காலக்கிரமமாகத்தொகுக்கப் பட்ட நிகழ்ச்சிக் குறிப்புகள் | CHRONICLE (1)

சபையில் பாபிலோனிய பழக்கவழக்கங்கள்

நிம்ரோத்

தேவனுடைய திட்டத்தை முறியடிக்க சாத்தான் தெரிந்துகொண்ட பாத்திரம்
நிம்ரோத். பழைய ஏற்பாடு எழுதப்பட்ட மூலமொழியாகிய எபிரேய மொழியில் இவன்
பெயர்'மாரட்'. இதன் பொருள்'கலகம்'.

"இவன் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாயிருந்தான்"(ஆதி 10:9).

இவன் மனிதரையும் மிருகங்களையும் வேட்டையாடும் பராக்கிரமசாலியாக
இருந்தான். இவன் தேவனுக்கு விரோதமான பல செயல்களைச் செய்தான். நோவாவின்
குமாரரில் ஒருவனான காமுக்குப் பிறந்தவன் கூஷ். இவன் மகன்தான் நிம்ரோத்;
இவனும் இவன் சேனையும் நோவாவின் குமாரரில் ஒருவனான சேமுக்குக்
கொடுத்திருந்த அசீரியா நாட்டிற்குள் படையெடுத்துச்சென்று அதைக்கைப்பற்றி
நினிவே பட்டனத்தைக் கட்டினான். தேவன் பிரித்துக் கொடுத்திருந்த தேச
எல்லைகளை மாற்றி இவன் கலகம் செய்ததால்'கலகக்காரன்'என்ற
பொருள்படும்'நிம்ரோத்'என்ற பெயரைப் பெற்றான்
அன்று அறியப்பட்ட மக்களையும் முழு உலகத்தையும் தன் ஆட்சிக்குள் கொண்டுவர
திட்டமிட்டு செயல்பட்டான். இந்தத் திட்டத்தை செயல்படுத்த புதிய
மதத்தையும் புதிய ஆட்சிமுறையையும் கொண்டுவந்தான். சிநெயார் சமவெளியில்
பாபேல் என்ற பட்டணத்தைக் கட்டினான்(ஆதி 10.10). இதில் பாபேல் என்ற மிக
உயரமான ஒரு கோபுரத்தைக் கட்ட ஆரம்பித்தான்(ஆதி 11:4)
பாபிலோனியர் நிம்ரோத்தை அரசனாகவும், கடவுளாகவும் மதித்து வணங்கினர்.
'செமிராமிஸ்' என்ற பெண் தேவதை நிம்ரோதின் தாய் என்று கூறப்பட்டுள்ளது;
இவள் இவனுடைய மனைவி என்றும் சில இடங்களில் வருகின்றது.

பாபேல் என்பதற்கு எபிரேய வார்த்தை 'பாபிலு'; இதன் பொருள் 'குழப்பம்';
அதுவரை பூமியெங்கும் ஒரே மொழியாயிருந்ததை தேவன் இந்த இடத்தில்
தாறுமாறாக்கினார்(ஆதி 11:5-9). சகல குழப்பங்களும் இந்த பாபேலில் இருந்தே
உருவாயின.

பாபிலோனில் கட்டப்பட்டுவந்த பாபேல் கோபுரம் மிக உயரமாக இருந்தது.
ஆங்கிலத்தில் ZIGGURAT என்று அழைக்கப்படுகிறது. சுமார் 1000
கோபுரங்களடங்கிய கட்டிடமாக, வட்ட வடிவமான முறையில் உயரமாக பிரம்மாண்டமான
அளவில் கட்டப்பட்டது.

செமிராமிஸ் என்ற பெண் தேவதைக்கு 'அஸ்தரோத்' என்ற பெயரும்
உண்டு.'அஸ்தரோத்'என்றால் 'கோபுரங்களை உண்டுபண்ணின பெண்' என்று பொருள்.
இவளுக்கு'சைபெலி'என்பது மற்றொரு பெயர். இதன் பொருள் 'கோபுரங்களை
சுமக்கிறவள்'. இவளுடைய தலையில் கோபுரம் போன்ற கிரீடம்
வைக்கப்பட்டிருக்கும்.

பாபேல் கோபுரத்தில் ஏழு பகுதிகள் அடங்கியிருந்தன; முதல் பகுதி விக்கிரக
கடவுள்களுக்கென்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோபுரத்தின் உச்சியில்
சுமார் 60X80 அடி சதுரத்தில் ஒரு கோவில் கட்டப்பட்டிருந்தது. இது
பெல்மொர்தாக் என்றும் மர்துக் என்றும் அழைக்கப்பட்ட 'பாகால்' என்ற
கடவுளுக்கு கட்டப்பட்டது.

இந்த கோவிலுக்குள் 12 ZODIAC SIGNS இருந்தன என்று தொல்பொருள்
ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்; அதாவது மாயவித்தைக்குப்
பயன்படும் 12 அடையாளங்கள் இந்தக் கோவிலுக்குள் வரையப்பட்டிருந்தன.
இவைகளைக் குறித்து பின்பு பார்ப்போம்.

இந்தக் கோபுரம் மெய்தேவனுக்கு விரோதமான ஆராதனை முறைகளை கைக்கொள்ளும்
விதத்தில் கட்டப்பட்டிருந்தது; எனவே நிம்ரோத் சிலை வணக்கத்தை, சிலை
ஆராதனையை அறிமுகம் செய்யும் கருவியாக சாத்தானால் பயன்படுத்தப்பட்டான்.

சிலை வணக்கம்-புதிய மதம்-புதிய ஆளுகை ஆகியவற்றை அறிமுகம் செய்து மெய்தேவ
வழிபாட்டிலிருந்து பிரித்து மக்கள் சாத்தானை வணங்க வழிவகுத்தான்.

ஆதிசபை

அப்போஸ்தல நடபடிகளில் சபையின் ஆரம்பத்தையும் வளர்ச்சியையும் காண்கிறோம்.
யூத பண்டிகையாகிய பெந்தெகொஸ்தே பண்டிகை நாளில் தீர்க்கதரிசன நிறைவேறுதலாக
எருசலேமில் கூடியிருந்த சீடர்கள்மேல் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.
பேதுரு எழும்பி பிரசங்கித்தான். வசனத்தைக் கேட்டவர்கள், மனந்திரும்பி
திருமுழுக்குப் பெற்றனர். இதுவே திருச்சபையின் பிறந்தநாள், ஆரம்பநாள்.

இதைத் தொடர்ந்து இயேசுவின் நாமத்தில் அற்புத அடையாளங்கள் நடைபெற்றன.
திருவசனம் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையுடன் பிரசங்கிக்கப்பட்டது.
அனுதினமும் சபையில் ஏராளமானோர் சேர்ந்தார்கள்
அன்று அறியப்பட்ட உலகம் முழுவதும் இயேசுவின் நற்செய்தி பரவ ஆரம்பித்தது.
பிசாசின் கிரியைகள் அழிக்கப்பட்டன. இது சாத்தானுக்குப் பிடிக்காதல்லவா?
அவன் உபத்திரவத்தை கட்டவிழ்த்து விட்டான். கிறிஸ்தவர்கள் எல்லா
இடங்களிலும் துன்புறுத்தப்பட்டனர்; கொலை செய்யப்பட்டனர்; மிருகங்களுக்கு
இரையாக்கப்பட்டனர்.

ஆதிசபையில் உபத்திரவம்
ஏராளமான கிறிஸ்தவர்கள் இரத்த சாட்சிகளாக மடிந்தனர்; மதவெறியர்களும் ,
அரசியல் தலைவர்களும் கிறிஸ்து மார்க்கத்தை அழித்துவிட முயன்றனர். அன்று
உலகை ஆண்ட ரோமப்பேரரசர்கள் கிறிஸ்தவர்களை துன்பப்படுத்தி கொலை செய்தனர்;
அவர்களில் சிலர்....

1.நீரோ(கி.பி.54-68)

இவன் 16 வயதில் பேரரசனானான். 25 வயது முடிவதற்குள் தன் மனைவி ஆக்டேவியா,
தாய், தன் சகோதரன் ஆகியோரை கொன்றான். ஒருநாள் ரோமபுரி தீப்பற்றி
எரிந்தது. நெருப்பு வைத்தது நீரோ மன்னனே என்றும் சிலர் குற்றம்
சாட்டுகின்றனர்.

கிறிஸ்தவர்களைப் பகைத்த நீரோ, இந்த நெருப்பை வைத்தது கிறிஸ்தவர்கள் என்று
அநியாயமாய் குற்றம்சாட்டி, கிறிஸ்தவர்களை கொடுமைப்படுத்திக் கொன்றான்.
கி.பி.67ல் அப்போஸ்தலனாகிய பேதுரு தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டார்.
பவுல் கி.பி.68ல் ரோமபுரியில் தலைவெட்டப்பட்டு மரித்தார்.

2.டொமீஷியன்(கி.பி.81-96)

தன் சிலையை வணங்க மறுத்த கிறிஸ்தவர்களையும் யூதர்களையும்
துன்பப்படுத்தினான்; இவன் தன்னை 'யூப்பிட்டர்' என்னும் கடவுள் என்று
பிரகடனம் பண்ணினான். இவனை வணங்க மறுத்த அப்போஸ்தலனாகிய யோவான் பத்மு
தீவுக்கு நாடு கடத்தப்பட்டான்.

3.ட்ராஜான்(கி.பி.98-117)

கிறிஸ்தவனாயிருப்பது ரோம சட்டத்திற்கு முரண்பட்டது என பிரகடனம்
செய்தான். இவன் ஆட்சியில் திரளான கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர்;
இக்னேசியஸ் என்ற பரிசுத்தவான் மிருகங்களுக்கு இரையாக்கப்பட்டார்.

4.மார்கஸ் அரிலியஸ்(கி.பி.161-180)

இவன் நாட்களில் கலோசியம் என்று அழைக்கப்பட்ட திறந்தவெளி கலையரங்கில்
ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள், பசியுள்ள சிங்கம், புலிகளுக்கு
இரையாக்கப்பட்டனர்; தலை வெட்டப்பட்டு மரித்தனர். போலிகார்ப், ஜஸ்டின்
மார்டைர் ஆகிய பரிசுத்தவான்கள் கொல்லப்பட்டனர்.

