"கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன்
வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்". (அப் 16:31)
1. ஜெப வீடு:
மத்தேயு 21:13 "என்னுடைய வீடு ஜெப வீடு என்னப்படும் என்று
எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்றார்".
2. தேவ வீடு:
எபிரெயர் 3:2 "மோசே தேவனுடைய வீட்டில் எங்கும்
உண்மையுள்ளவனாயிருந்ததுபோல, இவரும் தம்மை ஏற்படுத்தினவருக்கு
உண்மையுள்ளவராயிருக்கிறார்".
3. மேல் வீடு:
அப்போஸ்தலர் 1:13 "அவர்கள் அங்கே வந்தபோது மேல் வீட்டில் ஏறினார்கள்;
அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்புவும்,
தோமாவும், பர்த்தொலொமேயும், மத்தேயும், அல்பேயுவின் குமாரனாகிய
யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய
யூதாவும் தங்கியிருந்தார்கள்".
4. பெரிய வீடு:
II தீமோத்தேயு 2:20 "ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான
பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில
கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள்".
5. கலியாண வீடு:
மத்தேயு 25:10 "அப்படியே அவர்கள் வாங்கப் போனபோது மணவாளன்
வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடே கூடக் கலியாண வீட்டிற்குள்
பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது".