நாசரேத்தில் தச்சராகிய இயேசு, எந்தவிதமான வியாபாரத்திலும்
ஈடுபட்டிருக்கும் யாதொருவரும் சந்திக்கக்கூடிய சோதனைகளை கட்டாயம்
சந்தித்திருக்க வேண்டும். ஆனால் அவர் எதையாகிலும் விற்பதில், யாரையும்
வஞ்சித்திருக்க மாட்டார். எந்தப் பொருளுக்கும் அதிகமான விலையைக்
கேட்டிருக்க மாட்டார். மேலும்நீதிக்கடுத்த எந்த விஷயத்திலும், அதன் விலை
(அல்லது, நஷ்டம்) எவ்வளவாயிருந்தாலும் அவர் ஒருபோதும் அநீதிக்கு
உடன்பட்டிருக்கமாட்டார். நாசரேத்தில் மற்ற தச்சருடன், அவர் போட்டி
போடவில்லை. வாழ்க்கைக்கு வேண்டியதை சம்பாதிக்க மாத்திரம் அவர் வேலை
செய்தார். இப்படியாக வாங்கியும் விற்றும், தச்சர் என்ற முறையில் பணத்தை
புழங்கினதாலும், நாம் பண விஷயத்தில் சந்திக்கக்கூடிய எல்லாவிதமான
சோதனைகளையும் இயேசு சந்தித்தார்! அதை மேற்கொண்டார்!!
இயேசுகிறிஸ்து, தம் பூரணமில்லாத வளர்ப்பு பெற்றோர்களுக்கு, அவர்களோடு
வாழ்ந்த வருடங்கள் வரைகீழ்ப்படிந்து வாழ்ந்தார். இதுவும்கூட, அவர் தனது
உள்ளான 'மனப்பான்மைகளில்' பல்வேறு விதத்தில் சோதனைக்குள் உட்பட்டிருக்க
வேண்டும். ஆகிலும் அவரோ, பாவம் செய்யவில்லை!
இப்படியாய் இயேசுகிறிஸ்துவின் 30வருட நாசரேத்து வாழ்க்கை, நம்மை போன்ற
நடைமுறை சம்பவங்கள் அனைத்தும் நிறைந்ததாயிருந்தது. மெய்யாகவே,
இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை சோதனைகளின் மத்தியில் கொண்ட போராட்டம்
நிறைந்த வாழ்க்கையாகவே இருந்தது! அந்த போராட்டம் நாளுக்கு நாள்
அதிகரித்துக் கொண்டும் இருந்தது. ஏனென்றால், இரட்சிப்பின் அதிபதியாகிய
அவரை, நம்முடைய இரட்சகரும், பிரதான ஆசாரியராயும் ஆக்கும் பொருட்டு,
மனிதவர்க்கத்திற்கு நேரிடக்கூடிய எல்லா சோதனைகளுக்குள்ளும் அவரை
பிதாவானவர் கொண்டு சென்றார்
(எபி .2:10,17; 4:15).
இயேசுகிறிஸ்து தன்னுடைய கடைசி 31/2 வருட ஊழிய காலத்தில், தேசம் முழுவதும்
அவர் அறியப்படுவதினால் வரும்புகழ்ச்சிபோன்ற காரியங்களிலும், சோதிக்கப்பட
வேண்டியதாயிருந்தது. ஆனால், நாம் வீட்டிலும் வேலையிலும் சந்திக்கும்
எல்லாவிதமான சாதாரண சோதனைகளையும், முதல் 30-வருட காலத்தில் சந்தித்து
வெற்றி பெற்றார்! எனவேதான், அவருடைய ஞானஸ்நானத்தின்போது பிதா அவருக்கு
நற்சாட்சி வழங்கினார்.
தேவன் எந்த அடிப்படையில் நம்மை அங்கீகரிக்கிறார்என்பதை அறிய நம் கண்கள்
திறக்கப்படுமானால், அது நம் ஜீவியத்தை முழுவதும் மாற்றி ஒரு மாபெரும்
எழுச்சியை உண்டாக்கும். பெரும்பாலான நம்மிடத்தில், உலகப்பிரசித்தி பெற்ற
ஊழியம் பெற்றவர்கள் இல்லை. மாறாக, அன்றாட நம் வாழ்க்கையில் சந்திக்கும்,
சோதனைகளில், உண்மையுள்ளவர்களாய் இருக்கக்கடவோம்! நாம் வெளிப்பிரகாரமான
அற்புத அடையாளங்களைப் போற்றுவதை விடுத்து, மறுரூபப்பட்ட ஜீவியத்தையே
போற்றுவோமாக! அப்போது மாத்திரமே, ஜீவியத்தின் முக்கிய பகுதிகளில்,
நம்முடைய மனம் புதிதாக்கப்பட்டு, மறுரூபம் அடைந்திட முடியும்!
"என் பிதாவிற்கு கீழ்ப்படியாமலோ அல்லது பாவம் செய்வதையோ காட்டிலும் நான்
மரிப்பேன்"என்ற இந்த இயேசுகிறிஸ்துவின் மனோபாவத்தோடு சோதனையை
சந்திக்கிறவர்களுக்கு, தேவனிடத்திலிருந்து வரும் புகழ்ச்சியும், பலனும்
எவ்வளவு பெரியது என்பதை நாம் அறிவது நமக்கு மிகுந்த உற்சாகத்தை
தருக்கிறது! பவுல் பிலிப்பியருக்கு புத்தி சொல்லும்பொழுது "மரணபரியந்தம்
கீழ்ப்படிந்தவராய் காணப்பட்ட ...... இயேசு கிறிஸ்துவில் இருந்த அதே
சிந்தனை உங்களிலும் இருக்கக்கடவது" என்று சொல்வதின் அர்த்தமும் இதுதான்!
(பிலிப்பியர் 2:5-8).
இப்படியாக, நாம் எந்தக் காலத்தில் உள்ளவர்களானாலும், ஆணாயினும்,
பெண்ணாயினும், எந்தவித வரம்பெற்ற ஊழியம் உடையவர்களானாலும்.....
ஜெயங்கொள்கிறவர்களாயும்,உண்மையுள்ளவர்களாயும்ஜீவிப்பதற்கு நம்
யாவருக்கும் சமவாய்ப்பு
கொடுக்கப்பட்டிருக்கிறது!!