அநேக சபைகளில் காணப்படும் மற்றொரு தீமை “பாரபட்சம்” காட்டுவதேயாகும் (யாக்கோபு 2:1).இந்த அதிகாரத்தில், ஐசுவரியவான்களுக்குத் தங்கள் சபைக்கூட்டங்களில் நல்ல இடத்தை ஒதுக்கித் தரும் அபாயத்தைக் குறிப்பிட்டு எச்சரிக்கிறார். இவ்வாறு பாரபட்சம் காட்டுகிறவர்கள் ‘பாவம் செய்கிறார்கள்’ என்றும் குறிப்பிட்டார் (யாக்கோபு 2:9). இதே விஷயத்தின் அடிப்படையில் மொழி வித்தியாசத்தில் பாரபட்சம், ஜாதி வித்தியாசத்தில் பாரபட்சம் எனத் தொடர்ந்து செல்கிறது!
இன்று அநேக சபைகளில் ஒரு மொழியைச் சார்ந்தவர்கள் வேறோரு மொழியைச் சார்ந்தவர்களோடு ஐக்கியமாயிருப்பதில்லை! ஒரு சமுதாயத்தை சார்ந்தவர்கள் மற்றொரு சமுதாயத்தை சார்ந்தவர்களோடும் ஐக்கியம் கொள்வதில்லை! வெவ்வேறு ஜாதியினர் கூடி வந்தாலும், அந்தந்த ஜாதியாரோடு மாத்திரமே ஐக்கியம் கொள்கிறார்கள்! ஆனால்,இவர்கள் மாத்திரம் இயேசுவின் சீஷர்களாயிருந்தால்கற்றவனும் - கல்லாதவனும், நாகரீகமுள்ளவனும் - நாகரீகமற்றவனும் ஒருவருக்கொருவர் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஐக்கியமாயிருப்பார்கள்!!
2 கொரிந்தியர் 5:16 கூறுகிறபடி, புதிய உடன்படிக்கையின் கீழ் ஒருவரையொருவர் நாம் மாம்சத்தின்படி அறிவதேயில்லை! இப்போது நாம் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாயிருப்பதால் ஒருவருடைய தோலின் நிறத்தையோ, சமுதாயத்தையோ அல்லது ஜாதியையோ நாம் பார்ப்பதேயில்லை (வசனம் 17).
ஆம், புது சிருஷ்டியில் மொழி, சமுதாயம், மற்றும் ஜாதி வித்தியாசங்கள் எதுவுமில்லை. இத்தகைய வாழ்விற்குள் நாம் விசுவாசிகளை நடத்தவில்லையென்றால், நாம் ஒருக்காலும இயேசுகிறிஸ்துவின் சபையை கட்ட முடியாது!
இருப்பினும் இந்த இடத்தில் நாம் கவனம் கொள்ள வேண்டிய பகுதியும் இருக்கிறது. தான் ஜாதி வித்தியாசத்தில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்பதைநிரூபிப்பதற்காகவேவேறு ஜாதியில் திருமணம் செய்வதற்கு ஓர் இயேசுவின் சீஷன் அழைக்கப்படவில்லை! இவ்வாறு செய்தவர்கள் சமுதாய சீர்திருத்தவாதியைப்போல் செயல்பட்டு, முடிவில் முற்றிலும் பொருத்தமற்ற திருமண வாழ்வை பெற்றிடும் அபாக்கியரானார்கள்!
திருமணத்திற்கு ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகும் பங்கு அதிகமாய் தேவைப்படுகிறது. இருப்பினும் வாழ்க்கைத் துணையாய் வரப்போகின்ற அந்த இருவர்களிடத்திலும் காணப்படும் வித்தியாசங்கள் மிக சொற்பமானதாயிருப்பதே நல்லது!
எனவே, ஒருவன் இயேசுவின் சீஷனாய் இருப்பதன் பொருள், அவன் திருமண விஷயத்தில் வயதையோ, கல்வியையோ, குடும்பப் பின்னணியையோ, பொருளாதார பின்னணியையோ மற்றும் ஜாதி ஆகிய பகுதிகளையோ கண்டுகொள்ளவேமாட்டான் என்பது நிச்சயமாய் பொருளாகாது! ஒருவன் தன் திருமணத்திற்கென உறுதியான தீர்மானத்திற்கு வருவதற்கு முன்பாக மேற்கண்டஅனைத்துப் பகுதிகளையும் குறித்து சிந்திப்பது நல்லது!!
ஒரு மூப்பன் சபை ஊழியத்தில் பாரபட்ச குற்றத்திற்குள் சிக்குவதற்குரிய ஒரு சூழ்நிலையும் இருக்கிறது. நீங்கள் பிரசங்கிக்கும் போது “ஒன்றை ஆழமாய் வலியுறுத்தும்படி” உங்கள் ஆவியில் ஏவப்பட்ட சமயத்தில் “நீங்கள் சொல்ல வந்த வார்த்தைகள்” கூட்டத்தில் அமர்ந்திருக்கும் சிலரைப் பாதிக்கும் என்பதை உணருகிறீர்கள்! இவ்வேளையில் அவர்களை மனம் புண்படச் செய்ய விரும்பாத நீங்கள் ஆவியானவர் சொல்லும்படி கூறிய வார்த்தைகளைச் சொல்லாமலே இருந்துவிட முடியும்! ஆம், நீங்கள் மனுஷரைப் பிரியப்படுத்த விரும்பியபடியால், தேவன் விரும்பியபடி பட்டயத்தை நீங்கள் சுழற்றவில்லை! இது நூற்றுக்கு நூறு பாரபட்சம்! இதன் விளைவாய் உங்கள் ஊழியத்தில் “தேவனுடைய அபிஷேகத்தை” நீங்கள் கண்டிப்பாய்
இழந்துபோவீர்கள்!!