இயேசுகிறிஸ்து பூமியில் இருந்தபோது அநேகர் அவரிடம் விசுவாசம் வைத்தார்கள். ஆனால் அவர்கள் எல்லோருக்கும் அவர் இணங்கவில்லை (யோவான் 2:23,24).அவரிடம் விசுவாசம் வைத்த மிகப் பெரும்பான்மை யானோர் தனக்கானதையே தேடினர் என்றும், தங்கள் சொந்த ஆசீர்வாதங்களுக்காகவே தன்னிடம் வந்தனர் என்றும் அவர் அறிவார். அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் ஜெயம் கொண்டவர்களாயில்லை! ஏனெனில்தனக்கானவைகளைத் தேடுகிறஒருவராகிலும் ஜெயம் கொண்டவர்களாய் இருக்கவே முடியாது!!
இஸ்ரவேலரின் சத்துருக்களை எதிர்க்க கிதியோன் ஒரு சேனையைத் திரட்டினபோது, அவனுடன் 32,000 இஸ்ரவேலர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் எல்லோரும்முழு இருதயத்துடன் இல்லைஎன்பதை தேவன் அறிவார். ஆதலால், தேவன் அவர்களை வடிகட்டி கழித்துவிட முடிவு செய்தார். முதலாவது, பயப்படுகிறவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்! அப்படியும் 10,000 பேர் மீதமிருந்தார்கள். அவர்கள் ஆற்றண்டை கொண்டு செல்லப்பட்டு சோதிக்கப்பட்டார்கள். அதில் 300பேர் மட்டுமே சோதனையில் ஜெயம் பெற்று, தேவனால் அங்கீகரிக்கப் பட்டார்கள். தங்கள் தாகத்தைத் தீர்க்கும்படி அந்த 10,000 பேர்கள்ஆற்றில் தண்ணீர் குடித்தவிதம்,கிதியோனின் சேனையில் இருப்பதற்கு தகுதியுடையவர்கள் யார் என்பதைத் தேவன் தேர்ந்தெடுக்கும் முறையாயிற்று! தாங்கள் சோதிக்கப்படுகிறோம் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளவேயில்லை!! 9,700 பேர்கள் சத்துருவைப் பற்றிய எல்லாவற்றையும் மறந்து, தங்கள் தாகத்தை திருப்தியாக்க முழங்கால்படியிட்டனர்! 300 பேர்கள் மாத்திரம் நின்றவண்ணம், ஜாக்கிரதையாய் குவிந்த கைகளால் தண்ணீரை தங்கள் தேவைக்கு குடித்தனர்.
தேவன் நம்மை சோதிப்பது, அனுதின வாழ்வில் சாதாரண விஷயங்களில்தான்! பணம்; உலக மரியாதை; லௌகீக சுகங்கள் போன்றவற்றைப் பற்றிய நமது மனப்பான்மையில்தான்! நாமும்கூட கிதியோனின் சேனையில் இருந்தவர்களைப்போல, தேவன் நம்மை சோதித்தறிகிறார் என்பதை அநேக முறை உணர்வதில்லை.“உலகக் கவலைகளால்”பாரமடையாதபடிக்கு இயேசுகிறிஸ்து நம்மை எச்சரித்துள்ளார் (லூக்கா 21:34).
கொரிந்து பட்டண கிறிஸ்தவர்களுக்கு பவுல் ஆலோசனை சொல்லும்போது “மனைவிகளுள்ளவர்கள் மனைவிகள் இல்லாதவர்கள் போலவும், இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாய் அனுபவிக்காதவர்கள் போலவும், கொள்ளுகிறவர்கள் கொள்ளாதவர்கள் போலவும்” இருக்கவேண்டும் என கூறினார் (1கொரி 7:29-31).நமது தாகத்தை நாம் தீர்க்கலாம்.... ஆனால், கரங்களைக் குவித்துகுறைந்தபட்ச தேவைஎவ்வளவோ, அவ்வளவே நாம் குடிக்க வேண்டும்! நம்முடைய மனம் பூமிக்குரியவைகளையல்ல, மேலானவைகளையே நாடி நிலைத்திருக்க வேண்டும்.