5.செப்டிமஸ் செவரஸ்(கி.பி.202-211)

இவன் தன் ஆட்சி காலத்தின் இரண்டாம் ஆண்டில் கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக
சட்டம் இயற்றினான். இவன் நாட்களில் 'ஆரிஜன்' போன்ற கிறிஸ்தவ தலைவர்கள்
கொல்லப்பட்டனர்.

6.மேக்ஸிமஸ்(கி.பி.235)

இவன் நாட்களில் கிறிஸ்தவர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டனர்; உயிருடன்
தீ வைத்துக்கொழுத்தப்பட்டனர்; ஒரே குழியில் 50, 60 சடலங்களைப் போட்டு
மூடினான்.

7.டெசியஸ்(கி.பி.249)

இவன் முன்சொல்லப்பட்ட எல்லா பேரரசர்களைக் காட்டிலும் அதிகமாய்
கிறிஸ்தவர்களை துன்புறுத்தினான்; ஆனால் இவன் சில மாதங்களே ஆட்சி
செய்ததால் இவன் முயற்சி அதிகம் பலிக்கவில்லை.

8.வெலேரியன்(கி.பி.257)

இவன் நாட்களில் ஏற்பட்ட உபத்திரவத்தில் குறிப்பாக கார்த்தேஜ் பிஷப்
சைப்பிரியன் என்ற சிறந்த வேத பண்டிதரும், எழுத்தாளருமான தலைவர்
கொல்லப்பட்டார்.

9.ஆர்லியன்(கி.பி.274)

இவனும் கிறிஸ்தவர்களை துன்பப்படுத்தினான்.

10.டயக்ளீசியன்(கி.பி.303-310)

இவன் நாட்களில் எல்லா வேத பிரதிகளையும் சேகரித்து தீயில்
சுட்டெரிக்கும்படி சட்டம் இயற்றினான். கிறிஸ்தவனாயிருப்பது சட்டத்திற்கு
புறம்பானது எனப் பிரகடனம் பண்ணினான். கிறிஸ்தவ ஆராதனைக் கூடங்களை ஆராதனை
நடந்துகொண்டிருக்கும்போதே தீயிட்டு அழிக்கச் செய்தான்; ஏராளமான
கட்டிடங்களும், மக்களும் அழிக்கப்பட்டனர்.

"கிறிஸ்தவர்கள் முற்றிலும் அழிக்கப்பட்டனர். நமது கடவுள்களின் ஆராதனை
புதுப்பிக்கப்பட்டது"என்ற வாசகமுள்ள நாணயம் அச்சிடப்பட்டு புழக்கத்தில்
விடப்பட்டது; கிறிஸ்தவ மூடநம்பிக்கை அழிக்கப்பட்டதற்கான ஞாபகார்த்த
சின்னம் என்ற ஒரு ஸ்தூபியை எழுப்பினான்.

கிறிஸ்தவ சபையின் வளர்ச்சி

உபத்திரம் எவ்வளவு பெருகினாலும் சபையின் வளர்ச்சி, கிறிஸ்தவர்களின்
வளர்ச்சி குன்றவில்லை, குறையவில்லை. இந்த உபத்திரவகால முடிவில் ரோம
சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த மக்கள்தொகை சுமார் 120 மில்லியன்(12 கோடி) என்று
கணக்கிடுகின்றனர். இதில் பாதிப்பேர், அதாவது 60 மில்லியன்(6கோடி)
கிறிஸ்தவர்கள் என்று குறிப்பு கூறுகிறது.

சாத்தான் திருச்சபையை உபத்திரவத்தினால் அழிக்கமுடியாது என்று
கண்டுகொண்டான். கிறிஸ்தவர்களை காலிபண்ண பிசாசு அதிக நயவஞ்சனையான முறையைக்
கையாண்டான்; கிறிஸ்தவர்களைக்கொண்டே கிறிஸ்தவத்தை அழிக்கத் திட்டமிட்டான்.

கான்ஸ்டன்டைன்
ரோமப் பேரரசரான இவன் கிறிஸ்தவர்களின் உறுதியையும், உண்மையையும் கண்டு
பிரமித்தான். ஒருநாள் பிரகாசமான ஒரு சிலுவையை தரிசனத்தில் கண்டான்."இந்த
அடையாளத்தில் ஜெயம் பெறு"என்ற சத்தத்தையும் கேட்டான். கான்ஸ்டன்டைன்
வெற்றி பெற்றான். கிறிஸ்தவனானான்; கிறிஸ்து மார்க்கத்தின் பாதுகாவலன்
என்று தன்னை பிரகடனப்படுத்தினான்.

கி.பி.324ல் அரசாங்கத்தையும் திருச்சபையையும் ஒன்றாக இணைத்தான்.
திருச்சபைக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஏராளமான சலுகைகளை அள்ளி வழங்கினான்;
சபைப் போதகர்களுக்கு ஆலயங்களைக் கட்டுவதற்கு அரசாங்க கருவூலத்திலிருந்து
ஏராளமான பணம் கொடுக்கப்பட்டது. கிறிஸ்து மார்க்கம் அரசாங்க
மார்க்கமாயிற்று. சபைத் தலைவர்களுக்கு'பசிலிக்கா'(BASCILICA)என்ற மிக
ஆடம்பரக் கட்டிடங்கள் வழங்கப்பட்டன. இதிலே மதமாற்றங்களுக்கான சடங்குகள்
நடைபெற்றன.

கிறிஸ்தவர்களுக்கு இதுவரை இருந்த உபத்திரவம் நீங்கி, கிறிஸ்தவனாயிருபபது
பெரிய சிலாக்கியமாயிற்று. திரளான மக்கள் கிறிஸ்தவர்களாக மாறினர்; அரசாங்க
சலுகைகளைப் பெறவும், உயர்பதவி பெறவும் கிறிஸ்தவர்களாயினர். பணத்திற்காக,
வசதியான வாழ்விற்காக சபைப்போதகர்களாக மாறினர்.

சபைக்கு ஏற்பட்ட சரிவு
கிறிஸ்தவம் உலகமெங்கும் வேகமாய்ப் பரவினாலும், சபை தன் புனிதத் தன்மையை
கொஞ்சங் கொஞ்சமாய் இழக்க ஆரம்பித்தது; மனந்திரும்பாதவர்கள், கிறிஸ்துவை
உண்மையாய் ருசியாதவர்கள், கிறிஸ்துவினால் அழைக்கப்படாதவர்கள் பல்வேறு பிற
காரணங்களுக்காக பிரசங்கியார்களாய், சபை மேய்ப்பர்களாய் பொறுப்பேற்றனர்.

எனவே பரிசுத்த ஆவியின் வல்லமை குன்றியது; பண வல்லமை மேற்கொண்டது; பிரசங்க
முறைகள் சொற்பொழிவுகளாக மாறின; வேத வசனம் மறக்கப்பட்டது; சபைகள்
முழுவதும் மனந்திரும்பாத மக்களால் நிறைந்தது.

சபையின் எல்லா பணத்தேவைகளும் அரசாங்கத்தால் பூர்த்தி செய்யப்பட்டன. அநேக
பிற மத வழிபாட்டுத்தலங்கள் கிறிஸ்தவ ஆலயங்களாக்கப்பட்டன. பிற மதத்தினரை
சபைக்குக் கொண்டுவர அவர்களின் பழக்கவழக்கங்களை சபைக்குள் கொண்டுவந்தனர்.
பிற மதத்திலிருந்த
சகல மூடப்பழக்க வழக்கங்களும் சபையின் சடங்குகளாய் மாறின.

வேதத்தின் அடிப்படை சத்தியங்கள் போதிக்கப்படவில்லை; எனவே எவை அடிப்படை
சத்தியங்கள், எவை கிறிஸ்தவத்திற்கு முரண்பட்டவை என்பதை யாரும்
கண்டுகொள்ளவில்லை.இயேசுவின் திருச்சபை எல்லா மூடப்பழக்க வழக்கங்களையும்
கைக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

பாபேல் கோபுரம் கட்ட முயற்சித்து தோற்றுப்போன நிம்ரோத், பின்பு
கொல்லப்பட்டு அகால மரணமடைந்ததாகபாபிலோனிய சரித்திரம்கூறுகிறது.
நிம்ரோத்தினுடைய மரணத்தால் வேதனைப்பட்ட மக்கள் அவனுக்காக துக்கம் கொண்டாட
ஆரம்பித்தனர். நிம்ரோத்தின் மற்றொரு பெயர்'தம்மூஸ்'; தம்மூஸுக்காக
அழுதார்கள் என்று எசேக்கியேல் 8:14ல் வருகிறது.

தங்களுக்குப் பெயர் உண்டாக்க பாபேல் கோபுரம் கட்ட முயன்றவர்களுடைய
மொழியை கர்த்தர் தாறுமாறாக்கினபடியால் அவர்கள் அவ்விடம் விட்டு பூமியின்
பல பாகங்களுக்கும் சிதறிப்போக ஆரம்பித்தனர்; அவர்களோடு அவர்கள்
பாபிலோனிய கலாச்சாரமும், மதச்சடங்குகளும், மத நம்பிக்கைகளும் கூடவே சென்றன.

செமிராமிஸ் என்ற தேவதை, அவள் மகன் நிம்ரோத், இவர்கள் இருவரையும்
பாபிலோனியர் வணங்கினர்; செமிராமிஸ் தேவதை நிம்ரோத்தை அற்புதமாக
பெற்றெடுத்தாள்; இவனேஆதி.3:15ல் சொல்லப்பட்டுள்ளஸ்திரீயின் வித்துஎன்றும்
நம்பினர்; செமிராமிஸ்'அல்மாமேட்டர்'என்று அழைக்கப்பட்டாள்; இதன்
பொருள்'கன்னித்தாய்'.
இவள்'வானத்தின் ராணி'(QUEEN OF HEAVEN)என்றும் அழைக்கப்பட்டாள். எரேமியா
44:15-19, 24-27 வசனங்களில்'வானராக்கினி'என்று அழைக்கப்படுகிறவள் இவளே.
யூதர்களும் இவளுக்கு தூபங்காட்டி, பலிகளைச்செலுத்தினர். அப்படி
செய்ததினால் தங்களுக்கு ஆசீர்வாதம் கிடைத்தது என வாதாடினர்.

