கேள்வி:
நம்மைச் சுற்றி எத்தனையோ பேர் உள்ளனர். இயேசுவை அறியாதவர்கள் எத்தனையோ
நல்லவர்கள் இருக்கிறார்கள், இறந்து போகிறார்கள். அவர்களுக்கு
இயேசுவைப்பற்றி யாரும் சொல்லாமலே இறந்தும் போகிறார்கள். அவர்கள் அநேக
நன்மைகள் செய்து இருக்கலாம், மற்றவர்களால் துன்புறுத்தப்பட்டு
இருக்கலாம். இவர்கள் அனைவரும் நரகத்துக்கு போவார்களா அல்லது வித்தியாசமான
நியாயத்தீர்ப்பு இருக்குமா?
பதில்:
இந்தக் கேள்வி பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டுள்ளது. பைபிளில்
சொல்லப்பட்டுள்ள சுவிசேஷத்தை கேள்விப்படாதவர்களும் ஆக்கினைக்குள்ளாக
தீர்க்கப்படுவார்கள் என்று காட்டுவதுபோல் உள்ளது. இப்படி வாய்ப்பு
கிடைக்காதவர்கள் நரகத்துக்கு போவது நியாயமாக தோன்றவில்லை என்ற எண்ணம்
எழுவது இயல்பு. இன்று தொழில்நுட்பமானது எங்கேயோ சென்றுவிட்டது, இப்படி
இயேசுவைக் கேள்விப்படவதர்கள் ஒருவேளை மிகவும் சொற்பமானவர்களாக
இருக்கலாம்.
"எத்தனையோ நல்லவர்கள் இருக்கிறார்கள்" என்பது முழுக்க தவறு. There is no
one good. நல்லவன் ஒருவனும் இல்லை என்று பைபிளில் தெளிவாக உள்ளது
(ரோமர் 3:10-12) . நீங்கள் நல்லவர்கள் என்று நினைப்பவர்களின் மற்ற
பக்கங்கள் உங்களுக்கு தெரியாது. மிகவும் சரியாக சொல்லவேண்டும் என்றால்
நம்மைப்பற்றியே நமக்கு சரியாக தெரியாது. கொடுக்கப்பட்ட ஒரு சூழ்நிலையில்
எப்படி நடந்துகொண்டோம், ஏன் இப்படி செய்தோம், நினைத்தோம், பேசினோம் என்று
வருந்துபவர்கள் எல்லாருமே. எனவே பைபிளில் நன்மை செய்கிறவன் ஒருவனும்
இல்லை, இருதயமே மகா திருக்கும், கேடுள்ளதுமாக இருக்கிறது -heart is
deceitful and desperately wicked என்பது முழுக்க முழுக்க உண்மை.
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னையன்றி ஒருவனும்
பிதாவினிடத்தில் வரான் என்றும், நானே ஆடுகளுக்கு வாசல் என்வழியாய்
பிரவேசியாமல் வேறு வழியாய் பிரவேசிக்க முயற்சிப்பவன் கள்ளனும்
கொள்ளைக்காரனுமாக இருக்கிறான் என்று தெளிவாக இயேசு சொல்லியிருக்கிறார்.
இயேசுதான் ஒரே, வழி வேறு வழியில்லை.
இயேசுவைப்பற்றி கேள்விப்படாதவர்களைப் பற்றிய நியாயத்தீர்ப்பைப்
பார்ப்போம். இதற்காக பதில் பைபிளில் என்ன சொல்லப்பட்டுள்ளது?
அப்போஸ்தலனாகிய பவுல் இப்படியாக சொல்கிறார். ரோமர் 2ம் அதிகாரத்தில்
வாசிக்கிறோம்:
14. அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் (naturally)
நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள்
தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள்.
15. அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு
குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும்,
நியாயப்பிரமாணத்திற்க்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில்
எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.
16. என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய
அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது
விளங்கும்.