யோவான்ஸ்நானகனின் ஊழியம் என்றால் என்ன என்கிற தெளிவில்லாமலே, கிறிஸ்தவ
உலகில் அநேகர் தங்களை, யோவான்ஸ்நானகனின் ஊழியத்திற்காக
அழைக்கப்பட்டவர்கள் என்று மார்தட்டிக் கொள்கின்றனர். அவரது ஊழியத்தை
செய்ய விரும்புகிறவர்கள் அவரது வாழ்க்கையையும் பின்பற்ற வேண்டும் என்கிற
காரணத்திற்காகவே, மத்தேயு 3 வது அதிகாரம் நான்காவது வசனத்தில் மத்தேயு
சுவிசேஷகன் யோவானின் வாழ்க்கை குறித்த சிறு குறிப்பை
தருகிறார்.யோவான்ஸ்நானகன் பங்களாவில் அமர்ந்துக்கொண்டு பரதேசிகளை அவர்
பரலோகம் அழைக்கவில்லை, மாறாக பரதேசியாக இருந்துக்கொண்டு பரதேசிகளையும்,
பங்களாவாசிகளையும் பரலோகம் அழைத்தார்.தார்பரியமான வாழ்க்கை
வாழ்ந்துகொண்டு தரித்திரருக்கு உதவி செய்ய சொல்லவில்லைமாறாக, தேவ
இராஜ்ஜியத்திற்க்காக தரித்திரத்தை தெரிந்துகொண்டு தங்களுக்குரியதை விற்று
தரித்திரருக்கு கொடுக்க சொன்னார்.பவுசு வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டு
பாவிகள் பரலோகம் செல்ல தகுதியற்றவர்கள் என்று நியாயம்தீர்க்கவில்லைமாறாக
பாவிகளின் பாவங்களை சுட்டிக்காட்டி பாவங்களை மன்னிக்கும் பரலோக தேவனுக்கு
நேராக அவர்களின் இருதயத்தை திருப்பினார்.
இன்றைக்கு, யோவான்ஸ்நானகனாக அழைக்கப்பட்டேன் என்று சொல்லும் அநேகர்
பங்களாவில் இருந்துக்கொண்டு, பரதேசிகளை பரலோகம் அழைப்பதும்,
தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து வைத்துக்கொண்டு உள்ளதை விற்று
தரித்திரருக்கு கொடு என்று கூப்பாடு போடுவதும், பாவிகளின் பாவங்களை
சுட்டிக்காட்டுகிறேன் என்று சொல்லி தங்கள் பாவங்களை உணராமல் இருப்பதும்
வேடிக்கையாக மட்டுமல்ல, தேவநிந்தனையாகவும் தெரிகிறது.
யோவான்ஸ்நானகனின் ஊழியம் செய்கிறேன் என்று சொல்பவர்களில் எத்தனை பேர்
தங்களின் பவுசு வாழ்க்கையை விட்டு விட்டு தேவராஜ்ஜியத்திற்காக பரதேசியாக
வர ஆயத்தமாயிருக்கிறார்கள்? அப்படிப்பட்டவர்களில் எத்தனைப்பேர்
பரம்பரைகென்று சேர்த்து வைத்த சொத்தை விற்று தரித்திரருக்கு கொடுத்து
விட்டு பரலோகராஜ்ஜியத்திற்காக தரித்திரத்தை ஏற்றுக்கொண்டு, குடும்பமாக
தரித்திரருக்கு சுவிசேஷத்தை அறிவிக்க ஆயத்தமாயிருக்கிறார்கள்? அப்படி
செய்ய ஆயத்தமாயிருப்பவர்களேயோவான்ஸ்நானகனின் ஊழியத்தை செய்ய
தகுதியானவர்கள்.அப்படி செய்ய ஆயத்தமில்லாதவர்களால் வறண்ட பிறரின்
ஆவிக்குரிய வாழ்வை செழிப்பாக்கவும் முடியாது, தாகத்தோடிருக்கும் பிறரின்
ஆத்தும தாகத்தை தீர்க்கவும் முடியாது. காரணம், அவர்கள் மழையில்லா
மேகங்களையும், தண்ணீரில்லா சுனைகளையும் போன்றவர்கள்.
நன்றி...!!!
G. பால்ராஜ்