ஆயிர வருட அரசாட்சி கட்டுரை (Charles MSK) பாகம் - 2

ஆயிரம் வருடமாக சிறையில் வைக்கப்பட்டிருந்த சாத்தான் விடுவிக்கபடுவான் (வெளி 20:1-3). சிறிது காலத்திற்குள் அவன் உலகமெங்கும் உள்ள அநேக மக்களை தன் வசபடுத்தி, புரட்சி செய்வான். தேவனால் அனுப்பபடும் அக்கினிக்கு அவர்கள் இறையாவார்கள். மேலும் நரகத்திற்குள் சாத்தான் தள்ளப்படுவான் (வெளி 20:7-10; ஏசா 65:20-25).

இனி கொடுக்கபட்டுள்ள வசனங்களை ஆராய்வோம்:-

வெளி 20:1-3

1. ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கிவரக்கண்டேன்.

2. பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.

3. அதற்குப் பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும்.

கவனியுங்கள்:-

இயேசு இந்த தூதனிடம் பாதாளத்தின் திறவுகோலை அளித்து சாத்தானை பாதாளத்தில் கட்டி வைக்க செய்கிறார் (வெளி 1:18). எல்லா அசுத்த ஆவிகளும் சாத்தானுடன் பாதாளத்தில் தய்ளப்படும் என்று (ஏசா 24:22-23) கூறுகிறது.

வெளி 20

7. அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,

8. பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை
மணலத்தனையாயிருக்கும்.

9. அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது.

10. மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.

கவனியுங்கள்:-

சாத்தானுக்கு அளிக்கப்பட்ட இறுதி வாய்பை இந்த வசனங்கள் காட்டுகிறது. பாதாளத்தில் 1000 வருடம் சிறையில் இருந்தும் சற்றும் திருந்தாத சாத்தான் இறுதிகட்டமாக போர்த்தொடுத்து அழிவான்.

ஏசாயா 65

20. அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான்; நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.

21. வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள்.


22. அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனி புசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.

23. அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை, அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை; அவர்களும், அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும்கர்த்தராலேஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்.

24. அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவுகொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்.

25. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்; புழுதி சர்ப்பத்துக்கு இரையாகும்; என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லையென்றுகர்த்தர்சொல்லுகிறார்.

இந்த வசனங்களை
ஆராய்வோம்:-

இந்த 5வசனங்களும் ஆயிர வருட ஆட்சி காலத்தின் நிலை என்ன என்பதை விவரிக்கிறது. மரணமும், பாவியும் (வச.20) புதிய வானம் புதிய பூமியில் இல்லை. எனவே இங்கு சொல்லப்பட்டவை ஆயிர வருட அரசாட்சியில் நிறைவேறும் என்பது தெளிவு.

வச.20 ன் விளக்கம்:

ஆயிர வருட அரசாட்சியில் மரணம் இருக்கும். மரணத்துகேதுவான பாவம் செய்தால் கர்த்தருடன் ஆளுகை செய்யும் பரிசுத்தவான்களால் அவர்கள் மரண தன்டனை பெறுவார்கள் (சங் 149:6-9; 1கொரி 6:2; வெளி 20:4-6). ஆயிர வருட அரசாட்சிக்குள் அனுமதிக்கப்படுவோரில் பாவிகள் இருப்பார்கள். ஏனெனில் கர்த்தருடைய மக்களுக்கு உதவி செய்த யாவரும் (பாவிகளும்) அதற்குள் அனுமதிக்கபடுவார்கள் (மத் 25:31-40). கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு பின்னர் யூதர்கள் உலகெங்கும் கர்த்தரின் மகிமையை அறிவிப்பார்கள் (ஏசா 66:19-21). இவ்வாறு அறிவிக்கபடுவதை கேட்பவர்கள் அதுவரை இரட்சிக்கபடாதவர்கள் அல்லவா...! எனவே ஆயிர வருட ஆட்சியில் பாவிகள் அனுமதிக்கபடுவார்கள்.

மேலும், கர்த்தருக்கு கீழ்ப்படியாமலும் அவரை தேடாமலும் இருந்த தன்டனை பெறும் நாடுகள் ஆயிர வருட அரசாட்சியின் போது உண்டு என்பதை சகரியா 14:17-19 விளக்குகிறது. ஆயிர வருட அரசாட்சியின் இறுதிவரை சத்துருக்கள் இருப்பார்கள் (1கொரி 15:24-25). எல்லாவற்றிற்க்கும் மேலாக ஆயிர வருட அரசாட்சியில் இருக்கும் மனிதர்களில் பலர் இறுதியில் சாத்தானுடன் சேர்ந்து கர்த்தருக்கு எதிராக போரிடுவார்கள் (வெளி 20:7-9). இதிலிருந்து ஆயிர வருட ஆட்சியில் பாவிகள் உண்டு என்பது தெளிவு.

வச.23ன் படி ஆயிர வருட அரசாட்சியில் குழந்தைகள் பிறக்கும் என்பது வச.20, 23 லிருந்து தெளிவாக தெரிகிறது.

வச.24ன் படி ஆயிர வருட அரசாட்சியிலும் புதிய பூமியிலும் ஜெபம் பன்னுதல் தொடரும். ஜெபத்திற்க்கு உடனடி பதில் கிடைக்கும் என்பதும் தெளிவு.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.