புதிய ஏற்பாட்டில், பிதா மிகவும் பிரியமாயிருந்த ஒருவரைப் பற்றியும்,
மற்றும் தேவன் பிரியமாயிராத ஒரு மக்கள் கூட்டத்தைப் பற்றியும் நாம்
வாசிக்கிறோம். இந்த வேறுபாட்டை உற்று நோக்குவது ஆர்வமிக்க
செய்தியாயிருக்கிறது.
அவிசுவாசத்தினால் வனாந்தரத்தில் மரித்துப்போன 6,00,000 இஸ்ரவேலரைப் பற்றி
"தேவன் அவர்களில் பிரியமாயிருந்ததில்லை" (1கொரி 10:5)என்று
எழுதப்பட்டிருக்கிறது. இந்த இஸ்ரவேலர்கள் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால்
எகிப்திலிருந்து மீட்கப்பட்டு (கிறிஸ்துவின் மூலம் நாம்
மீட்கப்படுதலுக்கு அடையாளம்), சிவந்த சமுத்திரத்திலும் மேகத்தினூடாயும்
ஞானஸ்நானம் பண்ணப் பட்டார்கள்1கொரி .10:2.(நாம் ஜலத்தினாலும் ஆவியினாலும்
பெறும் ஞானஸ்நானத்திற்கு அடையாளம்) இருப்பினும், அவர்களில்
தேவன்பிரியமாயிருந்ததில்லை!
ஆனாலும் அவர்களுக்கு தேவன் நல்லவராகவே இருந்தார்! அவர்களுடைய சரீரத்
தேவைகளை இயற்கைக்கப்பாற்பட்ட விதத்தில் சந்தித்து (உபா 8:4)அவர்களுடைய
எல்லா நோய்களையும் குணமாக்கி (சங் 105:37),மேலும் பல அற்புதங்களையும்
அவர்களுக்கு செய்தார். உண்மையில், உலக சரித்திரத்தில், அவிசுவாசமுள்ள
இஸ்ரவேலர்கள் அனுபவித்த, அநேக அற்புதங்களுக்கு ஒப்பாக, வேறு ஜனங்கள்
ஒருபோதும் இருந்ததில்லை என்றே கூறலாம்! ஆகிலும், அந்த ஜனங்களிடம் "தேவன்
40 வருடங்களாய் கோபமாயிருந்தார்" என்றே வேதம் கூறுகிறது (எபி 3:17).
இது, மாம்சத்தின்படி நடக்கிற விசுவாசிகளுடைய ஜெபத்திற்கு கூட தேவன்
பதிலளிக்கிறார் என்றும், அவர்களுடைய உலகத்தேவைகளை-அவசியமானால்
இயற்கைக்கப்பாற்பட்ட விதத்திலும் சந்திக்கிறார் என்றும் நமக்குப்
போதிக்கிறது. தேவன் நமக்கு அற்புதம் செய்தால், அது நம்முடையஆவிக்குரிய
வளர்ச்சிஒன்றையும் நிரூபிக்கிறதில்லை. அது, தேவன் நீதிமான்கள் மேலும்
அநீதிமான்கள் மேலும் ஒரே விதமாய் தமது சூரியனை உதிக்கப் பண்ணுகிறநல்ல
தேவன்என்பதை மட்டுமே நிரூபிக்கிறது!!
மேலும் நியாயத்தீர்ப்பின் கடைசி நாளில் அவரது நாமத்தில் அற்புதம் செய்த
அநேகர் 'அக்கிரமக்காரர்கள்' என புறக்கணிக்கப்படும் நிலைக்கே
தள்ளப்பட்டிருந்தார்கள் என இயேசு நமக்கு போதிக்கிறார் (மத் 7:22,23).
அவரது நாமத்தினால்மெய்யான அற்புதங்கள் செய்கிறகிறிஸ்தவ
பிரசங்கிமார்களையும், குணமாக்குகிறவர்களையுமே, இயேசு சுட்டிக்காட்டி
போதித்தார். இயேசு கிறிஸ்துவின் வார்த்தையின்படி, இந்த அற்புதம் செய்யும்
ஊழியம் கொண்டவர்களில் அநேகர் (ஒரு சிலரல்ல, எல்லோருமல்ல, ஆனால்அநேகர்)
தங்கள் தனிப்பட்ட வாழ்விலும், தங்கள் சிந்தனை வாழ்விலும் பாவத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் பாவ வாழ்க்கை, கிறிஸ்துவின்
நியாயாசனத்திற்கு முன்பாக
பகிரங்கமாக்கப்படும்!!
ஒரு மனிதன், தேவனால் அங்கீகரிக்கப்பட்டான் என்பதற்கு, "அற்புதங்கள்
செய்வது" ஒருவிதத்திலும் அடையாளமாகாது என்பதை வேதம் நமக்கு தெளிவாகப்
போதிக்கிறது. காதுள்ளவன் கேட்கக்கடவன்! இல்லையேல் வஞ்சிக்கப்படுவான்!!