சிலுவை வழியே, கிருபையின் கெம்பீரம்!

மே ன்மையான "சுவிசேஷத்திற்காக..... தீங்கனுபவிப்பதற்கே" தீமோத்தேயு
"கிருபையில் பலப்பட வேண்டும்" என பவுல் கூறினார்
(2தீமோத்தேயு. 1:8; 2:1).

சுவிசேஷம் கற்றுத்தரும் பாடுகளுக்குள் பிரவேசிப்பவர்களுக்கு"தேவ
கிருபை"ஆயத்தமாயிருக்கிறதேயல்லாமல், சுவிசேஷத்தினால் மண்ணுக்குரிய என்ன
ஆதாயம் பெறலாம்?என்றிருப்பவர்களுக்கு'தேவ கிருபை'ஒருக்காலும் விருதாவாய்
கையளிக்கப்படுவதேயில்லை!'கொடூர'கொல்கொதா சூழ்நிலை மத்தியிலும், எத்தனை
கெம்பீரமாய்"சிலுவையின் மேன்மையை"நம் இரட்சிப்பின் அதிபதி விளங்கச்
செய்துவிட்டார்!

'பட்ட மரத்தின்'வாழ்க்கை வாழும் ஜனங்கள்தான், அந்த வறண்ட'சுய
வாழ்விலிருந்து'விடுபடுவதற்காக துயரம் கொண்டு அழவேண்டும்.....

ஆனால் மகிழ்வுடன் பிதாவின் சித்தம் செய்த அவரோ,'எனக்காக அழாதீர்கள்'
என்றே கொல்கொதா மேட்டில், மகிமையின் சுவிசேஷத்திற்கு கர்ஜனை புரிந்தார்!
அன்று, எதைச் செய்ய வேண்டாம் எனக் கூறினாரோ, அதைத்தான் இன்றைய
கிறிஸ்தவம் "லெந்து நாட்கள்" என இயேசுவுக்காய் துக்கம்
கொண்டாடுகிறார்கள்!!

இவர்களின்"புனித வெள்ளி"ஆசரிப்புகளை இயேசு எப்போது
கேட்டார்?இவ்வாறெல்லாம் அனுசரிப்புகளை ஏற்படுத்தி, ஜனங்களின் கண்களை
சாத்தான் குருடாக்கி.....வாழ்நாளெல்லாம்(அனுதினமும்)
பின்பற்ற வேண்டிய உன்னத"சிலுவையின் பாதையை"
அவர்களுக்கு மறைத்து வைத்து விட்டான்!

வெளிப்புற சரீர ஒடுக்கம் மிக எளிது, அதை அஞ்ஞானிகளும் செய்கிறார்கள்.
அதற்கொன்றும் தேவ கிருபை தேவை இல்லை!கடினம் கொண்ட சுயம்"கிறிஸ்துவின்
பாடுகளுக்குள்"உட்பட்டு, அவைகளுக்குப் பின்வரும் மகிமையை சுதந்தரிப்பதே,
"உங்களுக்கு உண்டான கிருபை"என உள்ளம் பூரித்தார் பேதுரு! (1பேதுரு1:10-11).

நன்றி...!!!
- சகோ. ரத்னம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.