திருச்சபையில் திரளான மக்கள் வந்து சேர்ந்தபோது, தாங்கள் முன்பு
பின்பற்றிய பழக்கவழக்கங்களையும் சபைக்குள் கொண்டு வந்தனர். புறஜாதி
மக்களை சபைக்குள் கொண்டுவர அவர்கள் பழக்கவழக்கங்களை கிறிஸ்தவ சடங்குகளாய்
மாற்ற சபைத் தலைவர்களும் ஆர்வம் காட்டினர்.

மரியாள் வணக்கம்

பாபிலோனியரும், எகிப்தியரும் வணங்கிவந்த வானராக்கினியின் ஸ்தானத்தை
புனிதத்தாயாகிய மரியாளுக்குக் கொடுக்க ஆரம்பித்தனர்.இயேசுவின் தாய்என்ற
தலைப்பு மங்கி,"கடவுளின் தாய்"என்ற பட்டம் உயர்ந்தது. இதுவரையிலும்
மரியாளைப்பற்றி எதுவும் சொல்லாதிருந்த சபையார் மரியாளுக்கு
முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தனர்.

கி.பி 431இல் எபேசு பட்டணத்தில் நடந்த திருச்சபை ஆலோசனைக் கூட்டத்தில்
மரியாளைகடவுளின் தாய்(MOTHER OF GOD)என்று அழைக்கத் தீர்மானிக்கப்பட்டது.
இதுவரையிலும் இயேசுவை மட்டும் வணங்கிவந்தவர்கள், இதிலிருந்து மரியாளையும்
வணங்க ஆரம்பித்தனர்.

வசனத்திற்கு முரண்பட்ட பழக்கவழக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

*கி.பி300

மரித்தவர்களுக்காக ஜெபம்

*கி.பி300

சிலுவை அடையாளத்தை முக்கியப்படுத்துதல்; தம்மூஸ் என்ற வார்த்தையின் முதல்
எழுத்தாகிய'T'என்ற எழுத்து பாபிலோனிய மந்திரங்களின் அடையாள குறியாக
பயன்படுத்தப்பட்டு வந்தது. அதையே சற்று மாற்றி சிலுவை வடிவமாக்கி, சிலுவை
அடையாளத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தனர்.

*கி.பி.375

மரித்த பரிசுத்தவான்களையும், தேவதூதர்களையும் வணங்க ஆரம்பித்தல்.

*கி.பி.394

தூப ஆராதனையோடு கூடிய பூஜைமுறை அறிமுகம் செய்யப்பட்டது.

*கி.பி.431

மரியாள் வணக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

*கி.பி.500

சபை அங்கத்தினரின் ஆடையைவிட சபைக் குருவானவரின் உடை மாற்றியமைக்கப்பட்டது.

*கி்.பி.593

உத்தரிக்கும் ஸ்தலம் பற்றிய உபதேசம் அறிமுகப்படுத்தப்பட்டது.

*கி.பி.600

ஆராதனைகள் லத்தீன் மொழிகளில் நடத்தப்பட ஒழுங்கு செய்யப்பட்கது.
மரியாளிடம் வேண்டிக்கொள்ளுதல் அறிமுகப்படுத்தப்பட்டது; மரித்த
பரிசுத்தவான்களிடம் வேண்டிக்கொள்ளுதல் ஆரம்பிக்கப்பட்டது.

வெளி.2:1-7 வசனங்களில் எபேசு சபைக்குக் கொடுக்கப்பட்ட செய்தி: எபேசு சபை
ஆதி அன்பை இழந்த சபையாக கூறப்பட்டுள்ளது. வெளி.2:8-11 சிமிர்னா
சபைக்குறிய செய்தி: இது உபத்திரவ கால சபைக்கு அடையாளம்.

வெளி.2:12-17 வசனங்களில் பெர்கமு சபைக்குறிய
செய்தி:'பெர்கமு'என்றால்'திருமணம்'என்று பொருள். திருச்சபை உலகத்துடன்
தன்னை இணைத்துக்கொண்ட உறவுக்கு அடையாளமான சபை. இந்த சபையில்நிக்கோலாய்
மதப் போதனைகளும்,பிலேயாமின் போதனைகளும் ஊடுருவி இருந்தன. இதே
நிலையில்தான் கி.பி.மூன்றாம் நூற்றண்டிற்குப்பின் சபைக்குள் பாபிலோனிய
பழக்கவழக்கங்கள், ஆராதனை முறைகள் நுழைந்தன.

*கி.பி.650

மரியாளைக் கனப்படுத்த பல பண்டிகைகள் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்த CHRONICLE'ஜ வாசிக்கும் கத்தோலிக்க நண்பர்களுக்கு எழுத
விரும்புவது, நீங்கள் மரியாளை மதிப்பது போலவே நாங்களும் மரியாளை புனிதமான
தாயாக மதிக்கின்றோம். உலகில் பிறந்த எந்தப்பெண்ணையும்விட மரியாள் இயேசுவை
பெற்றெடுத்ததின்மூலம் சிறப்பான சிலாக்கியமுடையவள் என நம்புகிறோம். ஆனால்,
இயேசு கிறிஸ்து ஒருவரே மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன். அவர் ஒருவரே
ஆராதனைக்குரியவர் என்பதுசத்தியம்.

சபைத்தலைவர் ஆண்டவராக உயர்த்தப்படல்
பாபிலோனிய போப்புகளின் உணமையான மகா சபை(GRAND ORIGINAL COUNCIL OF
PONTIFFS)என்ற அமைப்பு ஒன்று இருந்தது. இதன் தலைவர்"The SOVEREIGN
PONTIFF OF BABYLON"என்று மதிக்கப்பட்டார். அதாவது"கடவுளின் தெய்வீகத்
தன்மை வாய்ந்த போப் என்றும் இவர் தவறு செய்ய இயலாதவர்" (INCAPABLE OF
ERROR)என்றும் மதிக்கப்பட்டார். உயர்வட்டார குருக்கள்முதல் இவரை தொழுது
கொண்டார்கள்
இந்த பாபிலோனிய பழக்கவழக்கங்களே திருச்சபைக்குள்ளும் நுழைந்தது. ஆரம்ப
நாட்களில் ஆதி சபையினர் வீடுகளில் கூடி ஆராதித்தனர்; பாடல்கள் பாடி,
ஜெபித்து, சாட்சிகூறி, சங்கீதம் வாசித்து ஆராதனை செய்தனர். ஒவ்வொரு
வீட்டுக் குழுக்களும் தங்கள் காரியங்களை தாங்களே பார்த்துக் கொண்டனர்.
இந்த வீட்டு சபைகளிலே மூப்பர்கள் பொருப்பாளர்களாக இருந்தனர். இப்படி பல
வீட்டு சபைகளை மேற்பார்வை செய்தவர்களை பிஷப் என்று அழைத்தனர்.

'பிஷப்'என்பதன் பொருள்'மேற்பார்வையாளர்'. பல நாடுகளிலும் சபை வேகமாய்
பரவினது. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் ரோம சாம்ராஜ்யத்திலிருந்த
120மில்லியன் (12 கோடி) மக்களில் பாதிப்பேர் கிறிஸ்தவர்களாக மாறிவிட்டனர்
என ஒரு குறிப்பு கூறுகிறது.

கான்ஸ்டன்டைன் என்ற ரோமப் பேரரசன் கிறிஸ்தவனாக மாறியபின் சபையில் பெரிய
மாற்றங்கள் ஏற்பட்டன. பேரரசன் திருச்சபையின் தலைவனாகவும் செயல்பட
ஆரம்பித்தான். சபைக்கு பல சட்டதிட்டங்களை இயற்றினான். சபைகளுக்குள் பல
சபைகளுக்குள் ஒரு அமைப்பு உண்டாக ஆரம்பித்தது.இந்த சபை அமைப்புகள்
தங்களை'கத்தோலிக்க சபை'என்று அழைத்தனர்.'கத்தோலிக்'ஏன்றால்'அகில
உலகம்'என்று பொருள். அதாவது'பல நாடுகளிலும் பரவியுள்ள சபை'என்று
பொருள்.இந்த அமைப்பில் இணையாத பல சபைகளும் சுயாதீனமாய் இயங்கி வந்தன.
சபையில் அங்கத்தினராக வேணடுமானால் சபை ஏற்படுத்தியுள்ள விசுவாசப்
பிரமானங்களுக்கு உட்பட வேண்டும் என்ற விதி உருவானது. குருமார்களுக்கும்
சபை அங்கத்தினர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி
உண்டாக்கப்பட்டது.குருமார்கள், ஆசாரியர்கள்(PRIESTS)என்று
அழக்கப்படலாயினர்.சபையின் மேற்பார்வையாளர்களாயிருந்த பிஷப்மார் சபைகளை
ஆளுகை செய்ய ஆரம்பித்தனர். பிஷப்களை கட்டுப்படுத்துவது யார் என்ற கேள்வி
எழுந்தது. பெரிய பட்டனங்களிலிருந்த, பிஷப்கள்,மெட்ரோபாலிடன்ஸ்(கூட்டு
தலைமைக்குழு தலைவர் அல்லது மேட்டிரானியர்)என்று அழைக்கப்பட்டனர்.
பின்புபேட்ரியார்க்ஸ்(கோத்திரப்பிதா அல்லது குடி முதல்வன்)என்று
அழைக்கப்பட்டனர்.

இப்படிப்பட்ட தலைவர்கள்எருசலேம்,அந்தியோகியா,அலெக்ஸாண்டிரியா,கான்ஸ்டாண்டிநோபிள்,ரோம்,
ஆகிய பட்டணங்களிலிருந்தனர். இந்த ஐந்து தலைவர்களுக்குள்ளும் தங்களில்
யார் அதிக அதிகாரமுடையவர் என்ற போட்டி எழுந்தது. கான்ஸ்டாண்டிநோபிள்,
ரோம் ஆகிய இரு பட்டண பிஷப்களுக்குள் அதிக போட்டி ஏற்பட்டது.

