இயேசு முப்பது வயதாயிருக்கையில் பெற்ற பரிசுத்தாவியின் அபிஷேகம், அவர் முப்பது வருடங்களாய் வாழ்ந்த பரிசுத்த ஜீவியத்தைக் காட்டிலும் ஓர் மேலான பரிசுத்தத்திற்கு நடத்தவில்லை. ஆனால், ஆவியின் அபிஷேகத்தின் மூலமாய், மற்றவர்களுக்கு ஊழியம் செய்யும்படியான வல்லமையை அவர் பெற்றுக்கொண்டார். அவர் ஊழியத்திற்குச் சென்று தன் பரிசுத்த ஜீவியத்தை மாத்திரமே மக்களுக்கு காட்டியிருந்தால், தன் பிதாவின் நோக்கத்தை அவரால் நிறைவேற்றியிருக்க முடியாது! அதேபோலவே, இன்றுள்ள சபைகளும் மற்றவர்களுக்கு பரிசுத்த ஜீவியத்தை மாத்திரம் காண்பித்து ஒருபோதும் தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றிட முடியாது.
ஆம், இயேசுவுக்கோ பரிசுத்தமும் இருந்தது! வரங்களும் இருந்தது!! இன்றும், அவருடைய சரீரம் இந்த இரண்டையும் பெற்றிருக்க வேண்டும்.
இன்றைய கிறிஸ்தவ உலகத்தின் ஜீவியம் என்னவெனில், சில குழுக்கள் பரிசுத்த ஜீவியத்தை வலியுறுத்துகிறது. . . சில குழுக்கள் ஆவியின் வரங்களை வலியுறுத்துகிறது! “இதில் ஏதாகிலும் ஒன்றை வைத்துக்கொள்வது” என்பது ஏற்புடையதல்ல. வேதாகமம் கூறுகிறபடி “உன் வஸ்திரங்கள் எப்போதும் வெள்ளையாயும் (இப்போதும் பரிசுத்த ஜீவியம் செய்வதாயும்), உன் தலைக்கு எண்ணெய் குறையாததாயும் (எப்போதும் பிறருக்கு ஊழியம் செய்திட ஆயத்தமான அபிஷேகம் கொண்டதாயும்) இருப்பதாக” (பிரசங்கி 9:8) என்றே இருக்க வேண்டும். ஆம், இந்த இரண்டும் நமக்குத் தேவைப்படுகிறது.
அதேசமயம், ஆவியின் வரங்கள் ஒருவனை ஆவிக்குரியவனாய் மாற்றுவதில்லை.கொரிந்திய கிறிஸ்தவர்கள் எல்லா ஆவியின் வரங்களையும் பெற்றிருந்தார்கள் (1கொரிந்தியர் 1:7).“ஞானத்தைப் போதிக்கும் வரத்தை” (பரிசுத்தாவியின் வரங்களில் ஒன்றை) தங்கள் கூட்டங்களில் இவர்கள் உபயோகித்தார்கள். அப்படியிருந்தும் அவர்கள் நடுவில் ஒரு ஞானிகூட (ஒரு ஆவிக்குரியவன்கூட) இல்லை!(1கொரிந்தியர் 6:5). பார்த்தீர்களா, ஒரு மாம்ஷீக கிறிஸ்தவனிடமிருந்தும்“ஞான போதனைகள்”வெளிப்பட முடியும். ஆனால்“ஞானம்”ஒரு ஆவிக்குரிய மனுஷனிடம் மாத்திரமே காணப்பட முடியும்!!
ஞானத்தைப் போதிக்கும் வரத்தை தேவனிடமிருந்து ‘இமைப் பொழுதில்’ ஒருவன் பெற்றுவிட முடியும். ஆனால், ஒருவன் பல ஆண்டுகள் சிலுவை சுமந்து வந்தால் மாத்திரமே அவன், “ஞானம்” பெற்றிட முடியும்!
மேலும், ஜீவியத்திற்கு சாட்சியாய் வாழ பரிசுத்தாவியின் அபிஷேகம் பெற்ற யாவரும், அதோடு திருப்தி கொண்டிடக்கூடாது. தேவன் ஒருபோதும், ஒருவனுக்கு தரும் தனது ஜீவியத்தை, அதை அவனே வைத்துக்கொள்ள விரும்பமாட்டார். மாறாக, தான் பெற்ற ஜீவியத்தையும், மகிமையின் சுவிசேஷத்தையும் மற்றவர்களுக்கு பகிர்ந்து தரவே விரும்புகிறார். ஆகவே தான் கண்டடைந்த ஜீவியத்தை பிறருக்கும் சாட்சியாக அறிவித்திட ஒவ்வொரு சீஷனுக்கும் உரிய கடமையாகும்! அந்த வலிமையான செயலுக்கும் ஒருவன் பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நிரப்பப்பட வேண்டும். ஊழியம் எவ்வளவு வல்லமையாயிருந்தாலும், அதற்கு ஆதாரமாய் இருப்பதெல்லாம் “நமது ஜீவியம்” என்பதை நாம் ஒருக்காலும் மறந்துவிடக் கூடாது. ஆம், ஜீவியமில்லாமல் ஊழியம் இல்லை! ஜீவியத்தை இழந்து ஒருவன் ஊழியம் செய்திட முடியும். . . ஆனால், தேவன் அவனை புறக்கணிப்பார் என்பதை நாம் மறவாதிருக்கக்கடவோம்!!