“வாசனை”

1. அறிவின் வாசனை:
II கொரிந்தியர் 2:14 "கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை
வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற
அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்"

2. மரண வாசனை // ஜீவ வாசனை:
II கொரிந்தியர் 2:16 "கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரண
வாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவ
வாசனையாகவும் இருக்கிறோம். இவைகளை நடப்பிக்கிறதற்கு எவன் தகுதியானவன்?"

3. சுகந்த வாசனை:
பிலிப்பியர் 4:18 "எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும்
உண்டாயிருக்கிறது; உங்களால் அனுப்பப்பட்டவைகளைச் சுகந்த வாசனையும்
தேவனுக்குப் பிரியமான சுகந்த பலியுமாக எப்பாப்பிரோதீத்துவின் கையில்
வரப்பற்றிக்கொண்டபடியால் நான் திருப்தியடைந்திருக்கிறேன்"

4. உகந்த வாசனை:
ஏசாயா 11:3 "கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த
வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது
காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும்"
"வஸ்திரங்களின் வாசனையை மோந்து: இதோ, என் குமாரனுடைய வாசனை கர்த்தர்
ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப் போல இருக்கிறது" (ஆதியாகமம் 27:27)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.