உலகை ஆண்டுவந்த ரோமின் அதிகாரம் உயர்ந்ததாயிருந்தது. ரோமாபுரி சபையை
உருவாக்கியவர்கள் அப்போஸ்தலராகிய பேதுரு, பவுல் என மதிப்பாக கூறப்பட்டது.
ரோமின் முதல் பிஷப் அப்போஸ்தலனாகிய பேதுரு. எனவே அவர்வழிவந்த ரோம் சபைத்
தலைவரே எல்லா சபைகளுக்கும் தலைவர் என உறுதி செய்யப்பட்டது. நீ
பேதுருவாயிருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்
(மத்.16:18,19). நீ என் ஆடுகளை மேய்ப்பாயாக (யோ.21:15-17). இந்த இரண்டு
வசனங்களும் பேதுருவின் உயர்ந்த அதிகாரத்திற்கு ஆதாரமாக
எடுத்துக்கொள்ளப்பட்டன.4ம் 5ம் நூற்றாண்டுகளில் போப் என்ற பதம் எந்த
பிஷப்பிற்கும் உரியதாயிருந்தது. பின்பு ரோமாபுரியிலிருந்த சபையின்
தலைவருக்கு மட்டுமே உரியதாயிற்று.'போப்'என்ற வார்த்தையின் பொருள்'அப்பா'.

ஒன்றாம் லியோ (கி.பி.444-461) என்ற ரோமாபுரி சபைத் தலைவர் தனக்கு உயரிய
அதிகாரம் உண்டு என்று கூறி மற்ற பிஷப்களுக்கு கட்டளை கொடுக்க
ஆரம்பித்தார். இவர் பல இடங்களில்'முதல் போப்'என்று
அழைக்கப்பட்டதுண்டு.சுமார் கி.பி.600ல் முதலாம் கிரிகரி(GREGORY 1.'The
GREAT') என்பவர்முதல் அகில உலக பிஷப்பாகவும் , போப்பாகவும்
முடிசூட்டப்பட்டார். இவர் சிலை வணக்கம், உத்தரிக்கும் ஸ்தலம்,
கர்த்தருடைய பயன்படுத்தப்படும் அப்பமும், இரசமும் ஜெபித்தவுடன் இயேசுவின்
சரீரமாகவும் இரத்தமாகவும் மாறிவிடுகிறது என்ற கொள்கை
(TRANSUBSTANTIATION) ஆகிய உபதேசங்களைக் கொண்டுவந்தார். இவர் ஒரு துறவி;
துறவறத்தை அதிகம் வலியுறுத்தினார்.
போப்பின் அதிகாரம் படிப்படியாக உயர்ந்தது. போப்பின் அதிகாரத்திற்கு
கீழ்படிந்து நடந்த அரசர்களும் உண்டு. எதிர்த்தவர்களும் உண்டு.
கி.பி.1073-1216 வரை ஐரோப்பிய நாடுகளில் போப்கள் சர்வ
அதிகாரமுடையவர்களாய் உயர்ந்து நின்றனர்.

ஹில்டபிராண்ட்என்ற போப்பைப்போல் அதிகாரத்துடனிருந்த போப் வேறு
யாருமில்லை. இவர் அரசர்கள் போப்பை நியமிப்பதை நிறுத்தி,தலைமை பிஷப்புகள்
சங்கம் (College of Cardinals)போப்பை தெரிந்துகொள்ளும் முறையை கொண்டு
வந்தார்.குருமார் துறவறம் மேற்கொள்ளவேண்டும் என்பதை கட்டாயமாக்கினார்.
போப்பே உலகத்தையும் சபையையும் ஆளவேண்டும் என்று கூறினார்.போப்
ஹில்டபிராண்ட் 20 ஆண்டுகள் ஆட்சி செய்தபின் கி.பி.1085ல் மரித்தார்.

இவருக்குப்பின் குறிப்பிடத்தக்க போப் மூன்றாம் இன்னசென்ட் (INNOCENT
III). இவர் ஆட்சி செய்த காலம் கி.பி.1198-1216. 37வயதில் போப்
பட்டத்திற்கு வந்து முழு உலகையும் ஆளுகை செய்வது போப்பின் அதிகாரம் என்று
பிரகடனப்படுத்தினார்.

கி.பி.1303ல் 8ம் போனிபேஸ் (BONIFACE VIII) என்ற போப் பிரெஞ்சு தேச
அரசனாயிருந்த பிலிப்பை சபையைவிட்டுத் தள்ளும் கட்டளையைப் பிறப்பித்தார்.
பிலிப் தன் படையைஅனுப்பிபோப்பை சிறைபிடித்து, மூன்று நாள்
சிறையிலடைத்ததிலிருந்து போப்பின் அதிகாரம் குறைய
ஆரம்பித்தது.இதைத்தொடர்ந்து 70 ஆண்டுகள் பிரெஞ்சு தேச அரசர்களால்
போப்மார்கள நியமிக்கப்பட்டனர். இந்தக் காலக் கட்டத்தில் போப்பின்
இருப்பிடம் ரோமிலிருந்து பிரெஞ்சு தேச பட்டணமான அவிக்னனுக்கு(AVIGNON)
மாற்றப்பட்டது.

கி.பி.1378ல்மறுபடியும் போப்பின் இருப்பிடம் ரோமுக்கு மாற்றப்பட்டது.
ஆனால் பிரெஞ்சு தேச தலைமை பிஷப்கள் இன்னொரு போப்பை தேர்ந்தெடுத்தனர். 30
ஆண்டுகள் இரண்டு இடங்களில் இரண்டு போப்கள் ஆட்சி செய்தனர். இந்தப்
பிரச்சனையை தவிர்க்க இந்த இரண்டு போப்கள் அல்லாமல் பொதுவான ஒரு போப்பை
தெரிந்து கொண்டனர். ஆனால் முந்திய இரண்டு போப்புகளும் தங்கள் பதவியை
ராஜினாமா செய்ய மறுத்தனர். எனவே சிறிதுகாலம் மூனறு போப்புகள் ஒன்றுபோல்
பதவியிலிருந்தனர்.

கி.பி.1414ல்கான்ஸ்டன்ஸ் என்ற பட்டணத்தில் சபையின் ஆலோசனை சங்கம்
கூடியது. பதவியிலிருந்த அத்தனை போப்புகளையும் புறம்பாக்கி '5ம் மார்டின்'
என்ற புது போப்பை தெரிந்தெடுத்தனர்.

கி.பி.1378லிருந்து போப்மார் ரோமில் தொடர்ந்து தங்கி வருகின்றனர்.
கி.பி.1870ல் இத்தாலி அரசன் ரோமையும் போப்பின் ஆளுகையிலிருந்த
நாடுகளையும் தன் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவந்தான். கி.பி.1929 பிப்ரவரி
11ம் தேதி இத்தாலி அரசுக்கும் வத்திக்கானுக்குமிடையே ஒரு ஒப்பந்தம்
கையெழுத்தானது. இத்தாலி பிரதம மந்திரி முசோலினியும், கார்டினல்
கேஸ்பாரியும் கையெழுத்திட்டனர். இவ்விதமாய் வத்திகான் என்ற சிறுநகரம் சுய
ஆட்சியுடைய குறுநிலமாக மாறியது. சுமார் 109 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த
சிறுநாடு தனிக்கொடி, தனி தபால்தலை, தனி ராணுவம், தனி குடியுரிமை ஆகிய
சிறப்புகளையுடையதாய் விளங்குகிறது.

ரோமன் கத்தோலிக்க சபையின் குறிப்புகளிலிருந்து அறிவது:....

ரோமன் கத்தோலிக்க சபை உலகிலுள்ள எந்த ஆளுகைகளுக்கும் அடிமைப்பட்டதல்ல.
போப் திருச்சபையின் தலைவராயிருப்ததால் அவரே முழு உலகத்திற்கும்
ராஜாதிராஜா. மனுக்குலத்தின் தலைவர். போப்மூலமாய் இயேசுகிறிஸ்து
மாம்சத்தில் 'வெளிப்பட்டு ஆட்சி செய்கிறார். எனவே இப்போது உலகிலுள்ள
இயேசுகிறிஸ்து போப் அவர்களே! போப் பேசினால் இயேசு பேசுகிறார் என்று
பொருள். எனவே போப்பின் பேச்சை பரிசோதித்துப் பார்க்க யாருக்கும்
உரிமையில்லை. கீழ்படிவதே நமது கடமை'. இதுவே அவர்கள் உறுதியாய் நம்புவது.
எனவே போப் 'போப் ஆண்டவராய்' உயர்த்தப்பட்டார்.

மத் 16:16-20ல் இயேசு பேதுருவைக் குறித்துசொன்ன காரியங்களை அடிப்படையாகக்
கொண்டதே தங்கள் கொள்கை எனக் கூறுகின்றனர்.
ஆதித் திருச்சபையின் முதல் தலைவர் பேதுருவா?

இயேசு பேதுருவைப் பார்த்து...
"நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக்
கட்டுவேன்... பரலோகத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்;
பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்
பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும்
கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்"(மத் 16:16-19)

இதற்கான விளக்கத்தைப் பார்ப்போம்

பேதுரு என்பதற்கு உபயோகிக்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை'பெட்ரோஸ்'. இந்த
கல்லின்மேல் என்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தை'பெட்ரா'. பெட்ரோஸ்
என்றால்'கல்'என்று பொருள். 'பெட்ரா' என்றால்'பெரிய பாறை'. நீ சிறு
கல்லாயிருக்கிறாய்; இந்த பெரிய பாறையின்மேல் என் சபையைக் கட்டுவேன் என்று
இயேசு கூறினார். இந்தப் பெரிய பாறை யார்?; இயேசுகிறிஸ்துவே.
"அந்தக் கன்மலை கிறிஸ்துவே"(1கொரி.10:4; ரோமர் 9:33).

"மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால்
தெரிந்துகொள்ளப்பட்டதும்விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய
அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும்"(1பேதுரு 2:4).

(இதை எழுதிய பேதுரு நானே அந்தக் கல் என்று சொல்லவில்லை)

"இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்"(எபே.2:20)

"அவர்மேல்(இயேசு வின்மேல்) மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு...

அவர்மேல்(இயேசு) நீங்களும்... கூட்டிக் கட்டப்பட்டு வருகிறீர்கள்"(எபே.2:21,22).

