எது எப்படியோ அந்தி கிறிஸ்துவின் நாமத்திற்குரிய 666 என்ற எண் உலகத்தின்
ஒவ்வொரு குடிமகனும் நெற்றியில் அல்லது வலது கையில் தரித்திருக்க வேண்டும்
என்பது அந்தி கிறிஸ்துவின் கட்டளையாக இருக்கும் என்றும், அந்த எண் அல்லது
அந்தி கிறிஸ்துவின் முத்திரை பெறாதவர் ஒரு பொருளை விற்கவோ, வாங்கவோ
முடியாது என்றும் வெளி 13:17ல் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை
வணங்காத யாவரையும் கொலை செய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு
ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவம்
கொடுக்கப்பட்டது.(வெளிப்படுத்தின விசேஷம் 14:15)
மேற்கண்ட வசனத்தை உற்றுநோக்கும்போதுசொரூபம்என்பதுஅந்திக் கிறிஸ்துவின்
டூப்ளிகேஷன்என்பது புலனாகிறது. பொதுவான முறையில்
குழந்தை'குரோமோசோமை'தந்தையிடம் பாதி, தாயிடம் பாதி பெற்றுக்கொள்கிறது.
ஆனால்'குளோனிங்'முறையில் ஓர் செல்லின் உட்கருவின் ஓர் திசுவிலிருந்து
குரோமோசோம் வருகிறது. குளோனிங்-கில் உருவாக்கப்பட்ட சேயும் அதன் தாயை
ஒத்திருக்குமா என்றால் 'ஜெனிடிக்கலி(மரபுப்படி) ஒத்திருக்கும். குளோனிங்
முறையில் மனிதர்களை உருவாக்க முடியும்.'ரிச்சார்ட்'என்பவர் அமெரிக்காவில்
மனித குளோனிங் க்ளினிக்கை முதன்முதலில் திறந்தவராவார். ஆனால் தற்சமயம்
மனித குளோனிங் முறைக்கு அமெரிக்க அரசாங்கம் தடைவிதித்துள்ளது. தடை
விலகும் பட்சத்தில் குளோனிங் முறை மூலம் மனிதர்கள் உருவாக்கப்படலாம்.
அந்திகிறிஸ்துவின் குளோனிங்தான் அந்தி கிறிஸ்துவின் சொரூபம் என்று
கூறப்படுகிறது. அதாவது குளோனிங் முறை மூலம் அந்திக் கிறிஸ்துவின்
டூப்ளிகேஷன் உருவாக்கப்படும்.
எனவே குளோனிங் முறை மூலம் உருவாக்கப்படும் அந்திக் கிறிஸ்துவின்
டூப்ளிகேஷனே சொரூபம் என்று சில பிரசங்கியாளர்கள் கூறுகிறார்கள்.ஆனால்
என்னதான் குளோனிங் மூலம் மனிதனை உருவாக்கினாலும் உருவாக்கப்பட்ட மனிதன்
ஆவி, ஆத்துமா, சரீரம் உள்ள முழு மனிதனாகி விடுகிறான். ஆவி, ஆத்துமா,
சரீரம் உள்ள முழு மனிதனை 'சொரூபம்' சிலை என்று சொல்ல முடியாது. வேதமோ
பேசத்தக்க சொரூபம் என்று கூறுகிறது.இன்று எல்லா
நிலைமைகளிலும்'ரோபோ'பயன்படுகிறது.
ரோபட்டுகள் எனப்படும் எந்திர மனிதனின் உபயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து
வருகிறது. இயந்திர மனிதர்களாகிய இந்த ரோபோக்கள் பேசும், நடக்கும், மனிதன்
போல எல்லாமே செய்யும். இராணுவத்தில் ஆயுதங்கள் தயாரிப்பில் முதற்கொண்டு
வீடுகளில் சகல வீட்டுவேலைகள் செய்வதுவரை சிறுகுழந்தைகளை பள்ளிக்கு
பத்திரமாக கூட்டிச்சென்று கூட்டிவருதல் உட்பட எல்லாவற்றையும் ரோபோக்கள்
சிறப்பாக செய்கின்றன. நிலத்தில் பதிக்கப்பட்டிருக்கிற கன்னி வெடிகளை
அகற்றுதல் ஆகியவற்றில் ரோபோக்களின் பங்கு முக்கியமாகும். ரோபோக்களின்
கால்பந்து போட்டி ஜப்பானில் புகழ் பெற்றதாகும் ரோபோக்கள் தயாரிப்பில்
ஜப்பான் நாடு முன்னிலையில் இருக்கிறது.
