எல்லாச் சோர்வுகளும், மனக்கலக்கமும்,சுயபுத்தியின்படிபிழைப்பதன்
விளைவேயன்றி, விசுவாசத்தினால் வருவதல்ல. எல்லா கவலைகளுக்கும்,
பயங்களுக்கும் உரிய வேர்கள்கூட அதே காரணத்தினால்தான் தோன்றுகிறது.
ஆகிலும், நாம் சோதிக்கப்படவே தேவன் விரும்புகிறார். ஆம், அவருடைய
பிரசன்னத்தை உணர்ந்திடும் உணர்வு நம்மிலிருந்து நீங்கி...... நாம் அவரது
அன்பை சந்தேகிக்கும்படியான சூழ்நிலையைகூட அனுமதித்து நம்மைப்
பரீட்சிக்கிறார். இதன் மூலமாய் நாம் விசுவாசத்தில் பலப்பட்டு,
தேறினவர்களாகி, தேவன் நம்மைக் கொண்டு தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றும்
நிலைக்கு நாம் வளருகிறோம்.!
இதனிமித்தமே, நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை மிகவும்
நேர்த்தியானதாக தேவன் படைத்தார். அப்போதுதான் ஆதாமும் ஏவாளும்
சோதிக்கப்பட முடியும். "தேவனுக்காக" மிகவும் கவர்ச்சியான "நன்மை தீமை
அறியும் சுயபுத்தியை" அவர்கள் தள்ளிவிடுவார்களா? அல்லது "தேவனைத்தள்ளி"
தங்களுக்குப் பிரியமானதைத் தாங்களே சுயபுத்தியின்படி தெரிந்து
கொள்வார்களா? ஆம், நாம் சோதிக்கப்படுகிற வேளையில் நம்மைச் சந்திக்கிற
கேள்வி இதுதான். அதனால்தான், சோதிக்கப்படுகிற விஷயத்தை மிகவும்
கவர்ச்சிகரமானதாக இருக்க தேவன் அனுமதித்திருக்கிறார்.
உண்மையாகவே கவர்ச்சிகரமானதும், நம்மை பலமாக அதன்பக்கம் இழுக்கிறதாயும்,
இன்பம் தருமென்று நாம் அறிந்தது மானதொன்றை, தேவன் நமக்கு
விலக்கியதினிமித்தம் அதை நாம் தள்ளிவிடும்போது...... தேவனை முழு
இருதயத்துடன் நேசிக்கிறோம் என்றே நிரூபிக்கிறோம்!
எப்படியெனில், தேவன் எதை நமக்கு விலக்கினாரோ, அதை நமது சிறந்த
நலனுக்கென்றேதம்முடைய பரிபூரண அன்பினால்விலக்கினார் என்று நம்புகிறோம்,
பின்பு நிரூபிக்கிறோம்! இப்படியாக ஒவ்வொரு முறையும் தேவனுக்கு
கீழ்படியாமல் போகும்படி, பாவம் செய்யும்படி சோதிக்கப்படுகிற சோதனைகள்
எல்லாம், நம் விசுவாசத்திற்கு ஏற்பட்டிருக்கும் சோதனையாகவே இருக்கிறது.
விசுவாசத்தினால் பிழைப்பது என்பது தேவனுடைய ஒவ்வொரு கட்டளையும், அவருடைய
பூரண அன்பின் இருதயத்திலிருந்து புறப்பட்டது என்று நம்புவதேயாகும்.
இதனிமித்தமே இஸ்ரவேலருக்கு தேவன் பத்து கட்டளைகளை கொடுத்தபோது, மோசே
"தேவன் உங்களை சோதிப்பதற்காக (to test you)…..எழுந்தருளினார்" (யாத்
.20:20)என்றான். அந்த அக்கினிமயமான பிரமாணங்கள், தேவன் அவர்கள்மேல் கொண்ட
'அன்பிற்கு அடையாளம்' என அவர்கள் நம்புவார்களா? (உபாகமம் 33:2,3).அதுவே
பரீட்சை! நாமோ விசுவாசத்தில் நிலைத்திருந்து நிரூபிக்க வேண்டும்!