எனவே திருச்சபை இயேசுகிறிஸ்துவின்மேல் கட்டப்பட்டு வருகிறது;
பேதுருவின்மேல் அல்ல.பெந்தெகொஸ்தேநாளில் திருச்சபை ஆரம்பமானபோது பேதுருவை
தேவன் பயன்படுத்தினார். பேதுருவின் பிரசங்கத்தினால் 3000 பேர்
மனந்திரும்பி திருச்சபைக்குள் சேர்க்கப்பட்டனர்.

"இயேசுவே ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து"என்ற பேதுருவின்
அறிக்கையின்மேல் திருச்சபை கட்டப்படுகிறது என்றும் வேத பண்டிதர் விளக்கம்
கொடுக்கின்றனர்.

"அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல்
கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்" (எபே.2:20) என்று பவுல்
குறிப்பிடுகிறார். அதாவது அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள் இயேசுவே
தேவகுமாரன் என்று அறிக்கையிட்ட விசுவாச அறிக்கையின்மேல் திருச்சபை
கட்டப்படுகிறது.

பேதுருதான் முதல் போப் என்றும், அவர் ரோமில் 25 ஆண்டுகள்
பதவியிலிருந்தார் என்றும் கூறப்படும் கருத்துக்கு வேத ஆதாரமுமில்லை,
சரித்திர ஆதாரமுமில்லை.
பேதுருதான் முதல் போப் என்றால் இவர் திருமணமானவர் என்றும், அவர் தம்
மனைவியை ஊழியத்திற்குப் போன இடங்களுக்கெல்லாம் கூட்டிச் சென்றார் என்றும்
வேதம் கூறுகிறது(மத்.8:14; 1கொரி.9:5). சமாரியாவில் ஏற்பட்ட எழுப்புதலைக்
கேள்விப்பட்ட எருசலேம் சபையார் பேதுருவையும், யோவானையும் சமாரியாவிற்கு
அனுப்பினர்.(அப் 8:14).

பேதுரு சபைக்குக் கட்டுப்பட்டு நடந்தாரேயல்லாமல், சபைக்கு தலைவராக
செயல்படவில்லை. சபையின் தூண்களாக யாக்கோபும், பேதுருவும், யோவானும்
கருதப்பட்டனர்(கலா.2:9). அப்போஸ்தலரில் ஒருவர்தான் பேதுரு; சபைக்குத்
தலையானவர் கிறிஸ்துவே(எபே.5:23)
"கண்காணியானவன் (பல சபைகளை மேற்பார்வை செய்பவர்) ஒரே மனைவியை உடைய
புருஷனாக இருக்க வேண்டும்"(1 தீமோ.3:2).'கண்காணி'என்பதற்கு
ஆங்கிலத்தில்'பிஷப்'என்று வருகிறது. திருமணம் செய்யக் கூடாது என்று பவுல்
எழுதாமல், ஒரு மனைவியுடன் நல்வாழ்க்கை வாழ்பவனாக இருக்க வேண்டும் என்று
எழுதுகிறார். ஒன்றுக்கு மேல் இருக்கக் கூடாது என்பதற்கும், ஒன்றுமே
வேண்டாம் என்பதற்கும் நிறைய வித்தியாசமிருக்கிறது.

பவுல் இதைத் தொடர்ந்து எழுதும்போது பிற்காலங்களிலே தவறான கொள்கைகளை அந்த
பொய்யர் கட்டளையிடுவார்கள் என்று குறிப்பிடுகிறார்.

"விவாகம் பண்ணாதிருக்கவும்"(1 தீமோ.4:2)

இந்த இரண்டு வார்த்தைகள் மட்டும் ஒரு வசனமாக குறிக்கப்பட்டுள்ளது கவனத்திற்குறியது.

"மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற
ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை
விட்டு விலகிப் போவார்கள்.

விவாகம் பண்ணாதிருக்கவும்... அந்தப் பொய்யர் கட்டளையிடுவார்கள்"(1 தீமோ.4:1-3).

துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரீகள்

இந்தப் பழக்கமும் பாபிலோனிலிருந்து வந்ததே.கி.பி.320ல் அந்தோணி என்பவர்
உலக பற்றுகளிலிருந்து விடுபட்டு தனித்து வாழ ஆரம்பித்தார்; இவர் பரிசுத்த
வாழ்க்கை வாழ்ந்தார்; இவரின் நல்வாழ்க்கை ஆயிரக்கணக்கானோரைக் கவர்ந்தது;
இவர் எகிப்திலுள்ள ஒரு குகையில் வாழ்ந்துவந்தார்; இவரைப் பின்பற்றி
அனேகர் துறவறத்தை விரும்ப ஆரம்பித்தனர். ஏராளமானவர்கள் இவரின் சீடராய்
மாறினர். இதன்மூலம் பல நன்மைகளும் ஏற்பட்டன; தீமைகளும்
ஏற்பட்டன.|துறவறத்தை வலியுறுத்திய சரித்திரத்தை இரண்டாகப்
பிரிக்கலாம்.கி.பி.385ல் சிரிகஸ்(Siricus) என்பவர் துறவறத்தை வலியுறுத்தி
ஓர் கட்டளை பிறப்பித்தார்; அது 7ம் கிரிகரி காலம் வரை ஓரளவு
கடைபிடிக்கப்பட்டது; ஆனால் கண்டிப்பாக கடைபிடிக்கப்படவில்லை.
போப் 7ம் கிரிகரிகி.பி.1073ல் பதவிக்கு வந்தார் ;இவருக்கு ஹில்டபிராண்ட்
என்ற பெயரும் உண்டு; இவர் ஆண்ட காலம்கி. பி.1073-1085. இவர் பதவிக்கு
வந்தவுடன் குருக்கள் கண்டிப்பாய் சந்நியாச வாழ்க்கை வாழ வேண்டும் என்று
சட்டம் இயற்றினார்; இதுவரை திருமணம்பண்ணி குடும்பம் நடத்திக் கொண்டிருந்த
பாதிரிமார்கள் கட்டாயமாக மனைவி, பிள்ளைகளைவிட்டு பிரிக்கப்பட்டனர்.
இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டன; இதைத் தாங்கிக்கொள்ள
முடியாத பாதிரிமார்களின் மனைவிகளில் பலர் தற்கொலை செய்து கொண்டனர்;
ஏராளமான பேர் மனநிலையில் பாதிக்கப்பட்டு வியாதியுற்றனர்.

மனைவி, பிள்ளைகளைவிட்டு பிரியாத பாதிரிமார்களின் பூஜையில் சபையார்
கலந்து கொள்ளக்கூடாது என்று போப் கட்டளையிட்டார். சபையாரும் இதை
வரவேற்றனர். மனைவியைவிட்டுப் பிரியாத பாதிரிமார் நடத்திய திருமுழுக்கு
ஆராதனைகள், கர்த்தருடைய பந்தியை ஏராளமான சபை மக்கள் புறக்கணித்தனர்.

கி.பி.1073க்கு பின்புதான் திருமணமான
பாதிரிமாருக்குகுருப்பட்டம்(Ordination)மறுக்கப்பட்டது.

...>>(தொகுப்பு நூல்: "உபதேசங்கள் பலவிதம்";(முதல்
பாகம்),ஆசிரியர்:P.S.ராஜமணி;தொடர்புமுகவரி:100,நாவலர் நகர்,மதுரை-625
010.)

கி.பி.1517-நவம்பர் 1: மார்டின் லூத்தர் வேதாகம வசனங்களை ஆதாரமாக வைத்து
தனது 95 கோட்பாடுகளை'விட்டன்பரோ'ஆலயக்கதவில் பதித்தார்.

(வாடிகனில் அலங்காரமான புனித பீட்டர் தேவாலயம் கட்டுவதற்கு அதிகப்பணம்
தேவைப்பட்ட காரணத்தினால் போப் 2ம் ஜூலியஸ் கட்டளைப்படி'டெட்சல்'என்ற
கத்தோலிக்க மதகுரு மக்களிடம், பணம் கொடுத்து போப்பாண்டவர் அனுமதித்த இந்த
பாவமன்னிப்புச் சீட்டு வாங்கினால், நீங்கள் செய்த, செய்து கொண்டிருக்கிற,
எதிர்காலத்தில் செய்யப்போகிற எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட்டு எரி நரக
தண்டனையிலிருந்து தப்பி மோட்சமடையலாம்; அதுமட்டுமல்ல செத்துப்போன உங்கள்
உறவினர்களும் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து (மோட்சத்திற்கும்,
நரகத்திற்கும் இடைப்பட்ட இடம்) மோட்சம் போவார்கள் என்று கூறி பாவ
மன்னிப்பு சீட்டு வியாபாரத்தை பெரிய அளவில் நடத்தி அதிகப் பணம்
திரட்டினார்.
டெட்சல் 1517-ல் சாக்ஸனிக்கு வந்தார். சாக்ஸன் பல்கலைக்கழக
பேராசிரியராயிருந்த மார்டீன் லூத்தர் விட்டன்பர்க் ஆலய பொருப்பையும்
சேர்த்து கவனித்துக்கொண்டுவந்தார். இவர் டெட்சலின் பாவமன்னிப்பு சீட்டு
வியாபாரத்தை வன்மையாக கண்டித்தார். மார்ட்டின் லூத்தர், மக்கள்
ஏமாற்றப்பட்டதை அறிந்துஇயேசுகிறிஸ்துவை விசுவாசித்து, பாவத்தை இயேசு
கிறிஸ்துவிடம் அறிக்கையிட்டு வாழ்ந்தாலே மோட்சம்; வேதாகமமே இறைவனை அடைய
ஒரே வழிஎன்றார். போப்பின் அட்டூழியங்களுக்கு முடிவு கட்ட எண்ணினார். தனது
95 கோட்பாடுகளை விட்டன்பரோ ஆலயக் கதவில் ஒட்டி யாரோடு வேண்டுமானாலும்
வாதுக்கு தயார் என்றார். போப் அதிர்ச்சியுற்றார். லூத்தரை மத விலக்கம்
செய்தார். போப்பாண்டவர் ஆணையை லூத்தர் முச்சந்தியில் தீயிட்டுக்
கொளுத்தினார். ஜெர்மன் முழுவதும் போப் மார்க்கத்திற்கு எதிர்ப்பு
வழுத்தது.

