‘கறைபடாத’ கிறிஸ்துவின் சபையே இன்றைய தேவை! - சகரியா பூணன்

பல்வேறு விஷயங்களில் தேவசித்தம் அறிந்து கொள்ள யூதர்கள் தங்களுக்கென்று
அந்நாட்களில் தீர்க்கதரிசிகளைப் பெற்றிருந்தார்கள். ஏனெனில் பழைய
ஏற்பாட்டு நாட்களில் அந்த தீர்க்கதரிசிகள் மாத்திரமே "தேவ ஆவியைப்"
பெற்றிருந்தனர். ஆனால் புதிய உடன்படிக்கையின் தீர்க்கதரிசிகளுக்கோ,
கிறிஸ்துவின் சரீரமாகிய சபையைக் கட்டும்படியான, முற்றிலும் வித்தியாசமான
ஊழியமே கொடுக்கப்பட்டுள்ளது (எபே 4:11,12).மேலும், இப்போது எல்லா
விசுவாசிகளும் பரிசுத்தாவியைப் பெற்றுக்கொள்ள முடியுமாதலால், அவர்கள்
தேவசித்தம் அறிய குறிப்பிட்ட தீர்க்கதரிசிகளிடம் செல்ல வேண்டிய அவசியம்
இப்போது இல்லை!! (எபி 8:11; 1யோவான் 2:27).இருப்பினும் இன்று அனேக
விசுவாசிகள், பழைய துருத்தியின் ஜீவியமாகிய "குறிப்பிட்ட தேவ
மனிதர்களிடம்" சென்று தாங்கள் என்ன செய்ய வேண்டும்? யாரைத் திருமணம்
புரிய வேண்டும்? போன்ற காரியங்களை அறிந்துகொள்ள அவர்களிடம்
செல்லுகிறார்கள்!!

யூதர்கள் ஓர் விரிவான சமுதாயத்தின் ஜனங்களாய் பரந்த தேசத்தில்
பரவியிருந்தபடியால், தங்களுக்கென்று தலைமையகத்தை எருசலேமிலும், தங்கள்
தலைவராக ஒரு பூமிக்குரிய மகா பிரதான ஆசாரியரையும் உடையவர்களாய்
இருந்தனர். ஆனால் புதிய உடன்படிக்கையிலோ,இயேசு மாத்திரமேநமது மகா பிரதான
ஆசாரியர்! இன்று, நமது ஒரே தலைமையகம் தேவனுடைய சிங்காசனமே!! ஓர்
நடுத்தண்டிலிருந்து ஏழு கிளைகளாய் பிரியும் பொன் குத்துவிளக்கையே அன்று
யூதர்கள் பெற்றிருந்தனர் (யாத் 25:31,32).இதுதான் பழைய துருத்தி! ஆனால்,
புதிய உடன்படிக்கையிலோ, ஒவ்வொரு ஸ்தல சபையும்ஒரு தனி
குத்துவிளக்கு!"அதனுடன் சேர்ந்துகிளைகள் (Branches) இல்லை."இதை வெளி
1:12,20 வசனங்களில் தெளிவாய் பார்க்கிறோம். இதன்படி இருந்த ஆசியா
மைனரில், ஏழு ஸ்தல சபைகளும் யூதர்களின் கிளைகள் உள்ள குத்துவிளக்குபோல்
அல்லாமல், ஒவ்வொன்றும் "தனித்தனி" ஏழு குத்துவிளக்குகளாகவே
ஒப்பிடப்பட்டிருப்பதை காண்கிறோம்! சபைகளின் தலைவரான இயேசு, இந்த ஏழு
தனித்தனி குத்துவிளக்குகளின் நடுவிலேயே இன்று உலாவுகிறார்! அங்கு, இன்று
நாம் காணும் போப்போ, தலைமை சூப்பரிண்டெண்டோ அல்லது வேறு எந்தஸ்தாபகத்தின்
தலைவரோஅந்த 7- குத்துவிளக்குகள் நடுவில் காணப்படவில்லை. எந்தப்
பிரச்சனைகளுக்கும் இறுதிமொழியாக அந்த 7- குத்துவிளக்குகள் சார்பாக ஒரு
தலைமை மூத்த சகோதரனும் காணப்படவே இல்லை!! மாறாக, ஒவ்வொரு ஸ்தல
சபையும்,அதினதின் ஸ்தல மூப்பர்களாலேயே(Local Elders) ஆளுகை
செய்யப்பட்டது. இந்த மூப்பர்களே தங்களின் தலையாகிய ஆண்டவருக்கு நேரடி
பொறுப்பாளிகள்! ஆனால் இன்றோ நம்மைச் சுற்றிலும் உள்ள ஏராளமான
கிறிஸ்தவர்கள், பழைய யூத துருத்தியின் அம்சமாகிய ஒரு ஸ்தாபன அமைப்புகளில்
(Denominational System) சிக்கியிருக்கிறார்கள். சிலர் ஸ்தாபன பெயர்
உடையவர்களாய் இருக்கிறார்கள்! சிலரோ தங்களை ஒரு ஸ்தாபனம் இல்லை என்று
சொல்லிக்கொள்ள பெயரில்லாமல் இருந்தும், ஒரு ஸ்தாபனத்திற்குரிய எல்லா
குணாதிசயங்களையும் உடையவர்களாகவே இருக்கிறார்கள். இவையெல்லாம் என்ன?
சகலமும், பழைய துருத்திகள்!!

ஒரு சபையிலிருந்து மற்றொரு சபைக்கு 'கறைகள்' (Corruption) பரவாமல்
தடைசெய்யவே தேவன்புது துருத்தியாகிய "ஸ்தல சபையை"நியமித்திருக்கிறார்.
ஒருவேளை ஆசியா மைனரில் காணப்பட்ட ஏழு சபைகளும் ஒன்றிற்கொன்று கிளைகளாய்
இருந்திருக்குமென்றால், கறை படிந்த பிலேயாமுடைய போதகமும், நிக்கொலாய்
மதஸ்தருடைய போதகமும் மற்றும் யேசபேல் ஸ்திரீயின் பொய்
தீர்க்கதரிசனங்களும் மற்ற எல்லா ஏழு சபைகளுக்கும் பரவியிருந்திருக்கும்!!
ஆனால், இவைகள்தனித்தனி குத்துவிளக்குகளாய்இருந்தபடியால், சிமிர்னாவிலும்,
பிலதெல்பியாவிலும் இருந்த இரண்டு சபைகள் தங்களைப் பரிசுத்தமாய்
காத்துக்கொள்ள முடிந்தது! (வெளி 2:8; 3:7). எனவே, நீங்கள் கூடிவரும் ஸ்தல
சபை தூய்மையாய் இருக்க வேண்டுமென்றால்,பழைய துருத்தியாகிய ஸ்தாபனக்
கட்டுகள்களைந்து எறியப்படுவது தவிர வேறு வழி ஏதும் இல்லை!

இவ்வாறு, இன்று அனேகரை அடிமைப்படுத்தியிருக்கும் மனுஷீக பாரம்பரியமாகிய
பழைய துருத்தியை எதிர்த்துப் பலவந்தம் செய்யும் (மத்தேயு 11:12)அனேகரை
தேவன் நம் தேசத்தில் எழுப்புவாராக! இப்படிப்பட்ட "இந்த மேன்மையான" புதிய
உடன்படிக்கையின் ஆவியைப் பருகியவர்கள், தங்கள் ஸ்தலங்களில் ஒன்றுகூடி
கிறிஸ்துவின் சரீரமாகிய சபையைக் கட்டுவார்களாக!!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.