புத்தகத்தின் பெயர்:-
“சங்கீதங்கள்” அல்லது “திருபாடல்கள்” அல்லது “திருபாக்கள்” என்ற சொல் “பிசாமோய்” (லூக் 20:42; 22:44; அப் 1:20) என்ற கிரேக்க சொல்லின் மொழிபெயர்ப்பு ஆகும்.
சில யூதர்களிடையே “தெகிலீம்” என்பது பாடல்களின் தலைப்பாக உள்ளது இதற்கு “புகழ்ச்சிபா” அல்லது “புகழ்ச்சிப்பாடல்” என்று பொருள் (சங் 145). இன்னும் சிலர் “தெபில்லா” என்று பயன்படுததுகின்றனர் இதற்கு “மன்றாட்டு”, “வேண்டுதல்” என்று பொருள்.
எனினும் இந்த இரண்டு தலைப்புகளும் அனைத்து சங்கீதங்களுக்கும் பொருந்தாது.
எ.கா.
3,4,6,13,18 இவை தெகிலீம் ஆகாது.
8,16,45,85,92 இவை தெபில்லா ஆகாது.
ஆனால் “பிசாமோய்” என்ற கிரேக்க வார்த்தை “மிசுமோர்” என்ற எபிரேய வார்த்தையின் மொழிபெயர்பாகும். இந்த சொல் “புகழ்ச்சி” அல்லது “மன்றாட்டு” என்ற குறுகிய பொருள் கொள்ளாமல் பொதுவாக “நரம்பு கருவியின் துணையோடு வாசிக்கபடும் அனைத்து வழிபாட்டு பாடல்களையும் குறிக்கிறதாக உள்ளது. இதிலே “புகழ்”, “மன்றாட்டு” அனைத்துமே அடங்குகிறது. இந்த பொதுவான பெயரே அனைத்து சங்கீதங்களுக்கும் பொருத்தமாக உள்ளது. 57 சங்கீதங்களுக்கு இந்த வார்த்தை தலைப்பாகவே உள்ளது. (எ.கா. 4, 5, 6, 8, 9, 12, 13, 15, 19-25.......,)
எண் அமைப்பு:-
கி.மு. 13,12ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 4,3ஆம் நூற்றாண்டு வரை:-
1). ஒருமையில் “தெகில்லா” பன்மையில் “தெகில்லீம்” என பயன்படுத்தபடும் எபிரேய சொல்லுக்கு நேர் பொருள் “புகழ்ப்பாடல்” ஆகும். ஆங்கிலத்தில் “ஹிம்” என்றும் பொது விவிலியத்தில் “திருபாடல்கள்” என்றும் மொழி பெயர்க்கபட்டுள்ளது (145 தலைப்பை பாருங்கள்).
2). ஒருமையில் “தெபில்லா” பன்மையில் “தெபிலோது” என்ற எபிரேய சொல் “ஜெபம்”, “மன்றாட்டு”, “வேண்டுதல்” என்ற பொருள் தருகிறது (17, 86, 90, 102 தலைப்புகளை பாருங்கள்).
(*) பல சூழல், இடம், ஆசிரியர், அடியாள் மூலம் பாடப்பட்டதை யாரோ ஒருவர் கி.மு. 4-3ஆம் நூற்றாண்டில் தொகுத்து 150 பாடல்களை தந்துள்ளார்.
(*) கிரேக்க நாகரீகம், பன்பாடு, மொழி ஆகியவை பாலஸ்தீனத்திலே வளர்ந்த போது (க.மு. 4-3ஆம் நூற்றாண்டு) எபிரேய மொழயிலே இருந்த சங்கீதங்களை (வேதாகமத்தை கூட) கிரேக்கத்திற்க்கு மொழியாக்கம் செய்தனர். அப்பொழுது எபிரேய மூலத்திலிருந்த எண்களிலிருந்து கிரேக்கத்திற்க்கு சிறிது மாறுபட்டன.
(*) எபிரேயத்தில் இருந்த 9, 10 ஆகிய இரு சங்கிதங்களை இனைத்து கிரேகத்தில் சங்கீதம் 9 என ஒரே சங்கீதமாக அமைந்துள்ளது.
(*) எபிரேயத்தில் இருக்கும் 114, 115 இரண்டும் கிரேகத்தில் 113 ஆக ஒரே சங்கீதமாக உள்ளது.
(*) எபிரேயத்தில் இருக்கும் சங்கீதம் 116 ஐ கிரேகத்தில் இரு சங்கீதமாக 114, 115 ஆக உள்ளது.
(*) எபிரேயத்தில் இருக்கும் 147ஆம் சங்கீதம் கிரேகத்தில் 146, 147 என இரு சங்கீதமாக உள்ளது.
“இலத்தின் மொழிப்பெயர்ப்பும் “ஷல்காத்தா” கிரேக்க மரபை பின்பற்றியதாக உள்ளது”.
பலரால் எழுதப்பட்டு பாடபட்டதை ஒருவர் தொகுத்து கொடுத்தாலும் அவர் சிலவற்றை இரண்டுமுறை தந்துள்ளார். இதற்க்கு காரணம் தெரியவில்லை ஒருவேலை வெவ்வேறு இடங்களில் இருந்து இவைகளை பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது.
எ.கா.
(*) 14 = 53
(*) 40:12-17 = 70:1-5
(*) 57:7-11 = 108:1-5
(*) 60:6-13 = 108:6-13
(*) 18 = 2சாமு 22
(*) 96 = 16:23-33
சங்கீத புத்தகத்தில் இல்லாத சில சங்கீதங்கள்:-
(*) யாத் 15:1-18
(*) 2சாமு 2:1-10
(*) ஏசா 38:10-20
(*) ஏசா 57:14-21
(*) யோனா 2:2-9
(*) லூக்கா 1:47-55
(*) லூக்கா 1:67-79
(*) யோவா 1:1-18
(*) பிலி 2:6-11
(*) வெளி 4:11
(*) வெளி 5:9-13