லூத்தரை ஒழித்துக்கட்ட போப் பல முயற்சிகள் செய்தார். ஜெர்மன் அரசர்கள்,
பிரபுக்கள், குருமார்கள் சபை முன்னிலையில் 'வேர்ம்ஸ்' என்ன
இடத்தில்கி.பி.1552ல் தம் கொள்கைகளை கைவிட மறுத்தார். லூத்தரை பேரறிஞர்
ஃபிரடெரிக், மற்றும் பல இளவரசர்கள் ஆதரித்ததாலும், ஜெர்மனி முழுவதும்
இவருடைய கொள்கைகள் தீவிரமாய் பரவியதாலும், முகம்மதிய படையெடுப்பு
நிகழ்ந்ததாலும் போப்பாண்டவரால் லூத்தரை ஒன்றும் செய்ய முடியவில்லை. வட
ஜெர்மினி், டென்மார்க், நார்வே, சுவீடன் ஆகிய இடங்களிலும் தீவிரமாய்
பரவினது. ஜெர்மினி முழுமையிலும் இவ்வாறு எதிர்த்துப் போரிட்டதால்
இதற்கு'புரோட்டஸ்டண்டு'எனப்பெயர் வந்தது. லூத்தர்துறவியாய் இருந்து பிறகு
திருமணம் செய்து வாழ்ந்து கி.பி.1546ல் இறந்தார்.)

கி.பி.1528-வில்லியம் டிண்டேல் கிரேக்க மொழியிலுள்ள புதிய ஏற்பாட்டை
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இதற்காக இவர் கொல்லப்பட்டார்.

(அந்த காலத்தில் ரோமன் கத்தோலிக்க ஆயர்கள் மாத்திரமே வேதாகமத்தை படிக்க
முடியும்; மற்றவர்கள் யாரும் வேதாகமத்தை தொடவும் கூடாது, படிக்கவும்
கூடாது என்ற நிர்பந்தம் இருந்தது. பரிசுத்த வேதாகமத்தின் பரிசுத்தம்
தீட்டுப்பட்டுவிடும் என்று காரணம் கற்பித்தார்கள்)

கி.பி.1534-மேலாண்மைச் சட்டம் கொண்டு வந்ததின் மூலம் 8-ம் ஹென்றி மன்னர்,
இங்கிலாந்து திருச்சபையின் தலைவரானார்.

கி.பி.1551-இராபர்ட் ஸ்டீவன்ஸ் என்பவர் வேதாகமத்தின் ஒரு பகுதியான புதிய
ஏற்பாட்டை வசனங்களாக பிரித்தார்.

கி.பி.1554-டியூடர் வம்சத்து டியூடர் மேரி இங்கிலாந்தின் அரசியானார்.

(புரோட்டஸ்டாண்டார் இவரை'இரத்த வெறி பிடித்த மேரி'என்கின்றனர். இலண்டன்
பிஷப் ரிட்லி, காண்டர்பெரி பிஷப் கிராமர், இலார்ஸ்டர் பிஷப் இலாட்டிமர்
இம்மூன்று பேரும் உயிரோடு நெருப்பு வைத்து கொல்லப்பட்டனர்;
பல்லாயிரக்கணக்கான புரோட்டஸ்டாண்டு கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர்)

கி.பி.1558-முதலாம் எலிசபெத்
இங்கிலாந்து அரசியாதல்

கி.பி.1582-போப்பாண்டவர் 8-ம் கிரகோரிபுதுவிதமான கிரகோரியன் ஆண்டினை
அறிமுகப்படுத்தினார்.
(இப்போதுள்ள ஆங்கில ஆண்டு)

கி.பி.1600-இந்தியாவில் ஆங்கிலேய கிழக்கிந்திய வியாபாரக் கம்பெனி நிறுவப்பட்டது.

கி.பி.1609-கலிலியோ கலிலீ டெலஸ்கோப்பை கண்டுபிடித்தார்.

கி.பி.1543ல் போலந்து நாட்டு வானவியலார் கோப்பர்னிக்ஸ், பூமி உருண்டை
என்று கண்டுபிடித்தார். இவருக்குப் பிறகு இத்தாலியைச்சேர்ந்த கலிலியோ
கலிலீ 30 மடங்கு உருப்பெருக்கிக் காட்டும் டெலஸ்கோப்பை உருவாக்கினார்.
கோப்பர்னிக்ஸ் போலவே கலிலியோவும் பூமி உருண்டை என்றும், பூமிதான்
சூரியனைச் சுற்றி வருகிறது என்றும், சூரியன் பூமியைச் சுற்றிவரவில்லை
என்றும் கூறினார்; இதனால் இவரை 7 ஆண்டுகள் சிறையில் தள்ளியது ரோமன்
கத்தோலிக்க மதம்; ஏனெனில் இவர் கூறியது மத விரோதமாம். அக்காலக்
கட்டத்தில் ரோமன் கத்தோலிக்க மதமே ஐரோப்பிய அரசியலில் கொடிகட்டி பறந்தது.

கலிலியோ இறந்ததும் அவரது உடலை பொதுவான கல்லறையில் அடக்கம் செய்ய ரோமன்
மத குருக்கள் அனுமதி மறுத்தனர். மக்கள் நடமாட்டம் இல்லாத வனாந்தரத்தில்
அடக்கம் பண்ணப்பட்டார்; இவர் இறந்து 360 ஆண்டுகளுக்குப் பின்னர் 1992
அக்டோபர் 30ம் நாள்தான் ரோமன் கத்தோலிக்கம் கலிலியோவின் கூற்று உண்மை
என்று ஒப்புக்கொண்டது. பிறகு வனாந்தரத்தில் இவரது கல்லறையை தோண்டி
எலும்புகளை எடுத்து கல்லறை தோட்டத்தில் வைத்தனர்.

கோப்பர்னிக்ஸ், கலிலியோ, மெகல்லன் போன்றோர் கூறுவதற்கு பலநூறு
ஆண்டுகளுக்கு முன்பே(கி.மு.760-750களில்)"அவர் பூமி உருண்டையின்
வீற்றிருக்கிறவர்"என்று ஏசாயா 40:42 எனற பைபிள் வசனம் தெளிவாக
கூறியிருப்பது பரிசுத்த வேதாகமம் என்றும் மாறாதது என்பதை நிரூபிக்கவே
செய்கிறது."பைபிளும், இயற்கையும், கடவுளின் சொல்லால் உருவானவை, பைபிள்
பரிசுத்த ஆவியானவரால் எழுதப்பட்டது" என்று கூறியவர்தான் இந்த கலிலியோ.

சுமார் கி.மு.2000ல் பாபேல் கோபுரத்தை கட்டிய நிம்ரோது காலத்தில்
விக்கிரக ஆராதனை உலகில் தோன்றியதாக கருதப்படுகிறது. இவன்தான்
பாபிலோனியாவைக் கட்டினான்.

நிம்ரோத்தின் மனைவி பெயர் 'செமிராமிஷ்'என்பதாகும். இந்த நிம்ரோது
இறந்தபின் வேசித்தனத்தின் மூலமாக செமிராமிஷ்க்கு பிறந்த
மகன்'தம்மூஸ்'ஆகும். செமிராமிஷ் சர்வாதிகாரமுள்ள ராணியாக இருந்தமையால்
அக்கால பாபிலோனிய மக்கள் அவளையும் அவள் மகன் தம்மூஸையும் கடவுள் என்று
வழிபட ஆரம்பித்தனர். பின்னாளில் இந்த விக்ரக வணக்கம் பல்வேறு பாகங்களில்
அறியப்பட்டு பலவித பெயர்களால் அழைக்கப்படுகிறது. 'அஸ்த்தரோத்' 'பாகால்'
என்று கானானிலும், 'இஸிஸ்', 'ஹோரஸ்' என்று எகிப்திலும் 'ஜுபிடர்' என்று
ரோமாபுரியிலும் 'அப்ரோடைட்' 'ISHTAR' என்று கிரேக்கத்திலும் வழங்கியது.

இவ்வாறாக 'செமிராமிஷ்'-வான ராணியாகவும் அவளது மகனும் வணங்கப்படும்
பழக்கம் பரவியது. இது பண்டைய ரோமாபுரியில் வேர் கொள்ளவே, இது பாபிலோனிய
மார்க்கத்திற்கு தலைநகராயிற்று. இந்த பாபிலோனிய மார்க்கத்து பிரதான
ஆசாரியன்(பூசாரி)'பாண்டிபெக்ஸ் மாக்ஸிமஸ்'(Pontifex Maximus)என்ற
பட்டத்தை சூட்டிக்கொண்டான். பின்பு இப்பட்டம் ஜூலியஸ் சீஸருக்கு
வழங்கப்பட்டு ரோமப் பேரரசர் கான்ஸ்டன்டைன் வரை சூட்டப்பட்டது.
கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவத்தை ரோமப்பேரரசின் மதமாக பிரகடனப்படுத்தினான்.
அதற்கு பிறகு ரோமன் கத்தோலிக்க போப்மார்கள் இப்பட்டத்தைச்
சூட்டிக்கொண்டனர்.

இதனால்கிறிஸ்துவின் போதனைகளோடு பாபிலோனிய இரகசியங்கள் கலந்தமையால்
கிறிஸ்தவத்தின் மூலநீரூற்று களங்கப்பட்டது.பாபிலோனிய சடங்காச்சாரங்கள்
கிறிஸ்தவ சபைக்குள் நுழையும்போது கன்னி மரியாளின் தொழுகை வழிபாடு
ஆரம்பித்தது. ரோமன் கத்தோலிக்க பிரபல திருவிழாக்கள் அனைத்துமே பாபிலோனிய
மார்க்கத்தின் ஆரம்பத்தோற்றத்தை உடையவையே.ஈஸ்டர்என்னும் பெயர் கிறிஸ்தவ
வேத அடிப்படையில் ஏற்பட்டதல்ல. பாபிலோனிய மார்க்கத்திலே வான
ராணிக்குத்தான் ஈஸ்டர்(ISHTAR) என்பதாகும்.
பழைய பாபிலோனின்'இரகசியத்தையே'ரோமன் கத்தோலிக்கம் கையாண்டு வருகிறது.
உலகமெங்குமுள்ள எந்த கத்தோலிக்க ஆலயங்களிலும், அலுவலகங்களிலும்'மரியாளின்
சிலையை'காணலாம். கத்தோலிக்க சபை மரியாளை"வான ராணி", "தேவ தாய்", "சபையின்
தாய்", "உலகின் ராணி"எனவும் விளம்புகிறது. ஆனால்பரிசுத்த வேதாகமத்தில்
இயேசுவின் தாயாருக்கு அப்பேர்பட்ட பட்டங்கள் உள்ளதாக கூறப்படவில்லை.

