Type Here to Get Search Results !

இயேசுவின் தாயாகிய மரியாள் மரித்தார்களா அல்லது உயிருடன் பரலோகத்துக்கு எலியா, ஏனோக்கைப்போல எடுத்துக்கொள்ள பட்டார்களா?

வேதத்தில் இயேசுவின் தாயாகிய மரியாள், இயேசு பரலோகத்துக்கு ஏறிச்சென்றதுபோல் ஏறிப்போனதாக எங்கும் கூறப்படவில்லை.ஆயினும் அவர்களைக்குறித்து ஒரு தீர்க்கதரிசனம்
கூறப்பட்டுள்ளது:

லூக்கா 2:34,35

34. பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

35.உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான்.

35 வது வசனத்திலிருந்து மரியாள் எவ்விதமாக மரிக்கப்போகிறாள் என்பதை அங்கே காண்கிறோம். என்னுடைய புரிந்துகொள்ளுதளின்படி மரியாள் ஒரு இரத்த சாட்சியாக
மரித்திருக்கக்கூடும். இயேசுவின் சீடர்களில் அநேகரும் இரத்த சாட்சியாக மரித்தார்கள் ( பவுல், பேதுரு, தோமா, அந்திரேயா ... ). அக்காலங்களில் ரோமர்களின் கொடுங்கோலாட்சியானது கிறிஸ்தவர்களை அழித்துவிட அவர்களின் கை விரோதமாகவே இருந்தது. நீரோ என்னும் ராயன் (emperor) சுமார் கி.பி. 64ம் அல்லது 67ம் வருடம், பவுலை சிரச்சேதம்செய்து கொன்றான். அதே ராயன் பேதுருவை சிலுவையில் அறைந்து கொன்றான். இப்படியாக கிறிஸ்து இயேசுவுக்கு சாட்சிகளாக இருந்த ஒவ்வொருவரையும் கொல்லும்படி போனார்கள். மரியாளும் இரத்த சாட்சியாக மரிக்கப்போகிறாள் என்பதையே அந்த வசனமும் சொல்லுகிறது என்பது என்னுடைய கருத்தாகும்..

கடைசியாக இயேசுவின் தாயாகிய மரியாளைக் குறித்து நாம் அப் 1:13,14வாசிக்கிறோம். ஏறக்குறைய 120 பேர் பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். மரியாளும் அவர்களில் ஒருவராக காணப்பட்டார். மரியாளும் அந்நிய பாஷைகளை பேசி பரிசுத்தாவியின் அபிஷேகத்தால் நிறைக்கப்பட்டார். இதற்குப்பின் மரியாளைக்குறித்து வேதத்தில்
கூறப்படவில்லை.

[ சிறு குறிப்பு:
மரியாள்பெந்தெகொஸ்தே நாளில்பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றாள், அந்நிய பாஷைகளை பேசினாள். எனவே அவள் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்ற கூட்டத்தாரை சேர்ந்திருந்தாள். அவள் ரோமன் கத்தோலிக் அல்ல. :) மரியாளை வணங்குவது பாவமாகும். யாத் 20:1-3ல் என்னையன்றி வேறே தேவர்கள் உண்டாயிருக்க
வேண்டாம் என்று தேவன் சொன்னபிறகும் சிலைகளை (விக்கிரகங்களை) வணங்குவது பாவம்.

வெளி 21:8ல் ... விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.]

வேதத்திலிருந்து இரண்டு பேர் ( எலியா, ஏனோக்கு) மட்டும் உயிருடன் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டதாக வாசிக்கிறோம். இவர்கள் அப்படியே மேலே உயிருடன் சென்றாலும், அவர்களுடைய சரீரமானது மறுரூபம் அடைந்திருக்கக்கூடும் என்றே நான் எண்ணுகிறேன். ஏனெனில் நாம் இந்த சரீரத்துடன் பரலோகத்துக்குச் செல்ல முடியாது. இயேசுவும் உயிர்த்தெழுந்தபின்பு வேறொரு சரீரம் உடையவராக காணப்பட்டார். அந்த சரீரமானது பூட்டியிருந்த அறைக்குள்ளே
பிரவேசிக்கக்கூடிய தன்மையை பெற்றிருந்தது.

நம்முடைய இந்த சரீரமானது பரலோகத்துக்காக உண்டாக்கப்பட்டதல்ல. அப்போஸ்தலனாகிய பவுல் கூறும்போது:

1 கொரி 15:39, 40 மற்றும் 44ல்.

39. எல்லா மாம்சமும் ஒரே விதமான மாம்சமல்ல; மனுஷருடைய மாம்சம் வேறே, மிருகங்களுடைய மாம்சம் வேறே, மச்சங்களுடைய மாம்சம் வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே.

40. வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே;

44. ஜென்ம சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்ம சரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு.

மேலும்

எபிரெயர் 9:27
அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு
நியமிக்கப்பட்டிருக்கிறபடியே.

என்று சொல்கிறார். இவ்விரண்டு பேரும் மரிக்கவில்லை என்று நாம் அறிந்தபடியினாலே, வெளிப்படுத்தின விஷேசத்தில் கூறப்பட்டுள்ள உபத்திரவக்காலத்து இரத்த சாட்சிகளாகிய இரண்டு பேர் எலியா, ஏனோக்கு என்பவர்களாக இருக்கக்கூடும் என்று எண்ணப்படுகிறது. இவர்கள் இரத்த சாட்சிகளாக மரிப்பார்கள் என்றே எண்ணுகிறேன்.

சிலர், இல்லை இல்லை இவர்கள் இரண்டு பேரும் மோசேயும், எலியாவும் என்கிறார்கள். ஏனெனில் இயேசுவானவர் மறுரூபமானபோது அந்த மலையிலே

மாற்கு 9:4
"அப்பொழுது மோசேயும், எலியாவும் இயேசுவுடனே பேசுகிறவர்களாக அவர்களுக்குக்
காணப்பட்டார்கள்."
எனவே இவ்விருவரும் சாட்சிகள் என்கிறார்கள். அங்கே அப்போது பேதுருவும், யோவானும், யாக்கோபும் இருந்தார்களே!

அவர்களும் அதற்கு சாட்சிகள் என்பதாலும், எபிரெயர் 9:27ல் கூறப்பட்ட காரணத்தினாலும் இவ்விரு சாட்சிகளும் எலியாவும் ஏனோக்குமாக இருக்க சாத்தியங்கள் அதிகம்.

Post a Comment

0 Comments