பிறருக்கு தீமை சம்பவிக்க விரும்புவதும் அல்லது அவர்களைச் சபிப்பதும்
ஆகிய இரண்டுமே ஒன்றுதான்!
ஆனால்கலா 3:13-ல் "இயேசு முழு உலகத்தின் சாபத்தையும் நமக்காகத் தன்மீது
ஏற்றுக்கொண்டார்" என்றல்லவா கூறுகிறது! எனவே நாம் பிறரை சபிக்கும்போது,
எல்லோருடைய பாவத்தையும் தன்மீது சுமந்த இயேசுவையே சபிக்கிறோம்!!
பிறருக்குத் தீமை எண்ணும்படி அடுத்த சமயம் சாத்தான் உங்களைத்
தூண்டும்பொழுது இந்த உண்மையை நீங்கள் மனதில் கொள்ளுங்கள்!!
விபசாரத்தில் பிடிபட்ட ஒரு ஸ்திரீயை பரிசேயர்கள் இயேசுவிடம் கொண்டு வந்த
சமயம், அந்தப் பெண்ணின் மீது கற்களை எறிந்திருந்தால், இயேசு அந்த
ஸ்திரீயின் முன்பாய் நின்று எல்லா கல் அடிகளையும் தன்மேல் ஏற்றுக்கொண்டு
"முதலாவது என்னைக் கொல்லுங்கள்!" என்றே கூறியிருப்பார்!! இந்தச்
செயலைத்தான் இயேசு கல்வாரியில் நமக்காகச் செய்தார். அவர் நமக்கு முன்பாக
வந்து நின்றார்.... நாம் பெறவேண்டிய எல்லா கல் அடிகளையும் தன்மீது
ஏற்றுக் கொண்டார்!! இந்தகிறிஸ்துவின் ஆவியேபுதிய உடன்படிக்கையின்
ஆவியாகும். கிறிஸ்துவின் ஆவியைப் பெற்றிருக்கும் ஒருவன் மாத்திரமே தன்
ஜீவியகாலமெல்லாம் "பிறரை மன்னிக்கும்" மகிழ்ச்சியின் அனுபவத்திற்குள்
பிரவேசிப்பான்!
கொரியாவில் உள்ள தெய்வ பக்தி நிறைந்த ஒரு கிறிஸ்தவரைப் பற்றி "அன்பின்
வலிமை" என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. இவருடைய இளைய மகன், ஓர் கொரிய
கம்யூனிச இளைஞனால் சுட்டுக்கொல்லப்பட்டான். கொல்லப்பட்ட மகனின்
தெய்வபக்தி நிறைந்த தந்தை, தன் மகனைக் கொன்றவனைத் தேடிச்சென்று அவனை
மனப்பூர்வமாய் மன்னித்தது மாத்திரமல்லாமல், தன்னுடைய சொந்த மகனாகவே அவனை
சுவீகாரம் எடுத்து தன்னோடு வைத்துக்கொண்டு அன்புடன் பராமரித்தார்! ஆ,
மெய்யாகவே இவர்தான் "புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை" நன்கு அறிந்தவர் என
ஆணித்தரமாகக் கூறலாம்!
அந்தோ, உபதேசத்தை அறிந்திருக்கிறோம் எனக் கூறுபவர்கள் வெறும் உபதேசத்தோடு
நின்றுவிட்டார்களே! ஜீவமார்க்கத்தை அல்லது ஜீவ வழியை வெறும் உபதேச
ரீதியாக மாத்திரமே இயேசு விளக்கவில்லை. மாறாக, தன் ஜீவியகாலமெல்லாம் அந்த
வழியில் நடந்தார். தன்னை வெறுத்தவர்களை அவர் சிநேகித்து, அவர்களை
இரட்சிப்பதற்காக தன் இரத்தத்தை அல்லது தன் ஜீவனையே கொடுத்துவிடும்
இடத்திற்கே வந்துவிட்டார்!
இந்த இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும்படியே நாமும் அழைக்கப்பட்டு
இருக்கிறோம். அதாவது, மற்றவர்களுக்கு தீமை சம்பவிக்க வேண்டுமென விரும்பி
அவர்களைச் சபிக்காமல், தங்களை சபிப்பவர்களை ஆசீர்வதிக்கும் ஜீவ
பாதை!ஆனால் இன்றைய உலகமோ, பிறருக்கு தீமை வருவதை விருப்பத்துடன்
எதிர்பார்க்கும் ஜனங்களால் நிறைந்து இருக்கிறதே!இவர்கள் போகுமிடமெல்லாம்
பிறரை சபித்து, குறைகூறி, தீமையானவைகளையே பேசி சுற்றித்திரிகிறார்கள்!
ஆனால் நாமோ புறப்பட்டு சென்று.... நன்மையான வைகளைச் செய்து,
போகுமிடமெல்லாம் ஜனங்களை ஆசீர்வதித்து, பூரண மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை
வாழ்ந்திடுவோமாக. அதுவே, நம் அன்புநாதர் நமக்கு காண்பித்த அடிச்சுவடுகளாகும்!