பாபிலோனில் சிறைப்பட்ட தன் ஜனத்திடம் தேவன் எசேக்கியேல் தீர்க்கதரிசியை
அனுப்பி, "தேவன் தூய்மையான சாட்சியை விரும்புகிறார்" என்று ஜனங்களிடம்
கூறினார் (எசேக்கியல் 43:12). அந்த புறஜாதிகளின் இராஜ்ஜியத்தில்
"தேவனுக்கென்று தூய்மையான சாட்சியைக்" காத்துக்கொண்ட தன்னுடைய தாசன்
தானியேலையும் அவனோடுகூட மூன்றுபேரையும் தேவன் எழுப்பினார் (தானி 1:8).
திரளான யூதர்கள் அங்கு அடிமைப்பட்டிருந்தனர். . . . ஆனால் "தேவனுடைய
தூய்மையான சாட்சி"யானது இந்த "நான்கு" வாலிபர்களின் உறுதியான பரிசுத்த
நிலையினால் (Stand for Purity) காக்கப்பட்டது!!
இஸ்ரவேலருக்கு மல்கியா தீர்க்கதரிசி மூலமாக தேவன் அளித்த கடைசி செய்தியே
"தேவனுக்கு தூய்மையான சாட்சி வேண்டும்" என்ற செய்தி. நானூறு
வருஷங்களுக்குப் பிறகு தேவன் யோவான்ஸ்நானகனை அனுப்பினார். மறுபடியும்
தேவனுடைய மனபாரமாய் தொனித்த வார்த்தை என்னவென்றால், "பரிசுத்தமே" ஆகும்.
"மனந்திரும்பி உங்கள் வழிகளை சீர்படுத்துங்கள்" என்பதுதான்
யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த செய்தி! இந்த யோவான்ஸ்நானகன் சிறையில்
அடைக்கப்பட்டபோது "இயேசு" இதே செய்தியைத்தான் தொடர்ந்து பிரசங்கிக்க
ஆரம்பித்தார் (மத்தேயு 4:12,17).அதேபோல், மலைப்பிரசங்கத்தின் முழு
கருத்தின் பொருளும், "பரிசுத்தம்"தான். கவனியுங்கள்! இயேசு இங்கு
வலியுறுத்தியது 'சுவிசேஷமோ' அல்லது 'சமூக சேவையோ' அல்லது வேறு எந்த
கிரியையோ அல்லாமல் "தனிமனிதனின் இருதயப் பரிசுத்தத்தைப்" (Personal
Purity of Heart) பற்றியே இருந்தது...... ஆ, இது எத்தனை ஆச்சரியம்!!
நாம்ரோமர்தொடங்கி யூதா வரைக்கும் உள்ள நிருபங்களை வாசிக்கும்போது,
அங்கும் "தனிமனிதன் வாழ்க்கையில் உள்ள தூய்மையே"வலியுறுத்தப்படுவதைப்
பார்க்கிறோம். "புறஜாதிகளை மாற்றுங்கள்" என்றோ அல்லது "முழு நேர
ஊழியத்திற்குச் செல்லுங்கள்" என்றோ நிருபங்களில் ஒரு இடத்தில்கூட
பார்ப்பது கடினம்! வெளிப்படுத்தின விசேஷத்தில், சபைகளுக்குத் தேவனுடைய
கடைசி செய்தியாக, நாம் மறுபடியும் இதே செய்தியின் கருப்பொருளைத்தான்
காண்கிறோம் (வெளி 2,3). எந்த சபையும் "நீங்கள் சுவிசேஷ ஊழியம்
செய்யவில்லை" என்றோ "நீங்கள் சமூக சேவை செய்யவில்லை" என்றோ
கடிந்துகொள்ளப்படவேயில்லை! மாறாக, "பரிசுத்தத்திலும், அன்பிலும்" சபையின்
தரம் குறைவாயிருந்ததினிமித்தமே சபைகள் தேவனால் கடிந்து கொள்ளப்பட்டது!!
வேதாகமத்தின் இறுதிப்பகுதியில், தேவன் கடைசியாக தன் இருதயத்தின்
விருப்பத்திற்கிணங்க, பல்வேறு காலங்களில் தெரிந்து கொள்ளப்பட்ட
1,44,000-ம் பேரைத் தனக்கென கண்டுகொண்டார். யார் இவர்கள்? "இருதயத்தை
சுத்திகரியுங்கள்" என்ற அழைப்பிற்குத் தங்களை ஒப்புக்கொடுத்து, தங்களின்
ஜீவியத்தை எல்லாப் பாவங்களிலிருந்தும், லௌகீகத்திலிருந்தும்
சுத்திகரித்து, சிலுவையின் பாதையில் ஆட்டுக்குட்டியானவர் சென்ற எல்லாப்
பாதைகளிலும் பின் தொடர்ந்தவர்கள். கடைசியாக, இவர்கள்தான்"கிறிஸ்துவின்
தூய மணவாட்டியாக"முற்றுப்பெற்றார்கள்!! (வெளி 14:1-5; 21:1-2,7,9-11).
ஆம், "மகா" (Great) பெரிய தொகையாக (வெளி.17:5) கணிக்கப்படும் சடங்காச்சார
கிறிஸ்தவ உலகத்தால் எதிர்க்கப்பட்ட, "பரிசுத்த" (Holy) மணவாட்டி இவள்!!
(வெளி. 21:2).