ஏவாள், தேவனை நம்புவதில் எங்கு தோற்றுப்போனாளோ, அங்குதான்
இஸ்ரவேலரும்கூடத் தோற்றுப்போனார்கள். அவர்களும்கூட தேவனுடைய
கட்டளைகளுக்கு கீழ்ப்படியவில்லை. ஆனால் இந்த விஷயத்தில்இயேசு
ஜெயங்கொண்டார்.அவர் விசுவாசத்தினால் வாழ்ந்தார். வனாந்தரத்தில் சாத்தான்
கொண்டுவந்த ஒவ்வொரு சோதனையையும் "இப்படி எழுதியிருக்கிறதே" என்று எளிய
வார்த்தையைக் கொண்டு ஜெயித்தார். மனுஷனுடைய மிகுந்த நலனுக்கென்றே, பூரண
அன்பினால் தேவனுடைய வார்த்தை கொடுக்கப்பட்டிருக்கிறது. இயேசு
விசுவாசத்தினால் அதற்கு கீழ்ப்படிந்தார். இப்படியாக அவர் நமக்கு
முன்னோடியாய் இருக்கிறார்! தேவ ஜனங்களுக்கு பயனுள்ள ஊழியம் செய்ய
வேண்டுமானால், நாம் விசுவாசத்தினால் பிழைப்பதும், நமது விசுவாசத்தை
தேவகட்டளைகளுக்கு பரிபூரணமாய் கீழ்ப்படிவதின் மூலம் வெளிப்படுத்துவதும்,
அத்தியாவசியமானதாகும். இவ்விதத்தில் மட்டுமே தேவ மந்தைக்கு நாம்
முன்மாதிரியாக இருக்க முடியும்..
மேலும்,விசுவாசம் என்பது தேவ வல்லமையின் மேல் உள்ள பூரண
நம்பிக்கையுமாகும்!ஏவாள், தான் பாவத்தினால் இழுக்கப்படுவதை உணர்ந்து, அதை
எதிர்க்க இயலாத நிலையில் தேவனை நோக்கி ஒத்தாசை கேட்டு
அபயமிட்டிருக்கலாம்! அப்பொழுது அவள் உதவியை பெற்றிருக்க முடியும். எந்த
பாவ சோதனையையும் மேற்கொள்ள, தேவவல்லமை போதுமானதாகவே இருக்கிறது.
இயேசுகிறிஸ்து மாம்சத்திலிருந்த நாட்களில் அந்த வல்லமைக்காகவே
கூக்குரலிட்டு கேட்டார் (எபி 5:7-8).அதனால்தான், அவர் பாவஞ்செய்யவில்லை.
ஆகையால், நாமும் ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடைய தைரியமாகக்
கிருபாசனத்தண்டை சேரக்கடவோம் என இப்போது கட்டளை பெற்றிருக்கிறோம் (எபி
4:16).
தேவன் தமக்கு சாட்சிகளைப் பூமியில் தேடுகிறார். அவருடைய ஞானம், அன்பு,
வல்லமை ஆகியவற்றிற்கு மெய்யான சாட்சிகளைத் தேடுகிறார். புதிய ஏற்பாட்டு
கட்டளைகளை, கிறிஸ்தவர்கள்21-ஆம் நூற்றாண்டு நிலைமைக்கு ஏற்றார்போல
மாற்றிக்கொள்ளும்போது,தேவனுடைய ஞானத்தின் மேல் தங்களுக்குள்ள
அவிசுவாசத்தையே அதன் மூலம் வெளிப்படுத்துகிறார்கள். 21-ஆம் நூற்றாண்டு
வாழ்வின் விநோதமான நெருக்கங்களை நிதானிக்க, ஆதியும் அந்தமுமான எக்காலமும்
அறிந்திருக்கிற தேவத்துவம் போதாது என அவர்கள் எண்ணுகிறார்கள்!
தேவனுடைய கற்பனைகளில்மிகச்சிறியதானஒன்றை தள்ளிவிடுகிறவன் தேவனுடைய
இராஜ்ஜியத்தில் சிறியவன் எனப்படுவான் என்று இயேசு சொன்னார் (மத்தேயு
5:19).தேவன் நம்முடைய கீழ்ப்படிதலையும், விசுவாசத்தையும், அவருடைய
வார்த்தைகளில்மிகச் சிறிய கட்டளையைக்குறித்த நமது மனப்பான்மையின் மூலம்
சோதித்தறிகிறார். "கொலை செய்யாதிருப்பாயாக. . . விபச்சாரம்
செய்யாதிருப்பாயாக.. ." என்பன போன்ற பெரிய கற்பனைகளை அநேக கிறிஸ்தவர்கள்,
ஏன் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும்கூட கடைப்பிடிக்கின்றனர். ஆனால்
தேவனிடத்திலிருந்து நாம் நற்சாட்சி பெறுவோமா? மாட்டோமா? என்பது அவரது
கற்பனைகளில் சிறிதானதொன்றைக் குறித்து - அதாவது, நீரில் மூழ்கி
ஞானஸ்நானம் பெறுவது போன்ற, மற்ற இரட்சிக்கப்பட அவசியமற்ற சிறிய
கற்பனைகளைக் குறித்த நம்முடைய மனப்பான்மையை பொருத்திருக்கிறது. இங்குதான்
சபை பாகுபாடற்ற தன்மை (Inter denominationalism)) தேவனுடைய நற்சாட்சியைப்
பெற தவறிவிடுகிறது - ஏனென்றால், அது தேவனுடைய சிறிதான கற்பனைகளைத்
தள்ளிவிடும்படி செய்துவிடுகிறது. அப்படிப்பட்டவர்கள்
அழிந்துபோய்விட்டார்கள் என்று இயேசு சொல்லவில்லை. ஆனால் தேவனுடைய
இராஜ்ஜியத்தில், அவர்கள் எல்லோரிலும் சிறியவர்கள் எனப்படுவார்கள் என்றார்
இயேசு!