அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி (அறிமுகம்) Autor : O.J. Gibson Translator : E. Ravi Kumar

அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சியை நல்முறையில் பயன்படுத்துவது எப்படி
என்பதற்கு பின்வரும் ஆலோசனைகளைப் பின்பற்றுவது
பயனுள்ளதாயிருக்கும்.





1) தேவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள், தேவனுடைய வசனத்தைப் புரிந்துகொள்தற்கு
நீங்கள் அவரிடமே உதவிகோருங்கள். சங்கீதம் 119:130ல் காணப்படும்
வாக்குத்தத்தத்தை உரிமைகொண்டாடுங்கள்: உம்முடைய வசனத்தின் பிரசித்தம்
வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும். தேவனுடைய உதவியின்றி
அவருடைய வார்;த்தையை உண்மையாகத் தெரிந்துகொள்வது இயலாத காரியமாகும்
(2.கொரி.2:14).

2) வகுப்புக்கள் ஆரம்பிக்குமுன் பாடங்களைத் தயார் செய்துகொள்ளவும்.

அ) வீட்டுப் பாட வினாக்களுக்கு விடை எழுதுங்கள். வழிகாட்டியில்
கூறப்பட்டுள்ள அனைத்துக் கருத்துக்களையும் பின்பற்றவும். ஏதாவது வினாவை
பற்றிக் குழப்பம் இருக்குமானால் அவ்வினாவை விட்டுவிட்டு அடுத்த
வினாவிற்குச் செல்லவும்.

ஆ) புத்தகக் குறிப்பை வாசிக்கவும். பாடத்தை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை
படிக்கவும். முக்கிய கருத்துக்களுக்கு அடிக்குறியீடிடவும்.
புரிந்துகொள்ளாதவைகளை குறித்துக்கொள்ளுங்கள். கேள்வி இருக்குமானாலும்
குறித்துக்கொள்ளுங்கள்.





இ) கொடுக்கப்பட்டுள்ள எல்லா வேதவசனங்களையும் பார்க்கவும். புத்தகத்தின்
பெயர், அதிகார எண், வசன எண் ஆகியவை முக்காற்புள்ளியால்
பிரிக்கப்பட்டிருக்கும். (உதாரணம்: கொலோ.3:23).

3) வகுப்புக்களில் தவறாமல் பங்குபெறவும். சிறுகுழுக்களாக
பகிர்ந்துகொள்வதற்கும் அதேபோல் விரிவுரையாற்றுவதற்கும் நேரம் உள்ளது.
உங்கள் வினாக்களும், விளக்கங்களும், பிறர் தங்கள் கருத்தை பகிர்ந்துகொள்ள
உற்சாகப்படுத்தும்.

4) உங்கள் புத்தகக்குறிப்புகளையும், உபகரணங்களையும்
பத்திரப்படுத்துங்கள். மேலும் படிப்பதற்கும், பிறரோடு
பகிர்ந்துகொள்வதற்கும் இவைகள் உதவியாக இருக்கும்.

பாடங்களின் தலைப்புகள்:-

01) சுவிசேஷத்தின் பரந்த காட்சி

02) கிறிஸ்துவைப் பற்றி ஒரு கண்ணோட்டம்

03) கிறிஸ்துவின்
கர்த்தத்துவம்

04) ஞானஸ்நானத்தில் அடக்கம் பண்ணப்படல்

05) நித்திய
இரட்சிப்பு





06) சபை வாழ்வு

07) சோதனையை மேற்கொள்ளல்

08) தேவனோடு நேரம் செலவிடுதல்

09) தேவனுடைய வார்த்தையை உட்கொள்ளல்

10) எங்களுக்கு ஜெபிக்கக் கற்றுத்தாரும்

11) நாம் அவரின் சாட்சிகளாய் இருக்கின்றோம்

12) அனுபவ சாட்சி

13) கர்த்தருடைய இராப்போஜனம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.