இப்படியாக கி.பி.519ல் ஈஸ்டர் பண்டிகையயென்று இயேசு கிறிஸ்துவின்
உயிர்த்தெழுதலை கொண்டாடுகிறோம் என்று கூறிக்கொண்டு பாபிலோனிய இஸ்டார்
என்ற தேவதையை நினைவு கூற ஆரம்பித்தார்கள். இது பழைய ஏற்பாட்டு
வேதாகமத்திலே ( நியா 2:13; 10:6, 1 சாமு 7:3,4; 12:10, 1ராஜா
11:33வசனங்களில்)'அஸ்தரோத்து'என்று அழைக்கப்படுகிறது.

தம்மூஸ் என்ற நிம்ரோத் மனைவி செமிராமிஷ் பெற்ற மகன் நினைவாகத்தான்
ஏறக்குறைய 25 பேர் பரிசுத்தமான தேவாலயத்திலே அழுது கொண்டிருந்ததாக
எசேக்கியேல் தீர்க்க தரிசனத்தில் சொல்லுகிறார்(எசேக்கியேல் 8:14-16) இதை
வைத்துதான் கத்தோலிக்க சபையினர் இயேசுவின் சிலுவைப் பாடுகளை
நினைவுகூறுகிறோம் என்று சொல்லிக்கொண்டு லெந்து நாட்கள் என்று சொல்லித்
தொழுகைநாட்கள் கட்டளையாக பிறப்பிக்கப்பட்டது. கத்தோலிக்க மதத்திலே
அனுசரிக்கக்கூடிய ஜெபமாலை முறையும் பாபிலோனிய அடிப்படை மார்க்கமே ஆகும்.

வேதாகமமானது சிலுவை சின்னத்தை வணங்கவோ அடையாளமாக வைத்துக்கொள்ளவோ
கட்டாயப்படுத்தி கூறவே இல்லை.TAMUSஎன்கிற வார்த்தையின் முதல் எழுத்தான T
என்ற எழுத்தை கல்தேயரும், எகிப்தியரும் மந்திர எழுத்தாய் வைத்திருந்தனர்.
T-யில் ஏதோ மந்திரசக்தி இருப்பதாக பாபிலோனியர் எண்ணிக்கொண்டு அந்த T
வடிவத்தில் சிலுவையை செய்துகொண்டு வணங்கவும் உற்சாகப்படுத்தப்பட்டார்கள்;
இதுவும் பாபிலோனிய மார்க்கமேயாகும். R.C சாமியார்கள் திருமணம் செய்யாமல்
தனியராக, பிரம்மச்சரிய விரதம் ஏற்றுக்கொண்டு பூஜைகள் நடத்த ஆரம்பித்தனர்;
சாமியார் மடங்கள், கன்னிமாட வாசம் ஏற்படுத்தப்பட்டன. இந்த விரதம் பூண்ட
சாமியார்களையும், கன்னியர்களையும் தேவதா கன்னிகைக்கு ஒப்பாக்கப்பட்ட
கன்னியாஸ்திரிகள் என்று சொல்லி அவர்களை கனம் பண்ணத்தொடங்கினார்கள்.
இதற்கு வேதத்தில் எந்தவித ஆதாரமும் கிடையாது;இரகசியம் மகா பாபிலோன்.

போப் மார்க்கம் ஒரு கண்ணோட்டம்

போப்என்றால்தந்தைஎன்று பொருள். திருச்சபையின் தொடக்கக் காலத்தில் போப் என
எவரும் அழைக்கப்படவில்லை. கி. பி.4ம் நூற்றாண்டுக்கப்பால் போப் என்றால்
ரோம் நகரத்து பிஷப்பிற்கு உரிய பதவி பெயராகிவிட்டது. போப் 7ம் கிரகோரி
(கி.பி.1073-85) போப் என்ற சொல் திருச்சபையின் தலைவரான ரோம் நகர்
பிஷப்பைக் குறிக்கும் என்ற திட்டவட்டமான அறிவிப்பை வெளியிட்டார்.
கி.பி.8ம் நூற்றாண்டில் போப்பிற்கு அச்சுறுத்தலை கொடுத்த லம்பாடியர்கள்
என்ற முரட்டு இனத்தவரை பிரான்ஸ் மன்னன் 3ம் பெப் தோற்கடித்து விரட்டி,
ரோம் நகரிலும் அதை சுற்றியுள்ள அம்ரியா, மார்ச்சஸ், ரோமக்னா ஆகிய
பகுதிகளை போப்பிற்கு தானமாக கொடுத்தான். போப் அப்பகுதிகளின் மன்னன் என
அழைக்கப்பட்டார்.

பத்தொம்பதாம் நூற்றாண்டில் கரிபால்டி தலைமையில் இத்தாலியை ஒரே நாடாக
ஒருங்கிணைக்கும் முயற்சி நடைபெற்றபோது போப்பின் நாடுகள் பிடுங்கப்பட்டு
ஐக்கிய இத்தாலி உருவானது. எனவே இத்தாலி தேசிய அரசிற்கும் போப்பிற்கும்
இடையில் 50 ஆண்டுகாலம் நல்லுறவு நிலவவில்லை. 1929ல் இத்தாலி சர்வாதிகாரி
முசோலினி போப்புடன்லாட்ரன் உடன்படிக்கைசெய்துகொண்டார் அதன்படி போப் ரோம்
நகரின் மையத்திலுள்ளவாடிகன்என்ற பகுதியின்சுதந்திர
மன்னர்என்றழைக்கப்பட்டார். இதன்மூலம் போப் எந்தவொரு நாட்டிற்கும்
கட்டுப்படாமல் சுதந்திரமாக செயல்பட வழி ஏற்பட்டது.

சுதந்திர நாடு என்ற நிலையில் இந்தியா உட்பட பல நாடுகளோடு தூதரக உறவு
கொண்டுள்ளது. போப்பின் தூதர்அப்போஸ்தலிக் புரோனொன்சியோஎனப்படுகிறார்.
கான்ஸ்டான்டிநோபிளை தலைநகரமாகக் கொண்ட பைசாண்டிய பேரரசின் கிறிஸ்தவம்
கி.பி.8-ம் நூற்றாண்டில் போப்பின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து
தனித்திருச்சபையானது. அதுவைதீகத் திருச்சபைஎனப்பட்டது. இன்று ரஷ்யா,
கிரேக்கம், பல்கேரியா, யுகோஸ்லாவியா, ஆகிய நாடுகளில் வைதீகத்
திருச்சபைதான் பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

கி.பி.726-ல் கான்ஸ்டாண்டிநோபிள் பேரரசரான 3வது லியோபுனிதர்களின்
சொரூபங்களை வணங்குவது விக்கிரக ஆராதனை. எனவே சொரூபங்களை ஆலயங்களிலிருந்து
அகற்றப்பட வேண்டும் என கட்டளையிட்டார். கி.பி.1378ல் இரண்டு
போப்பாண்டவர்கள் இருந்தனர். பிரான்ஸ், காஸ்டைல், ஆரகான்(ஸ்பெயின்)
ஸ்காட்லாந்து, பிளாண்டிஸ் நாடுகள் போப் 7ம் சாந்தப்பரை ஆதரித்தன.
இங்கிலாந்து ஜெர்மினி, ஹங்கேரி நாடுகள் போப் அர்பனை ஆதரித்தன.
இப்படிப்பட்ட பல குழப்பங்களும், பதவிப் போட்டிகளும்,ஆடம்பரங்களும் போப்
மார்க்க சரித்திரத்தில் அநேகம் உண்டு.வாடிகனின் மொத்த பரப்பளவு 109
ஏக்கர்; மக்கள் தொகை 1000 ஆண்கள் மட்டுமே. பெரும்பாலானோர் குருக்கள்
மற்றும் சமயம் சார்ந்த அதிகாரிகள் ஆவார்.

கரோல் வோஜ்டிலா என்ற இயற்பெயர் கொண்ட போப் இரண்டாம் ஜான்பால்
கி.பி.1978ல் அக்டோபர் 22ல் போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்; போப்பாக
பதவி ஏற்கும் முதல் ஸ்லாவ் இனத்தவர், முதல் போலந்து நாட்டுக்காரர் என்ற
பெருமை இவருக்கு உண்டு; 20 ஆண்டுகளில் 117 நாடுகளுக்கு விஜயம்
செய்துள்ளார். 1986லும், 2001லும் இரண்டுமுறை இந்தியாவிற்கு வருகை
புரிந்துள்ளார்.

இவரது மறைமுக முயற்சியால் போலந்தில் கம்யூனிச ஆட்சி வீழ்ந்தது. அதேபோல்
பாராகுவேவில் ஆல்பிரட் ஸ்ட்ரோஸ்னர், சிலியில் அகஸ்டோ பினோசெ,
பிலிப்பைன்சில் பெர்டினன்ட் மார்கோஸ், போன்ற சர்வாதிகாரிகளுக்கு
எதிர்ப்பு தெரிவித்து பேசினார். அதனால் உற்சாகமடைந்த எதிர்ப்பாளர்கள்
அவர்களது ஆட்சிகளை வீழ்த்தினர் என்பது வரலாறு. 1981ல் மெஹ்மத் அலி என்ற
துருக்கியனால் சுடப்பட்டார் எனினும், தப்பி பிழைத்தார். இவர்
காலத்தில்தான் வாடிகன் இஸ்ரேல் நாட்டோடு ராஜீயத் தொடர்பு கொண்டது.
வாடிகன் இன்றைய நிலையிலும் உலகின் முக்கிய அரசியல்சக்தியாக விளங்குகிறது
என்பது மிகவும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

...>>(தொகுப்பு நூல்:"உலக தோற்றம் முதல் உலக அழிவுவரை"; எழுதியவர்:S.
செல்வராஜ்_Grace House, கள்ளக்குறிச்சி)

இஸ்ரவேல் தேசம்
aஆபிரகாம் காலத்தில்

b.யோசுவா கலத்தில்
c.ராஜாக்கள் காலத்தில்

d.இயேசுவின் காலத்தில்
e.தற்போதைய காலத்தில்

a.ஆபிரகாம் காலத்தில் இஸ்ரவேல் தேசம்
ஆபிரகாம் காலத்தில் இஸ்ரவேல் தேசம் கானான் என்று அழைக்கப்பட்டது.
கானானியரும், பெலிஸ்தியரும் அங்கு குடியிருந்தார்கள்.