இந்த ரோபோக்கள் செயல்படுவதில் 'பேட்டரிகள்' முக்கிய பங்கு வகிக்கின்றன.
குறிப்பிட்ட நேரம்வரை மட்டுமே இயங்கும் சக்தி கொண்ட பேட்டரிகள்
இருப்பதால் ரோபோட்டுகளை நாள்கணக்கில் தொடர்ந்து இயங்க வைக்க முடியாது.
இந்த பிரச்சனைக்கு இங்கிலாந்து விஞ்ஞானிகள் தீர்வு கண்டுள்ளனர். அதாவது
பூச்சிகள் மற்றும் சிறு பறக்கும் உயிரினங்களை தின்று அதன் மூலம்
மின்சக்தி பெற்று இயங்கும் வகையில் புதிய ரோபோட் ஒன்றை
உருவாக்கியுள்ளனர். இதற்குஇகோபாட் 2 (EcoBot 2)என்று
பெயரிட்டுள்ளனர்.இத்தகைய ரோபோட்டுகள் மூலம் மனித இனத்திற்கு
அச்சுறுத்தலாக இருக்கும் பூச்சிகளை அழிக்க முடியும்.அதே நேரத்தில் நீண்ட
நேரம் இயங்கும் வகையில் ரோபோட்டுகளை தயாரிக்கவும் முடியும் என்று
விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அந்திக் கிறிஸ்துவின் உருவ அமைப்பிற்கேற்ப ரோபோக்கள் செய்யப்பட்டு,
ஆங்காங்கே உலகின் பல பகுதிகளில் வைக்கப்பட்டு, மக்கள் அந்த சொரூபத்தை
தெய்வமாக வணங்க கட்டாயப்படுத்தப்படுவார்கள். அப்படி வணங்காத மக்களை அந்த
ரோபோக்களே கொலை செய்யும் என்று கருதப்படுகிறது. வேதம் அந்தி கிறிஸ்துவின்
உருவமுள்ள சிலை பேசும், வணங்காதவர்களை கொலை செய்யும்படியான ஓர் உயிருள்ள
சிலை போன்றிருக்கும் என்று கூறுகிறது. இது ரோபோக்கலாகத்தான் இருக்கக்
கூடும் என்று அனேக வேத பண்டிதர்கள் கருதுகின்றனர்.

ஹிட்லர் ஆட்சிக்கு வரும்முன் உலகப் பெரும் பொருளாதார நெருக்கடி
காணப்பட்டது அந்திக் கிறிஸ்துவின் ஆதிக்கத்திற்கு தொடக்க காலத்திற்கு
முன்னும் உலகலாவிய பெரும் பொருளாதார நெருக்கடி மற்றும் தீவிரவாதம்
இவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் மாபெரும் தலைவனாக ஒருவனுடைய வருகைக்காக
காத்துக்கொண்டு இருப்பார்கள். இவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திச்
செய்யக்கூடிய ஒரு மாயத் தோற்றத்தை உண்டுபண்ணி (அதாவது இன்றைய
அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதிகள் போல) உலக சமுதாயத்திற்கு அந்தி
கிறிஸ்து தன்னை உலக மாபெரும் தலைவனாக காண்பிப்பான். அந்தி கிறிஸ்து
இப்படி மக்கள் தலைவனாக இருந்து பிறகு கொடுரமான உலக சர்வாதிகாரியாய்
மாறுவான்.
