II கொரி 4:17
"மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு
அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான
நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது."
கர்த்தர் நம்மை காணப்படாதவைகளான நித்திய கன மகிமைக்கு
அழைத்திருக்கிறார்.நமக்கு இந்த உலகத்தில் உபத்திரவங்கள் உண்டாகலாம்.நாம்
எல்லாப் பக்கமமும் நெருக்கப்படலாம்.
துன்பப்படுத்தப்படலாம். கீழே தள்ளப்படலாம்.ஆனால், நம்மை அழைத்த தேவன்
இந்த அநித்தியமான துன்பங்களை ஒரு நாள் நீக்குவார்.
காணப்படும் இந்த உலகம்,அதிலுள்ள காரியங்கள் யாவும் அநித்தியமானவைகள்.
காணப்படாத காரியங்களே நித்தியமானவைகள்.நம் இருதயத்தின் ஆழமான
வடுக்கள்,நாம் அனுபவித்த துன்பங்கள்,சரீரத்திலே காணப்படும் வியாதிகள்
எல்லாம்,அதி சீக்கிரத்தில் நீங்கும்.
இப்படிப்பட்ட துன்பங்களை சகிக்கும் தேவனுடைய பிள்ளைகள் பாக்கியம்
பெற்றவர்கள்.அவர்களுக்கு நித்திய கன மகிமை காத்திருக்கிறது.
"ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ
நித்தியமானவைகள்."(வ.18).
ஆமென்.