ஆயிர வருட அரசாட்சி கட்டுரை (Charles MSK) பாகம் - 1

இயேசுவின் இரண்டாம் வருகையை தொடர்ந்து கிறிஸ்து இவ்வுலகை (நாம் வாழும் இந்த உலகை) ஆயிரம் ஆண்டு அரசாளுவார் இதுவே ஆயிர வருட ஆரசாட்சி ஆகும்.

இயேசுவின் ஆளுகைக்குள் உலகின் பகுதிகளை கிறிஸ்துவுக்குள்ளான பரிசுத்தவான்கள் அரசாளுவார்கள் இவைகளை குறித்து (தானி 7:21,27; வெளி 20:4-6) தெளிவாக விளக்குகிறது. அதை கீழே காணலாம்.

தானியேல் 7

18. ஆனாலும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்கள் ராஜரீகத்தைப்பெற்று, என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்றான்.

21. நீண்ட ஆயுசுள்ளவர் வருமட்டாகவும், நியாயவிசாரிப்பு உன்னதமானவருடைய பரிசுத்தவான்களுக்குக் கொடுக்கப்பட்டு, பரிசுத்தவான்கள் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் காலம் வருமட்டாகவும்,

27. வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரீகமும் ஆளுகையும் மகத்துவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; சகல கர்த்தத்துவங்களும் அவரைச் சேவித்து, அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும் என்றான்.

கவனியுங்கள்:-


“உன்னதமானவரின் பரிசுத்தவான்கள் கிறிஸ்துவினால் ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கபட்டு (1பேது 2:9; வெளி 5:9-10) முடிவின்றி அரசாளுவார்கள்.”

1பேதுரு 2:9

நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.

வெளி 5:9-10

9. தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,

10. எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோமென்று புதிய பாட்டைப் பாடினார்கள்.

கவனியுங்கள்:-

இராஜாக்களும் ஆசாரியரும் பதவியேற்க்க அபிஷேக தைலத்தால் அபிஷேகம் பன்னப்படுவார்கள். இயேசுவின் இரத்தத்தால் மீட்டுக்கொள்ளப்பட்டவர்களுள் பதாவிடத்தில் வேண்டிகொள்கிறவர்களை (லூக் 11:13), பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் செய்வதன் மூலம், அவர்களை இயேசு இராஜாகளும் ஆசாரியர்களும் ஆக்குகிறார் (மத் 3:11).

இப்பொழுது வெளி 20:4-6 என்ன கூறுகிறது என்பதை கவனிப்போம்:

வெளி 20:4

4. அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய
ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும்
இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம்
அரசாண்டார்கள்.

கவனியுங்கள்:-

முதலாம் உயிர்தெழுதல் கிறிஸ்துவுடன் ஆரம்பித்து (வெளி 1:5; 1கொரி 15:20,23) மகா உபத்திரவ காலத்தில் இரத்த சாட்சியாய் மரணமடைந்தவர்கள் கிறிஸ்துவின் வருகையில் உயிர்பிக்கும் பொழுது முடிவடைகிறது.

இதை கருத்தில் கொண்டால், எல்லா பரிசுத்தவான்களும் கிறிஸ்துவுடனே கூட ஆயிரம் வருடம் அரசாளுவோம். அதுமட்டுமின்றி என்றென்றும் அரசாளுவோம் (தானி 7:18, 27)

வெளி 20:5

5. மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.

கவனியுங்கள்:-

பாவத்தில் மரணமடைந்தவர்ககும் உயிர்தெழுவார்கள் என்று (வெளி 12:2; யோவா 5:28-29) கூறுகிறது. ஆனால் நீதிமான்களின் உயித்தெழுதலுக்கும் பாவத்தில் மரித்தவர்களின் உயிர்தெழுதலுக்கும் ஆயிரம் வரும் இடைவெளி இருப்பதை இந்த வசனம் கூறுகிறது.

6. முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை. இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம்
அரசாளுவார்கள்.

கவனியுங்கள்:-

மரணமடையாமல் எடுத்து கொள்ளப்பட்டவர்களும் இந்த ஆயிர வருட ஆட்சியில் இருப்பர். அதன் பின் புதிய வானம் புதிய பூமியிலும் தொடர்ந்து அரசாளுவார்கள்.

ஆயிர ஆண்டு
அரசின் முடிவு:-

கிறிஸ்துவும் பரிசுத்தவான்களும் ஆட்சி செய்வதற்கு முடிவு இல்லை.. ஆலால் ஆட்சியின் ஒரு பகுதி ஆயிரம் ஆண்டுகளில் நிறைவு பெறும்.

அதன் பின் நடப்பதை அடுத்த பகுதியில் காணலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.