இவனது ஆரம்பம் செழிப்பாகவும், சமாதானமாகவும் இருக்கும். பிறகு போகப்போக
பஞ்சம், யுத்தம், நாசம் ஏற்பட்டு கொடூரமானதாய் முடிவடையும். வேத வசனங்களை
ஆராய்ந்து வேத பண்டிதர்கள் இவனது ஆட்சியின் முதல் 3 1/2 வருடங்கள்
உபத்திரவக் காலம் என்றும், பிந்தைய 3 1/2 வருடங்கள் மகா உபத்திரவக் காலம்
என்றும் பிரிக்கிறார்கள். அந்தி கிறிஸ்து பிசாசின் ஒட்டுமொத்த
குணலட்சணங்களையும் உடையவனாய் இருப்பான். பழங்கால ரோம சீஸர்களை மக்கள்
தெய்வமாக வணங்கினர்; தெய்வங்கள் என்று ஏற்றும் கொண்டனர்(கிறிஸ்தவர்கள்
தவிர). இதனால் கிறிஸ்தவர்கள் கொடூரமாய் கொலை செய்யப்பட்டனர்.
ரோமப் பேரரசர்களின் புதுப்பித்தலாக விளங்கும் அந்திக்கிறிஸ்துவும் தன்னை
தெய்வம் என்ற உன்னத நிலையை ஜனங்கள் மத்தியில் நிலைநிறுத்துவான்.
....பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தை பின்பற்றி.....
என்று வெளி 13:3ல் வாசிக்கிறோம். அந்தி கிறிஸ்துவின் ஆரம்பம் மிகவும்
பரிதாபகரமானவனாய் தோன்றி பிறகு எல்லோரும் ஆச்சரியப்படத்தக்க வகையில்
இருந்து கொடூரமானவனாய் முடிவடைவான்.
*****கள்ளத்தீர்க்கதரிசி உலகில் எழும்புதல்:-
பின்பு வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன். அது ஒரு
ஆட்டுக்குட்டிக் கொப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலு
சர்ப்பத்தைப் போல் பேசினது.(வெளிப்படுத்தின விசேஷம் 13:11)
1995ல் கிறிஸ்தவரும், யூதரும், புத்தமதத்தவர்களும், இந்துக்களும்,
கன்பூஷியஸ் மதத்தவரும் சேர்ந்து ஒரு கூட்டம் நடத்தினர். அதில் மாறி, மாறி
வாசிப்பதற்காக சகல மத கிரந்தங்களிலிருந்தும் பகுதிகள்
சேர்க்கப்பட்டிருந்தன; அக்கூட்டம் ஒரு பெரும் வெற்றியாக கருதப்பட்டது.
1986ல் இத்தாலியிலுள்ளஅசிசிஎன்ற இடத்தில்போப் இரண்டாம் ஜான்பால்தலைமையில்
தலாய் லாமா, இந்து மத துறவிகள், புத்தமத பிட்சுகள் உட்பட எல்லா மதத்
தலைவர்களும் ஒன்று கூடினர்.போப் 2ம் ஜான்பால் பேசியபோது தேவனிடத்தில்
சேருவதற்கு அநேக பாதைகள் உண்டு என்று பேசினார்.
சுமார் 400 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரிந்திருக்கிற சபைகளான ரோமன்
கத்தோலிக்கச் சபையும் ஆங்கிலிக்கன் சபையும் இணைந்தால் போப்பு"உலகலாவிய
தலைவராக"இருப்பார் என்று இரு சபைகளின் உயர்மட்டக் குழு1982 மார்ச் 30ல்
இலண்டனில் அறிக்கை வெளியிட்டது. எனவே பிரட்டஸ்டாண்டு பிரிவினை சபைகளும்,
ரோமன் கத்தோலிக்க சபையும் சீக்கிரத்தில் இணைய இருப்பதாக நாம் அறிந்து
கொள்ளலாம்.ஜெப்ரி ஷேடன்என்ற சமூக சேவகர் 10,000 புரட்டஸ்டாண்டு கிறிஸ்தவ
போதகர்களை அவர்களுடைய கிறிஸ்தவ விசுவாசத்தைக் குறித்து இரகசிய பேட்டிக்
கண்டார். இதில்45% பேர் இயேசு கிறிஸ்து தேவன் இல்லை என்று கூறினர்; 80%
பேர் பைபிள் தேவனால் கொடுக்கப்படவில்லை என்றனர்; 36% பேர் இயேசு கிறிஸ்து
உயிர்த்தெழவில்லை என்றனர்.
