தேவன் பரிந்துரை செய்யும் மனைவி எப்படிப்பட்டவளாயிருக்க வேண்டுமென்று நீதிமொழிகள் 31:10-31 வசனங்களில் நாம் காண்கிறோம்.
இவ்வசனங்களில் கூறப்பட்ட திவ்விய குணங்களையே, திருமணத்திற்காகக் காத்திருக்கும் எல்லா வாலிபர்களும் வாஞ்சையுடன் தேடிப் பார்த்திடவேண்டும். இந்த குணாதிசயங்களையே எல்லா வாலிபப் பெண்களும் தங்கள் ஜீவியத்தில் நாடிப் பின்தொடர வேண்டும்!
இன்றைய அநேகம் வாலிபர்களோ, ஒரு பெண்ணிடத்தில் சௌந்தரியத்தையும், அழகையுமே நோக்கிப் பார்க்கிறார்கள். ஆனால் இந்த சௌந்தரியத்தையும் அழகையும் நீதிமொழிகள் 31:30 வஞ்சனையுள்ளதுஎன்றும்வீணானதுஎன்றும் கூறுகிறது. இவ்வாறு ஓர் அழகுள்ள பெண்ணாய் இருந்துகொண்டு தெய்வ பயமில்லாமல் மதிகேடாய் நடப்பவள் “பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமானம்” (நீதிமொழிகள் 11:22) என்றே வேதம் கண்டித்துக் கூறுகிறது. அப்படியிருந்தும், சில வாலிப சகோதரர்கள் இந்த மூக்குத்தியில் மயங்கி (அழகில் மயங்கி), அந்தப் பன்றியை (அழகுள்ள பெண்ணை) திருமணம் செய்து கொள்ளுகிறார்கள்!! நீதிமொழிகள் 31-ம் அதிகாரத்தில் சித்தரிக்கப்பட்ட குணசாலியான ஸ்திரீ தன் கைகளினால் கடின வேலை செய்பவளும், இருட்டோடு அதிகாலையில் எழுந்திருப்பவளுமாயிருக்கிறாள் (வசனம் 13,15). தன் குடும்பத்திற்கு வேண்டிய உபரி செலவுகளுக்காகத் தன் கைகளின் சம்பாத்தியத்தினால் ஓர் திராட்சைத் தோட்டத்தையே நாட்டுகிறாள்(வச.16). தன் பணத்தை இவள் சிக்கனமாய் செலவழித்தாலும் ஏழைகளுக்கு உதவிக் கரம் நீட்டி, தன் நாவில் அன்பின் போதகத்தையே எப்போதும் கொண்டிருக்கிறாள் (வசனம் 20,26). சுருக்கமாய் சொல்ல வேண்டுமென்றால், இவள் கடினமாய் உழைத்து, சிக்கனம் பிடித்து........ தாராளமாய் கொடுத்து, அன்பு ஒன்றே நிறைந்த சம்பாஷணை கொண்டவளாயிருக்கிறாள்!!
ஆம், அவளுடைய கரங்கள் கடின வேலையினிமித்தம் கரடு முரடாயும், அவளுடைய நாவோ
மென்மையுமாயிருக்கிறது.
ஆனால் துரதிருஷ்டவசமாய் இன்றுள்ள அநேக கிறிஸ்தவப் பெண்களோ, இதற்கு நேர்மாறாய் அவர்களின் சோம்பேறித்தனத்தினால் கரங்கள் மென்மையாகவும், அவர்களின்
அகங்காரத்தினால் நாவு கடினமாயும் இருக்கிறது! இதுபோன்ற ஒரு ஸ்திரீயைத் திருமணம் செய்பவனுக்கு ஐயோ!!
அங்குமிங்கும் வேத ஆராய்ச்சி கூட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கும் பெண்கள் நடுவில்தான் ஓர் நல்ல மனைவி கிடைப்பாளென்றும் எண்ணிக் கொள்ளாதிருங்கள்!? மார்க்க சம்பந்த கிரியைகளை ஆவிக்குரியவைகளென தவறாய் புரிந்து கொள்ளாதபடி வாலிபர்கள் எச்சரிக்கையாயிருக்க வேண்டும்! நீங்கள் திருமணமானவுடன் உங்களுக்கு தேவைஓர் மனைவி!உங்கள் பிள்ளைகளுக்குத் தேவைஓர் தாய்!உங்கள் வீட்டில் இருக்கும் ஒருவருக்காவது வேத போதகியான ஒரு பெண் தேவையில்லையே! இதை வாலிபர்கள் சற்று மனதிற்கொள்ளட்டும்!!