யோவான் அப்போஸ்தலன் “ஒளியில் நடப்பதைக்” குறித்தே பேசுகிறார் (1யோவான் 1:7).அதாவது, ஒளியில் நிற்பதல்ல, இருள் சிறிதேனும் இல்லாதஅவரிடம் நாளுக்கு நாள் நெருங்கிநெருங்கி “நடப்பதே” ஆகும்! அப்போது மாத்திரமே, ஒளியானது நம்மீது அதிகமதிகமாய்ப் பிரகாசித்திட முடியும்! அதினிமித்தமாய், நாம் கடந்த நாட்களில் அறியாத, நம் மாம்சத்தில் ஊறி மறைந்து இருக்கும் பாவங்களைக் குறித்து நாளுக்கு நாள்,அதிக வெளிச்சத்தைப்பெற்றுக் கொள்ளுகிறோம்! அவ்வாறு ‘வெளிச்சம் பெற்று’ உணர்வடையும் ‘எல்லாப் பாவங்களையும்’ இயேசுவின் இரத்தம் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கிறது!!
இவ்வாறு நாம் தேவனிடம் நெருங்கி நெருங்கி வரும்போது மாத்திரமே, “நம்மைச் சுற்றி” உள்ளவர்களின் பாவத்தைப் பார்ப்பதிலிருந்து சிறிது சிறிதாக குறைந்து, “நம்மைக் குறித்து” நம் மாம்சத்தில் உள்ள பாவத்தை அதிகமதிகமாய் உணர ஆரம்பிக்கிறோம்! நாம்இயேசுவின் சமூகத்தில் நெருங்கிஇருப்பதால், நம் மாம்சத்திலுள்ள பாவங்களைக் குறித்து உணர்வடைந்து “ஆ! நிர்ப்பந்தமான மனுஷன் நான்!” (ரோமர் 7:24) என்று சொல்லுவோமேயல்லாமல், விபசாரத்தில் பிடிபட்ட ஸ்திரீயை கல்லெறிய விரும்பி “ஆ! எவ்வளவு கேவலமான ஸ்திரீ இவள்!” என்று சொல்ல விரும்பவே மாட்டோம்!!
ஆதாம் தேவனுடைய சமூகத்தில் நிற்கும்போதே, தன் மனைவியை குற்றப்படுத்த விரல் நீட்டினான் (ஆதியாகமம் 3:12).ஆனால் ‘தேவனோ’ அவன் தன் சொந்தப் பாவத்தை அறியும்படியே உணர்த்தினார் (ஆதி .3:17).இதைத்தான் தேவன் இன்று நம்மிலும் செய்வார்! இதுவே, நாம் வெறும் மதத்தையும், பாரம்பரிய அனுசாரங்களையும் கொண்டவர்களாய் இருக்கிறோமா அல்லதுதேவனுடைய முகத்திற்குநேராய் ஜீவிக்கிறோமோ என்பதைக் கண்டறியும் சிறந்த பரீட்சையாய் இருக்கிறது!!
“கிருபை”யின் பொருளும் இதுதான்!! நம் ஜீவிய காலம் முழுவதும் நாம் முயற்சித்தாலும் நமக்குள் “கிறிஸ்துவின் ஜீவியத்தை” நாம் ஒருபோதும் அடையவே முடியாது. நாமோ, நம் சிலுவையை அனுதினமும் சுமந்து, நம்முடைய சுய அனுதாபம், சுய சித்தம், சுய உரிமைகள், சுய மதிப்பு இவைகளுக்கு மரிக்கும்படியாக நம் சரீரத்தில் எப்பொழுதும் “இயேசுவின் மரணத்தை” (Dying of Jesus)) சுமந்தால் மாத்திரமே. . . .“இயேசுவின் ஜீவன்”நம்முடைய வாழ்க்கையில் விளங்கும்படி தேவன் முழு நிச்சயமாய் வாக்களிக்கிறார்
(2கொரி 4:10).