1960முதல் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் கிறிஸ்தவ விசுவாசம்
குன்றி வருகிறது. ஏராளமானோர் ஆராதனைக்குச் செல்வதில்லை. அனேக கிறிஸ்தவ
சபைகள் உண்மை விசுவாச நெறியினின்று வழுவிவிட்டன.இது எதை
காண்பிக்கிறதென்றால் கிறிஸ்துவின் வருகை விரைவில் இருக்கிறது என்பதை
மட்டும் காட்டாமல் வேதாகம விசுவாசத்தை தவிர்த்துவிட்டு, ஒரே ஐக்கியமுள்ள
பக்தியற்ற கிறிஸ்தவ உலகம் ஒரே தலைமையின் கீழ் ஏற்படும் என்பதையும்
காட்டுகிறது.
1948-ல் கிறிஸ்தவ சபைகளின் பொது சபை என்று உருவாகி1970ல் உலகச் சபைகளின்
பொதுச்சபை என்று மாறிய ஸ்தாபனம் இன்று எல்லா விசுவாசங்களையும்
இணைக்கின்றது. மதங்கள் ஒன்றுபட வேண்டுமென்றால் முதலாவது கிறிஸ்தவ உலகம்
ஒன்றுபட வேண்டும். அதற்குப் பிறகுதான் உலகின் பல மதங்கள் ஒன்றுபட
முடியும். கிறிஸதவ உலகம் போப்பின் தலைமையின்கீழ் ஒன்றுபட இருக்கிறது என
அறிந்தோம்; அதற்குப் பிறகு உலகப் பொது மதம் உண்டாகும் என்று
தெரிகிறது.எப்படி ஹிட்லருக்கு கோயபல்ஸ் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு
ஜெர்மன் மக்களை நாஜிக்கொள்கைகளை ஏற்க வைத்தானோ அதுபோல கள்ளத்தீர்க்கதரிசி
மத உலகில் எழும்பி பிரகாசித்து, அந்திக் கிறிஸ்துவை கடவுளாக மக்கள்
மத்தியில் உயர்த்தி காட்டுவான்.
இந்த கள்ளத் தீர்க்கதரிசி ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால் சாத்தானின்
அதிகாரம் பெற்ற மனிதனாக காணப்படுவான். உலகில் அநேக கள்ளத்
தீர்க்கதரிசிகள் எழும்பியிருக்கிறார்கள்; இன்னும் எழும்பக் கூடும்; இவனே
கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எல்லாம் தலைமை கள்ளத்தீர்க்கதரிசியாய்
இருப்பான். அந்தி கிறிஸ்துவும் சரி, கள்ளத் தீர்க்கதரிசியும் சரி மிகச்
சிறந்த பேச்சாளர்களாக இருப்பார்கள்; இந்த கள்ளத் தீர்க்கதரிசி பேசினால்
போதுமா? மக்கள் நம்பிவிடுவார்களா? இல்லை, நம்பமாட்டார்கள்; இவன் பல
அற்புதங்களை செய்துகாட்ட வேண்டும்; அப்பொழுதுதான் மக்கள் நம்புவார்கள்;
எனவே இவன் அற்புதங்களை செய்பவன் என்று வேதம் கூறுகிறது.


"அன்றியும், அது மனுஷருக்கு முன்பாக வானத்திலிருந்து பூமியின் மேல்
அக்கினியை இறங்கப்பண்ணத் தக்கதாக பெரிய அற்புதங்களைச் செய்யும்படி தனக்கு
கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்
போக்கி....வெளி.13:13,14. பொதுவாகவே ஏதாவது அற்புதம் செய்தால்தான் மக்கள்
ஒருவனை
நம்பக்கூடியவர்களாய் இருக்கிறார்கள். எனவே இந்தக் கள்ளத் தீர்க்கதரிசி
வானத்திலிருந்து அக்கினியை இறங்கப் பண்ணி பெரிய அற்புதங்களை செய்வான்;
அப்பொழுது பெருவாரியான உலக மக்கள் பிரமிப்படைந்து அவனை நம்புவார்கள்
என்று வேதத்தின் மூலம் நாம் அறிகிறோம்.
