நம் ஜீவியத்தில், இயேசுவையே உற்று நோக்கி, அவரோடு மாத்திரமே நம்மை
ஒப்பிட்டுப் பார்த்து ஓடவேண்டும்! அப்போதுதான் நம் இருதயத்திலிருந்து,
"ஆ! நிர்ப்பந்தமான மனுஷன் நான்!" என்ற கூக்குரல் நம்மில் "நிலைத்திருக்க"
(Constant) முடியும். ஏனெனில், இந்த நொறுங்குண்ட நிலையில் மாத்திரமே,
நாம் அறிந்த பாவங்களிலிருந்து (Conscious Sins)) வெற்றியடையும்
வாழ்க்கையை அடைந்திருந்தாலும்....."நான் இன்னமும் இயேசுவைப்போல்
ஆகவில்லையே"என்ற உணர்வை நாம் தொடர்ச்சியாய் பெற்றிருக்க முடியும்!!
அப்படியில்லையென்றால், "மற்ற விசுவாசிகளோடு நம்மை ஒப்பிட்டுப்பார்த்து
திருப்தியடையும் ஆவிக்குரிய புத்தியீனர்களாய் நாம் மாறிவிடுவோம்" (2கொரி
10:12).ஏனெனில், இவ்வாறு மற்றவர்களோடு ஒப்பிடுதல் நம்மை நிச்சயமாய்
ஆவிக்குரிய பெருமைக்கும், பொல்லாங்கிற்குமே வழிநடத்தும்.
நம்முடைய கண்களை இயேசுவின் மீது பதித்து, நம்மை அவரோடு மாத்திரமே
எப்போதும் ஒப்பிட்டுப்பார்ப்போமென்றால், நாம் ஒருபோதும் ஆவிக்குரிய
பெருமை என்ற அபாயத்திற்கு உள்ளாக மாட்டோம்!
பரிசுத்த ஆவியானவர் "இயேசுவின் மகிமையையே" தேவவசனமாகிய கண்ணாடியில்
நமக்குக் காட்டுகிறார். அதன் பின்பே, அந்த சாயலுக்கு ஒப்பாய் நம்மை
மறுரூபப்படுத்துகிறார் (2கொரி 3:18).அப்போஸ்தலனாகிய பவுலுக்கு இந்த ஒரே
ஒரு நோக்கம் (Goal) மாத்திரமே இருந்தது! இழந்தவர்களை இரட்சிக்கவேண்டும்
(Conversion of the lost)) என்றல்ல, "பரம அழைப்பாகிய" கிறிஸ்து
இயேசுவைப்போல மாறிடும் இலக்கை நோக்கியே அவர் தன் ஓட்டத்தை தொடர்ந்தார்
(பிலி 3:13-14).
தொடர்ந்து பவுல் கூறும்போது: "நம்மில் தேறினவர்கள் யாவரும்
(மனசாட்சியில், தாங்கள் அறிந்த பாவங்களில் ஜெயம் பெற்றவர்கள்) இதே
சிந்தையாய் (பூரணமாய் இயேசுவைப்போல மாறும் இலக்கை நோக்கித் தொடரும்
சிந்தையாய்) இருக்கக்கடவோம்" (பிலி 1:15)என்றார். இதுதான் ஆவிக்குரிய
முதிர்ச்சி அடைகிறவனின் எல்கை! முதிர்ச்சி அடைந்த ஒரு தேவ மனுஷனுடைய
ஜீவியத்தில், தான் தேவனுக்காய் செய்திடும் சுவிசேஷ அல்லது பிற ஊழியங்கள்,
"இந்த நோக்கத்திற்கு" அடுத்த இரண்டாவது இடத்தையே எப்போதும் வகிக்கும்!
அப்போஸ்தலன் யோவான் மேலும் கூறும்போது, இவ்வாறு நாம் ஒளியில் தேவனோடு
நடந்தால் மாத்திரமே நாம் ஒருவருக்கொருவர் ஐக்கியம் கொள்ளவும் முடியும்
(1யோவான் 1:7)என்றார். தேவனோடு உள்ள ஐக்கியம் மாத்திரமல்ல, மற்ற
விசுவாசிகளோடும் உள்ள ஐக்கியமே பூரணமான ஐக்கியம்! இதற்குரிய காரணத்தை மிக
எளிதாய் நாம் சொல்லிவிடலாம்: தேவனுடைய வெளிச்சத்தில் நடந்து, அவருடைய
முகத்திற்கு நேராய் ஜீவிப்பவர்கள். . . . எப்பொழுதும், தங்களுடைய
குறைகளைக் குறித்தே உணர்வுள்ளவர்களாயும்,தொடர்ந்து தங்களைத் தாங்களே
நியாயந்தீர்த்து (A Constant Self-Judgment)) ஜீவிப்பவர்களாயும்
இருப்பதால்,அவர்களுக்கு மற்ற சகோதரர்களைக் குறித்து குறைகூற (Accuse)
ஒன்றுமே இருக்காது! ஏனவே, இந்தப் பாதையில் இரண்டு சகோதரர்கள் நடந்து
கொண்டிருந்தால், அதுபோன்ற இரு சகோதரர்களுக்குள் ஒருபோதும் வாக்குவாதமே
(Strife) வராது! இந்த ஜீவ வழி "சிலர்" மாத்திரமே கண்டுகொள்ளும் இடுக்கமான
பாதையாய் இருக்கிறது (மத் 7:14).நியாயத்தீர்ப்பு தேவனுடைய
வீட்டிலிருக்கும் நீதிமானுக்கே முதலில் துவங்குகிறது! ஏனெனில் தேவனுடைய
வீட்டிலேயே, ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசமாயிருக்கும் தேவன்
தங்கியிருக்கிறார் (1பேதுரு 4:17-18;1தீமோ 6:16)."பட்சிக்கும்
அக்கினியோடு யார் ஜீவிக்கமுடியும்..... நீதியாய் நடப்பவனே!" அதாவது,
தேவனுடைய பார்வைக்கு முன்பாகத், தன்னை சத்தியத்தில் நியாயந்தீர்த்து
வாழும் மனிதனே தேவனுடைய வீட்டில் ஓங்கியிருப்பான்! (ஏசாயா 33:14-15).