இயேசு வருகை தந்த கானா ஊர் கலியாணத்தில் ‘பழைய திராட்ச ரசம்’ தீர்ந்துபோனது! இந்தப் பழைய ரசம் “மனுஷீக முயற்சியால்” அனேக வருஷங்களாய் உற்பத்தி செய்தாலும், தேவையை பூர்த்தி செய்ய முடியாத பழைய உடன்படிக்கை ஜீவியத்திற்கு மாதிரியாகவே இருக்கிறது. அதாவது, பழைய உடன்படிக்கையின்நியாயப்பிரமாணத்திற்கு கீழ்பட்ட ஜீவியத்திற்கேஉவமானமாக இருக்கிறது! ஆம், அந்த பழைய ரசம் இப்போது தீர்ந்துபோய்க்
கொண்டிருந்தது. ஆண்டவர் நமக்குப் புது ரசத்தைக் கொடுப்பதற்கு பழைய ரசம் முற்றிலும் காலியாகும்வரை காத்திருக்க வேண்டியதாயிருந்தது. ஏனெனில் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார், “நீங்கள்எனக்குக் காத்திருந்தால்மாத்திரமே இரட்சிக்கப்படுவீர்கள். . . . . ஆனால் நீங்களோ அப்படிச் செய்ய மனதாயிராமல், எகிப்திலிருந்து (மனுஷீக பெலனின்) உதவியைப் பெறுவோம் என்று சொல்லுகிறீர்கள்! எனவே உங்கள் எதிராளிகளால் துரத்தப்படுவீர்கள். . . . . . ஆனால், தேவனாகிய கர்த்தரோ தனது மனதுருக்கமான அன்பை உங்களுக்குக் காட்டும்படி உங்களுக்காக (உங்களுக்கு உரியவைகள் ஓய்ந்து போகுமட்டும்)
காத்திருக்கிறார். உங்களை ஆசீர்வதிக்கும்படி உங்களை வெற்றி கொள்வார். . . .
தங்களுக்கு உதவி செய்யும்படி கர்த்தருக்காய் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்” என ஏசாயா 30:15-18Living மொழிபெயர்ப்பு கூறுகிறது.
ஜெயம் கொண்ட ஓர் கிறிஸ்தவ ஜீவியத்திற்காக நாம் தொடர்ந்து முயற்சித்து, தொடர்ந்து தோல்வி அடையும்போதெல்லாம், “நீங்கள் உங்கள் சுய பெலத்தினால் ஜெயம் பெற முடியாது!” என்ற பாடத்தையே ஆண்டவர் நமக்குப் போதிக்க விரும்புகிறார். ஆகவேதான், நாம் நியாயப்பிரமாணத்திற்கு சுய முயற்சியால் கீழ்ப்படிய நான் நாடும்வரை, நாம் பாவத்தை ஜெயித்து வாழ்வது சாத்தியமல்ல! தேவனோ, தன் ஒவ்வொரு பிள்ளைகளிடமும் உள்ள “சுய பெலத்தை முற்றிலுமாக உடைக்கும்” வேலையையே பிரதான வேலையாய் கொண்டிருக்கிறார். கானா ஊரில் அற்புதம் செய்வதற்கு முன்பாக, பழைய ரசம் முழுவதும் காலியாகும்வரை இயேசு காத்திருந்தார். இன்றும், “நம் மனுஷீக சுய பெலன்” முறிந்து முடிவு பெறவே அவர் காத்திருக்கிறார். இந்த முடிவை அடையும்படியே ஆண்டவர் நமக்குத் தோல்விகளையும், ஏமாற்றங்களையும் அனுமதிக்கிறார்! ஏனெனில், நம்முடைய பெலவீனத்திலேயே அவர் பெலன் நம்மில் பூரணமாய் விளங்க முடியும் (2 கொரி 12:9).
சோதனை நேரங்களில் நம்மிடமிருந்து வெளிப்படும் கசப்பு வார்த்தைகள், கோபாவேசங்கள், சுய-நீதி திருப்தி, குறை கூறி மற்றவர்களை
நியாயந்தீர்த்தல், நம்முடைய உரிமைக்காகவும், கனத்திற்காகவும் சண்டையிட்டுப் போராடுதல், பழிவாங்க வகை தேடுதல் போன்ற ‘எரிச்சலடையும் பிரதிபலிப்புகள்’ யாவும் நம்முடைய “சுயம்” எவ்வளவு பெலன் உள்ளதாய் இருக்கிறது என்பதையே காட்டுகிறது. நமக்குள் இருக்கும் இந்த “வலிமையான சுயம்” (Strong Self)) அதாவது, ‘நானாக எடுக்கும் முயற்சி’ என்ற பழைய ரசம் இன்னமும் நம்மில் தீராமல் இருக்கிறதே! எனவே இயேசுவும் நமக்காக ஒன்றும் செய்ய முடியாதவராகவே நம் பக்கத்தில் காத்துக் கொண்டிருக்கிறார். நாம் அனுபவிக்கும் எல்லா சூழ்நிலைகளும், சலிப்பும், ஏமாற்றங்களும், மனச்சோர்வும், நம்முடைய இந்த வலிமையான சுயத்தைவெறுமையான பூஜ்யத்திற்குக்கொண்டு வருவதற்கு தேவன் அனுமதித்தவைகளேயாகும்! நாம் எவ்வளவு சீக்கிரம் நம்மை நாமே தாழ்த்தி, நம்முடைய சுய முயற்சிக்கு “மரணத்தை” மனப்பூர்வமாய் ஏற்றுக்கொள்கிறோமோ, அவ்வளவு சீக்கிரமாய் அவரும் நம்மை புதிய உடன்படிக்கையின் ஜீவனுக்குள்ளாக நடத்த முடியும்!