உலக சர்வாதிகரியாகிய அந்தி கிறிஸ்துவுக்கு வலது-கை போல் செயல்படும்
இவன், அந்தி கிறிஸ்துவை மக்கள் கடவுள் என்று நம்பும்படியாகச் செய்வான்;
சர்வாதிகாரியாகிய மிருகத்தின் தோற்றம்போல் உயிருள்ள சிலை போன்றதொன்றை
(ரோபோட்) ஏற்படுத்தி அதை பூமியின் குடிகள் வணங்கும்படி செய்லான். அந்தி
கிறிஸ்துவின் சிலை பேசத்தக்கதாகவும் தன்னை வணங்காத யாவரையும் கொலை
செய்யத்தக்கதாகவும் அந்த அந்தி கிறிஸ்துவின் சிலை உயிருள்ள சிலையாக
இருக்கும் என்றும் வேதம் கூறுகிறது.
"மேலும், அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின்
சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலை செய்யத்தக்கதாகவும் மிருகத்தின்
சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்
கொடுக்கப்பட்டது(வெளிப்படுத்தின விசேஷம் 13:15)
** போப் பெனடிக்ட் XVI ஏன் தனது பதவிக்காலம் முடியும் முன்பே ராஜினாமா செய்தார்?
வெளிப்படுத்தின விசேஷம் 17:11ல் கூறப்பட்டிருக்கும் ஏழிலிருந்து தோன்றிய
எட்டாவதவன்:
தானியேலுக்கு வெளிப்படுத்தப்பட்ட இறுதிக்கால தீர்க்க தரிசனம்:
இதோ, கோபத்தின் முடிவுகாலத்திலே சம்பவிப்பதை உனக்குத் தெரிவிப்பேன்; இது
குறிக்கப்பட்ட முடிவுகாலத்துக்கு அடுத்தது. நீ கண்ட இரண்டு கொம்புள்ள
ஆட்டுக்கடா மேதியா பெர்சியா தேசங்களின் ராஜாக்கள்; ரோமமுள்ள அந்த
வெள்ளாட்டுக்கடா கிரேக்கு தேசத்தின் ராஜா; அதின் கண்களுக்கு நடுவே இருந்த
பெரிய கொம்பு அதின் முதலாம் ராஜா; அது முறிந்துபோனபின்பு அதற்குப் பதிலாக
நாலு கொம்புகள் எழும்பினது என்னவென்றால், அந்த ஜாதியிலே நாலு ராஜ்யங்கள்
எழும்பும்; ஆனாலும் அவனுக்கு இருந்த வல்லமை அவைகளுக்கு இராது. அவர்களுடைய
ராஜ்யபாரத்தின் கடைசிக்காலத்திலோவென்றால், பாதகருடைய பாதகம்
நிறைவேறும்போது, மூர்க்க முகமும் சூதான பேச்சுமுள்ள சாமர்த்தியமான ஒரு
ராஜா எழும்புவான். அவனுடைய வல்லமை பெருகும்; ஆனாலும் அவனுடைய
சுயபலத்தினாலல்ல, அவன் அதிசயமானவிதமாக அழிம்புண்டாக்கி, அநுகூலம்
பெற்றுக்கிரியைசெய்து, பலவான்களையும் பரிசுத்த ஜனங்களையும் அழிப்பான்.
அவன் தன் உபாயத்தினால் வஞ்சகத்தைக் கைகூடிவரப்பண்ணி, தன் இருதயத்தில்
பெருமைகொண்டு, நிர்விசாரத்தோடிருக்கிற அநேகரை அழித்து, அதிபதிகளுக்கு
அதிபதியாயிருக்கிறவருக்கு விரோதமாய் எழும்புவான், ஆனாலும் அவன்
கையினாலல்ல வேறுவிதமாய் முறித்துப்போடப்படுவான். சொல்லப்பட்ட
இராப்பகல்களின்தரிசனம் சத்தியமாயிருக்கிறது; ஆதலால் இந்தத் தரிசனத்தை நீ
மறைத்துவை; அதற்கு இன்னும் அநேகநாள் செல்லும் என்றான்.
தானியேலாகிய நான் சோர்வடைந்து, சிலநாள் வியாதிப்பட்டிருந்தேன்; பின்பு
நான் எழுந்திருந்து, ராஜாவின் வேலையைச் செய்து, அந்தத் தரிசனத்தினால்
திகைத்துக்கொண்டிருந்தேன்; ஒருவரும் அதை அறியவில்லை.
யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்ட வெளிப்பாடு:
வெளி 17:1-18

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.