தலைப்பு:
“அந்நிய தேசத்தில் அங்கலாய்ப்பு”.
வசன பிரிவுகள்
(Verse Division):-
(*) வச.1-2 = அந்நிய தேசத்தில் அழுகை.
(*) வச.3 = சிறை பிடித்தவர்கள்
பாடும்படி கேட்டல்.
(*) வச.4 = பதில்.
(*) வச.5-6 = எருசலேமின் மீது
வாஞ்சை.
(*) வச.7 = ஏதோமின் மீது பழிவாங்க ஜெபம்.
(*) வச.8-9 = பாழாக்கினவர்கள் பாழாகும்படி விருப்பம்.
குறிப்பு:-
இது ஒரு பாடகன் அல்லது இசைகருவி வாசிப்பவர் எழுதிய சங்கீதம் என கருதலாம். பாபிலோனில் சிறையிருக்கும் போது அல்லது சிறையிருப்பில் இருந்து மீன்ட பின்பு நடந்ததை நினைவு கூர்ந்து எழுதப்பட்டிருக்கலாம்.
திறவுகோல் வசனம்
(Key Verse):- வசனம் 5
திறவுகோல் வார்த்தை
(Key Word):- எருசலேம்
வியாக்கியானம்
(Interpretasion):-
வச.1-2: யூதர்கள் கின்னரங்களை எடுத்து வந்து கூடி இருந்ததால் அப்.16:13 இல் கூறப்பட்டிருப்பதை போல மதசம்மந்தமான கூடுகையாக இருக்கலாம். எருசலேமில் சுதந்திரமாக இருக்க வேண்டியவர்கள் பாபிலோனில் சிறைபட்டு அழுதுகொண்டு இருக்கிறார்கள்.
இதற்க்கு காரணம் என்ன?
அவர்கள் கர்த்தரை விட்டு பின்வாங்கினார்கள், பாவங்களில் தொடர்ந்து ஈடுபட்டார்கள் இதுவே காரணமாகும்.
வச.4: தாங்கள் மட்டுமே கர்த்தருடைய பிள்ளைகள் என்று யூதர்கள் கருதியதால் இவ்வாறு கூறினார்கள். ஆனால், கிறிஸ்தவர்கள் இவ்வாறு கூறுவது தவறு. யார் கேட்டாலும் கர்த்தருடைய பாட்டை கருத்துடன் பாட தயாராக இருக்க வேண்டும். கர்த்தரை பற்றி சொல்வதற்க்கு ஆயத்தமாய் இருக்க வேண்டும் (1 பேது 3:15).
வச.5-6: எருசலேமின் மீது யூதர்களுக்கு இருந்த வாஞ்சையை கவனித்து பரம எருசலேமின் மீது நாம் வாஞ்சையை வளர்த்து கொள்வோமாக.
வச.7: எருசலேமின் நாள்
எருசலேமுக்கு கர்த்தர் நன்மை செய்யும் நாள் , எருசலேமை அழித்தவர்களுக்கு கர்த்தர் பதில் செய்யும் நாள் ஆகும்.
பழிவாங்கும்படி ஜெபித்தல் கிறிஸ்தவர்களுக்கு ஏற்றதல்ல. நாம் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று இயேசு கூறினார் என்பதை அறிய மத் 5:44 ஐ வாசியுங்கள்.
வச.8-9: தங்கள் மிகுந்த கோபத்தில் பாபிலோனுக்கு எதிராக கூறிய போதிலும், இப்பகுதி தீர்க்கதரிசனமாக அமைந்தது. இந்த தீர்க்கதரிசனம் சிறிது காலத்தில் நிறைவேற்று. குழந்தைகளை கல்லில் மோதியடித்து கொள்ளுவது எவ்வளவு கொடூரமான செயல் என்று சிந்தியுங்கள். அக்காலத்தில் தங்கள் எதிரிகளுக்கு அந்த பகுதியில் இருந்த தேசத்தினர் இவ்வாறு செய்து வந்தனர். இன்றும் இதைவிட கொடூரம் செய்யும் பயங்கரவாதிகள் உண்டு அவர்களின் இரட்சிப்புகாக ஜெபிப்பது நம் கடமை ஆகும்.