கானான்,காமின் 4வது மகன்; இவருடைய பெயர் அந்த தேசத்திற்கு வழங்கப்பட்டது.
கர்த்தர் ஆபிரகாமுக்கு வாக்குப்பண்ணின தேசம் கானான். அதற்கு முன்
ஆபிரகாம் மொசப்பொத்தோமியாவிலுள்ளஊர்என்ற கல்தேயருடைய பட்டணத்தில்
இருந்தார். தற்போது இந்த இடம்ஈராக்என்று அழைக்கப்படுகிறது.


b.யோசுவா காலத்தில் இஸ்ரவேல் தேசம்
யோசுவா 12, 13அதிகாரங்கள்
லேவி கோத்திரத்தார் ஆண்டவருக்கு என்று பிரித்தெடுக்கப்பட்டார்கள். எனவே
அவர்களுக்கு இஸ்ரவேலின் நடுவே சுதந்திரம் இல்லை. யோர்தானுக்குக் கிழக்கே
ரூபன், காத், மனாசேயின் பாதிக்கோத்திரத்தாருக்கும், யோர்தானுக்கு மேற்கே
மற்ற 9.1/2 கோத்திரங்களுக்கும் சுதந்தரம் கிடைத்தது.
(சிமியோன், யூதா, செபுலோன், இசக்கார், தாண், ஆசேர், நப்தலி, எப்பிராயீம்,
பென்யமீன், மனாசேயின் பாதிக்கோத்திரம்)

கானான் தேசத்தை இஸ்ரவேல் புத்திரர் சுதந்தரித்தபின்இஸ்ரவேல்தேசமாக மாறிவிட்டது.

C.ராஜாக்கள் கலத்தில் இஸ்ரவேல் தேசம்.
யோசுவாவிற்குப் பிறகு தேசத்தில் இராஜாக்கள் இல்லை. நியாதிபதிகள் தேசத்தை
நியாயம் விசாரித்தார்கள். சாமுவேல் தீர்க்கதரிசி காலத்தில் தேவன்
சாமுவேல் மூலமாக சவுலை ராஜாவாக ஏற்படுத்தினார்
üஇஸ்ரவேலின் முதல் இராஜா=சவுல்.பென்யமீன் கோத்திரம்ம்; தகப்பன் பெயர்கீஸ்.

üஇரண்டாவது இராஜா=தாவீது;யூதா கோத்திம்; தகப்பன் பெயர் ஈசாய்.

üமூன்றாவது இராஜா=சாலொமோன்.யூதா கோத்திரம்; தகப்பன் பெயர் தாவீது. இந்த
3ராஜாக்களும் சமஸ்த இஸ்ரவேல் மேலும் இராஜாக்களாய் இருந்தனர். பின்பு
தேசம் பிரிக்கப்பட்டது. சவுலின் கீழ்ப்படியாமையினிமித்தம் தேவன்
இராஜ்யபாரத்தை தாவீதுக்குக் கொடுத்தார். தாவீது தேவனின்
இருதயத்திற்கு ஏற்றவனாய்க் காணப்பட்டான். தாவீதுக்குப் பிறகு அவன் மகன்
சாலொமோன் இராஜாவானான். அவன் கர்த்தரின் கட்டளைகளின்படி வாழாதபடியினால்
அவன் குமாரனாகிய ரெகொபெயாம் காலத்தில் யூதா, இஸ்ரவேல் என்று
பிரிக்கப்பட்டது. அதில் யூதா தேசத்திற்கு கர்த்தர் தாவீதின் நிமித்தம்
சாலொமோனின் மகன்(ரெகொபெயாம்) இராஜ்யபாரம்பண்ண அநுக்கிரகம் செய்தார்.

d.இயேசுவின் காலத்தில் இஸ்ரவேல் தேசம்.

இஸ்ரவேல் தேசம், கலிலேயா, சமாரியா, யூதேயா என 3 பிரிவாக இருந்தது.
ரோமர்கள் ஆட்சி செய்த காலத்தில் யூதா யூதேயாவாக மாற்றப்பட்டது; தலைநகர்
எருசலேம்
இஸ்ரவேல் ஏன் சமாரியாவாக மாறியது?

1இரா 16:23..... யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் 31ம் வருசம் இஸ்ரவேலின்மேல்
உம்ரி ராஜாவாகி 12வருசம் ராஜ்யபாரம் பண்ணினான். அந்த நாட்களில் உம்ரி
சமாரியா மலையை சேமேர் என்பவனிடமிருந்து 2தாலந்து வெள்ளிக்கு வாங்கி அதில்
கோட்டை கட்டினான். அதில் ஒரு நகரத்தையும் கட்டி அதை இஸ்ரவேலுக்குத் தலை
நகராக மாற்றினான். அந்தப் பட்டணத்துக்கு, அந்த மலையின் எஜமானாயிருந்த
சேமேரின் பெயரின்படியே சமாரியா என்று பெயரிட்டான். 2இரா 17:15.... ஓசெயா
ராஜாவின் ஒன்பதாம் வருசத்தில் அசீரியா ராஜா(அசீரியாவின் தலைநகரம் நினிவே
பட்டனம்) சமாரியாவைப்பிடித்து இஸ்ரவேலரை அசீரியாவுக்கு சிறையாகக்
கொண்டுபோனான். அப்பொழுது அங்கு புறஜாதிகள் வந்து இஸ்ரவேலில்
குடியேரி்னர். அவர்கள் யூதர்களோடு கலந்து வாழ்ந்தார்கள். அங்குள்ளவர்கள்
சமாரியர்கள் என அழைக்கப்பட்டனர். கலப்பின மக்களாகிய இவர்களை யூதர்கள்
வெறுத்தனர். எனவே இவர்கள் தேவாலயத்தில் தொழுதுகொள்ள முடியாத நிலை
ஏற்பட்டது. 2இரா 17:41....மனாசே என்ற ஆசாரியன் கெரிசிம் மலையில் ஒரு
தேவாலயத்தைக் கட்டி எருசலேம் தேவாலயத்தின் ஆராதனை முறைகளைக்
கொண்டுவந்தான். ஆனாலும் யூதர்கள் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. சமாரியர்
தேவனைக் கெரிசீம் மலையில் தொழுதுகொண்டு வந்தார்கள்(யோவா 4:20)
கலிலேயா:கலிலேயா என்பது இஸ்ரவேலின் ஒரு பகுதி. கலிலேயா கடலின் அருகில்
இருந்தபகுதி கலிலேயா என்று அழைக்கப்பட்டது. கலிலேயாவிலும் அநேக
புறஜாதிகள் இஸ்ரவேலருடன் கலந்து வாழ்ந்தனர். அங்கு வாழ்ந்த இஸ்ரவேலரை
கலிலேயர்கள் என்று அழைத்தனர். இவர்கள் படிப்பறிவு குறைந்தவர்கள்; எனவே
இவர்களையும் யூதர்கள் வெறுத்தனர். அநேகர் மீன் பிடிக்கும் தொழில்
செய்துவந்தனர்.

இயேசுவின் காலத்தில் இஸ்ரவேல் தேசம் ரோமர் ஆட்சியின் கீழ் இருந்தது.
üரோம பேரரசர்கள் தங்களுக்கு கீழ் தேசாதிபதிகளை ஏற்படுத்தி ஆட்சி செய்தார்கள்.

üரோம பேரரசர் எருசலேமை பிடித்தபின் யூதேயா ரோமர்கள் ஆட்சிக்குட்பட்டது.

üஇஸ்ரவேல் ரோமர்களின் ஆட்சியின்கீழ் வந்தது.

ரோம பேரரசர் அந்திப்பார்தோர் என்பவரை கி.மு.47ல் தேசாதிபதியாக இஸ்ரவேல்
தேசத்திற்கு ஏற்படுத்தினான்; இவன் இதுமேயா வம்சத்தைச் சேர்ந்தவன்; யூதன்
அல்ல.

அந்திப்பார்தோரின் பின்பு அவன் மகன் மகா ஏரோது என்பவன் தேசாதிபதியாக
வந்தான். இவன் கலிலேயா, சமாரியா, யூதேயா, பெரேயா என்ற இந்த 4
பகுதிகளையும் ஒன்றாக சேர்த்து யூதேயா என்று ஆட்சி செய்து வந்தான். யூதேயா
என்றால் யூதர்களின் சீமை என்று அர்த்தம். இவன் காலத்தில் அகஸ்து ராயன்
ரோம பேரரசனாக இருந்தான்.

மகா ஏரோது(கி.மு33-கி.பி 4)
Øஇயேசு பிறந்தபொழுது தேசாதிபதியாக இருந்தவன்.

Ø3 ஞானிகள்(சாஸ்திரிகள்) இயேசுவின் பிறப்பை இவனுக்கு அறிவித்தார்கள்.

Øஇவன் 2வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொன்றவன்.

Øயூதர்களுக்கு கி.மு.20-10ல் தேவாலயத்தைக் கட்டினான்.

இனுக்குப்பின் இவனின் பிள்ளைகள் தேசத்தை 4 பங்காக பிரித்து ஆட்சி செய்து
ஆட்சிசெய்து வந்தார்கள். ஆகவே இவர்கள் கால்பங்கு தேசாதிபதிகள் என்று
அழைக்கப்பட்டார்கள்.

இவர்கள் காலத்தில் திபேரியுராயன் ரோமபேரரசனாகவும், பிலாத்து
தேசாதிபதியாகவும் இருந்தார்கள்.

vஏரோதுஅர்கிலேயு

üயூதேயா, சமாரியாவின் கால்பங்கு தேசாதிபதி.

üஇவன் காலத்தில் யோசேப்பு(இயேசுவின் வளர்ப்புதகப்பன்) யூதேயாவிற்கு
வரபயந்து கலிலேயாவில் வந்து தங்கினான்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.