<b>II சாமுவேல் 21:1
தாவீதின் நாட்களில் மூன்று வருஷம் ஓயாதபஞ்சம்உண்டாயிருந்தது; அப்பொழுது
தாவீதுகர்த்தருடையசமுகத்தில் விசாரித்தான்;கர்த்தர்: கிபியோனியரைக்
கொன்றுபோட்ட சவுலுக்காகவும், இரத்தப்பிரியரான அவன் வீட்டாருக்காகவும் இது
உண்டாயிற்று என்றார்.</b>
இந்த வசனத்தில் மூலம் நாம் அறியவேண்டிய சில ஆவிக்குரிய உண்மைகள்:
<h2>1. மூன்று வருஷம் ஓயாதபஞ்சம்</h2>
பொதுவாக ஏதாவது ஒரு இயற்க்கை பேரிடர் வரும்போது அது இயற்கையாகவே வருவது
என்று பலர் சொல்கிறார்களா. ஆனால் மேலேயுள்ள சம்பவத்தின் மூலம் இயற்க்கை
என்று தனியாக ஒன்றும் இல்லை இறைவன்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறார்
என்பதை அறிய முடிகிறது.
இன்றும் மழையில் நனைத்தலை ஜலதோஷம் வரும் ஐஸ் தின்னல் காய்ச்சல் வரும்
மாசு காற்றை சுவாசித்தால் கேடு வரும், கலப்பட பொருளை சாப்பிடடாள் கான்சர்
வரும் என்றெல்லாம் உலகம் சொல்கிறது. இதெல்லாம் உண்மையாக இருக்கலாம்
ஆனால் இவைகள் யாவையும் ஒரு நடைமுறை காரணமேயன்றி உண்மையான காரணம் அல்ல.
மழையில் நனைத்தவனுக்கு எல்லாம் காச்சல் வருவதும் இல்லை, கலப்படமான பொருளை
தின்னவருக்கு எல்லாம் கான்சர் வருவதும் இல்லை. காரணம் நமக்கு வரும் எந்த
துன்பமும் இயற்க்கையானது அல்ல. எந்த ஒரு துன்பத்துக்கு கர்த்தரிடத்தில்
நிச்சயமாக நீதியான காரணம் இருக்கும்.
<b>ஏசாயா 28:29
இதுவும் சேனைகளின்கர்த்தராலேஉண்டாகிறது; அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர்,
செயலில் மகத்துவமானவர்</b>
<h2>2. தாவீது கர்த்தருடைய சமுகத்தில் விசாரித்தான்</h2>
இன்று அநேகர் சிறு காச்சல் தலைவலி என்றாலும் உடனே டாக்ட்டரை பார்க்க
ஓடுகிறார்கள். தங்களுக்கு எதோ பெரிய நோய் வந்துவிட்ட்து என்று எண்ணி
கலங்குகிறார்கள் ஆனால் தாவீது செய்வது என்ன?
எந்த துன்பம் வந்தாலும் முதலில் கர்த்தரிடத்தில் அமர்ந்து விசாரிக்க
வேண்டியது அவசியம் ஆகிறது. என் வாழ்வில் நான் அனுபவித்த ஒரு சிறு
தலைவலியில் இருந்து அனைத்து பிரச்சனைகளுக்கும் கர்த்தர் காரணத்தை
சொல்லியிருக்கிறார்.
<b>எரேமியா 33:3
என்னைநோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ
அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.</b>
என்று சொல்லியிருக்கும் கர்த்தர், நிச்சயம் உங்களுக்கும் பதில்
அளிப்பார். பதில் இல்லை என்றால் நாம் தேவனுடன் இருக்கும் தொடர்பு நிலையை
சரி உடனடியாக செய்வது அவசியம்
<h2>3. கிபியோனியரைக் கொன்றுபோட்ட சவுலுக்காகவும், இரத்தப்பிரியரான அவன்
வீட்டாருக்காகவும் இது உண்டாயிற்று</h2>
நாம் செய்த தவறு மட்டுமல்ல நம்மை சார்ந்தவர்கள் நம் வீட்டில்
இருப்பவர்கள் செய்யும் தவறுகள் கூட நம்மை பாதிக்கும். அவர்கள் நம்முடன்
தொடர்பில் இருப்பதால் அவர்களுக்காக நிர்ணயிக்கப்படட துன்பம் நமக்கும்
வேதனையை தரும்.
எனவே யாரும் எக்கேடும் கேட்டு போகட்டும் என்று விட்டுவிட முடியாது.
மனைவி பிள்ளைகளையும் கர்த்தருடைய வழியில் சரியாக நடத்தவேண்டியது நமது
கடமை ஆகிறது.
இஸ்ரவேலர் கானாக்கு போகும் வழியில் அவர்களுக்குள் இருந்த ஆகான் என்ற
ஒருவன் செய்த தவறால் இஸ்ரவேலர் ஆயி மனுஷர்களுக்கு முன்னாள்
முறியடிக்கப்படட சம்பவம் நமக்கு தெரியும்.
<b>யோசுவா 7:25
அங்கே யோசுவா: நீ எங்களைக்கலங்கப்பண்ணினது என்ன?
இன்றுகர்த்தர்உன்னைக்கலங்கப்பண்ணுவார் என்றான்; அப்பொழுது
இஸ்ரவேலரெல்லாரும் அவன்மேல் கல்லெறிந்து, அவைகளை அக்கினியில்
சுட்டெரித்து, கற்களினால் மூடி
இறுதியாக எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அது இயற்க்கையாயினாலும் சரி
செயற்கை ஆனாலும் சரி அதற்க்கு கர்த்தரிடத்தில் மாத்திரமே நிரந்தர தீர்வு
உண்டு. மாற்று தீர்வுகள் எல்லாம் நிரந்தரமற்றது என்பதை நாம் அறிந்து
விசுவாசித்து அவரிடத்தில் சேரக்கடவோம் அவர் இரக்கத்தில் ஐஸ்வர்யர்.
II சாமுவேல் 24:14. அப்பொழுது தாவீதுகர்த்தரைநோக்கி: கொடிய இடுக்கணில்
அகப்பட்டிருக்கிறேன், இப்போது நாம்கர்த்தருடையகையிலே விழுவோமாக; அவருடைய
இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான்.</b>
__________________
<h4>நீதியின் பாதையில்ஜீவன் உண்டு;அந்தப் பாதையில்மரணம்இல்லை. ( நீதி
12:28)அவர்(கர்த்தராகியதேவன்)மரணத்தைஜெயமாய்விழுங்குவார்;( ஏசா
25:8)</h4>
<b>நன்றி...!!!
Debora</b>