எதையும்நமக்கென பற்றிக்கொண்டுவாழக்கூடாதெனலூக்கா 14:33 கூறுகிறது. நாம் அனேகம் பொருட்களை வைத்திருக்கலாம். ஆனால் அதில் ஒன்றையாகிலும் நாம் பற்றிக் கொண்டி
ருக்கக்கூடாது! இப்போது, நம்முடைய விலையுயர்ந்த பொருட்களில் ஒன்று திருடப்பட்டோ அல்லது அழிந்தோ போனாலும் அதைக் குறித்து நாம் மனசஞ்சலமோ அல்லது கவலையோ அடைந்திடத் தேவையில்லை! ஏன் தெரியுமா? அது உண்மையில் நமக்குச் சொந்தமானதல்ல!! நாமோ எஜமானின் உடைமைகளைக் கண்காணிக்கும் உக்கிராண பொறுப்பை மாத்திரமே பெற்றிருக்கிறோம். தேவன் நமக்கு அனேகம் பொருட்களை தந்து, அவைகள் அனைத்தையும் அவருடைய மகிமைக்காகவே பயன்படுத்த எதிர்பார்க்கிறார்! இருப்பினும், நாமோ இந்த பூமியில் வெறும் பரதேசிகள்தான்!!
தேவனுக்கே எல்லாவற்றையும் கொடுத்துவிடாமல் ஒரு மனிதன் “சுத்த இருதயத்தை” ஒருக்காலும் பெற்றுக்கொள்ள முடியாது. ஓர் சுத்த இருதயம் என்பது ஓர் “நல்ல மனசாட்சியிலிருந்து” வேறுபட்டதாகும். பணவிஷயங்களில் நீதியாய் நடப்பதின் மூலம்ஓர் நல்ல மனசாட்சிநமக்குக் கிட்டுகிறது. ஆனால் பணவிஷயத்தில் உண்மையாயிருக்கும் போது மாத்திரமேஓர் சுத்த இருதயம்நமக்கு கிட்டுகிறது!! உங்களிடம் ஓர் நல்ல மனசாட்சி இருந்தபோதிலும், உங்களுடைய இருதயமோ இப்பூமிக்குரிய யாதொரு உடைமைகள் மீதோ அல்லது ஒரு வேலையின் மீதோ பற்றிக்கொண்டிருக்கக்கூடும். இந்நிலையில், “என் முழு இருதயத்தோடும் நான் தேவனை நேசிக்கிறேன்!” என நீங்கள் ஒருக்காலும் கூறிட முடியாது! ஆம், இப்போது உங்கள் இருதயத்தில் சுத்தமில்லை.
இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் வருமானத்தில் ஆண்டவருக்கு 15% கொடுத்தார்கள்.
10% தசமபாகமாகவும்,
5% மற்ற காணிக்கையாகவும் கொடுத்தார்கள். தசமபாகம் கொடுக்கும்படி தேவன் செய்ததற்குரிய நோக்கத்தை
உபாகமம் 14:22,23 வசனங்கள் விவரிக்கிறது.
அவ்வசனத்தின்படி “உங்கள் வாழ்க்கையில் தேவனுக்கே முதலிடம் தர வேண்டும்!” என்பதே இந்த தசமபாகம் செலுத்துவதின் நோக்கமாகும்!. இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் அறுவடைகளைச் சேர்க்கும்போது அதில் 10% (தசமபாகத்தை) கொடுக்க வேண்டும். அதன் மூலமாய் “ஆண்டவரே உம்மிடமிருந்தே எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டோம்.......... உமக்கே எங்கள் வாழ்வில் முதலிடம் கொடுப்போம்” என்றே அவர்கள் தெரிவித்தார்கள்! ஆனால் கொஞ்சம் கொஞ்சமாய் இந்த தசமபாகம் செலுத்துதல் ஜனங்களுக்கு ஓர் வழக்கமான சடங்காயும், பாரமாயும் மாறிப்போனது. அவர்களைப்போலவே
இன்றுள்ள விசுவாசிகளுக்கும்‘தேவனுக்குக் கொடுப்பது’ பாரமாய் மாறிவிட்டது!!
இன்று புதிய
உடன்படிக்கையிலும் இதே கோட்பாடுதான் நிலைத்திருக்கிறது. அதாவது, “உலகப்பொருட்களுக்கு மேலாகதேவனுக்கே முதலிடம்கொடுப்பது.” அப்படியானால், இப்போது தேவனுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும்? “அவனவன்தன்தன் வரவுக்கு தக்கதாய்கொடுக்க வேண்டும்”
(1 கொரிந்தியர் 16:2) என்றே புதிய ஏற்பாடு
விடையளிக்கிறது. இருப்பினும், இதைவிட இப்போது அதிக முக்கியம் என்னவென்றால் “நாம் எதைக் கொடுத்தாலும் அதைமனப்பூர்வமாய்” மகிழ்ச்சியுடன் கொடுக்க வேண்டும்
(1 கொரிந்தியர் 9:7) என்பதுதான்!
யாரெல்லாம் மனப்பூர்வமான மகிழ்ச்சியுடனும், திரும்பப் பெறுவோம் என்கிற எதிர்பார்ப்புமில்லாமல் கொடுக்கிறார்களோ அவர்களே தேவனுடைய சிறந்த பங்கை தங்கள் வாழ்வில் பெறுவார்கள். ஒருசமயம் ஒரு சகோதரனைக் குறித்து கேள்விப்பட்டேன். அவர் அதிகம் சம்பாதிக்காவிட்டாலும், தன் வீட்டிலுள்ள தேவைகளுக்கு ஒன்றிலும் குறைவுபடாமல் யாருக்கும் கடன்படாமல் வாழ்ந்து வந்தார். “உங்கள் செழித்த வாழ்விற்கு ரகசியம் என்ன?” என்று ஒருவர் அவரிடம் கேட்ட போது, “தேவன் எனக்குத் தருவதிலிருந்து ஒரு பெரிய கரண்டியைக் கொண்டு அவருக்கு நான் திரும்ப அள்ளிக் கொடுக்கிறேன்! அவரும் திரும்ப எனக்கு அள்ளிக் கொடுக்கிறார். . . இச்சமயத்தில் நான் கண்டு பிடித்தது என்னவென்றால்,தேவனுடைய கரண்டி பெரிதாக இருந்ததுஎன்பது தான்!!” என்றார். ஆம், நாம் தேவனுக்கு கொடுப்பதைக் காட்டிலும் அதிகமாகவே நாம் எப்போதும்
பெற்றுக்கொள்கிறோம். இதை 2 கொரிந்தியர் 9:6 “பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்” என்றே நேர்த்தியாய் கூறுகிறது.