இசைந்த ஐக்கியத்திற்கே ஆவிக்குரிய வல்லமை உண்டு! - சகரியா பூணன்

இயேசுவின் சீஷர்களுக்கு ‘அன்பே’ பிரதான அடையாளமாயிருக்கிறது. ஆகவேதான் இந்த சீஷர்களுக்கிடையிலான ஐக்கியம் மிக மிக முக்கியம் கொண்டதாக இருக்கிறது!

இயேசுவின் சீஷர்களிடையே காணப்படும் இதுபோன்ற ஐக்கியத்தினால் வெளிப்படும் வல்லமையைக் குறித்துமத்தேயு 18:18-20வசனங்களில் நாம் வாசிக்கிறோம். அந்த வசனங்களின் விரிவாக்க மொழிபெயர்ப்பை நாம் காண்பது நல்லது :

ஆண்டவர் இயேசு கூறினார், “ஒரு ஸ்தலத்தில் என்னுடைய இரண்டு அல்லது மூன்று சீஷர்கள் தங்களுக்குள் ஐக்கியக் குறைவு இல்லாமல் கூடிவந்தால் நான் அவர்கள் நடுவில் இருப்பேன்! அதன் பின்பு, என் பிதாவிடம் அவர்கள் எதைக் கேட்டாலும் அதை அவர்களுக்கு அருளிச்செய்வேன். இந்த பூமியில் யாதொரு இடத்தில் சம்பவிக்கும் சாத்தானுடைய கிரியைகளை கட்டுவதற்கும் அவர்கள் அதிகாரம் பெற்றிருப்பார்கள். அவ்வாறு சாத்தானின் கிரியைகள் இந்த பூமியில் கட்டப்படும்போது, சாத்தானின் வல்லமைக்கு மூலதனமாயிருக்கும் வானமண்டலங்களில் அந்த வல்லமை கட்டப்பட்டுவிடும்! இதுபோன்ற விசுவாசிகளே, இந்த பூமியில் சாத்தானால் கட்டப்பட்ட ஜனங்களை ‘விடுவித்து அவிழ்ப்பதற்கும்’ வல்லமை
பெற்றிருப்பார்கள்!!”

இவ்வாறு இயேசுவின் சீஷர்களுக்கு இடையிலான ஒற்றுமையிலும், ஐக்கியத்திலும் காணப்படும் ஆச்சரியமான வல்லமையை பிசாசு அறிந்து வைத்திருக்கிறான்.......... ஆனால், இன்றைய திரளான விசுவாசிகளோ இதை அறியாதிருக்கிறார்கள்!

ஆகவே விசுவாசிகளுக்கிடையில் ஐக்கிய குறைவை கொண்டு வருவதையே சாத்தான் தன்னுடைய பிரதான நோக்கமாய் கொண்டு ‘அதன் மூலம்’ தன்னிடத்தில் அவர்களுக்கு வல்லமை இல்லாது போகும்படியே எப்போதும் கிரியை செய்து கொண்டிருக்கிறான்!!

ஒரு வீட்டில்கணவனும் மனைவியும்ஒரே ஆவியுடையவர்களாய் இருந்துவிட்டால் அந்த இல்லத்தில்தான் எவ்வளவு வல்லமை உண்டாயிருக்க முடியும்! அதுபோன்ற இல்லத்தை சாத்தான் ஒருக்காலும் மேற்கொள்ள முடியாது!

அதேபோல், ஒரு சபையில் உள்ளஇரண்டு மூப்பர்கள்ஒரே ஆவியுடையவர்களாய் இருந்துவிட்டால், அந்த சபையில் எவ்வளவு வல்லமை உண்டாயிருக்கும்! அதுபோன்ற சபையை சாத்தான் ஒருக்காலும் மேற்கொண்டுவிட முடியாது!!

இன்றோ, இதுபோன்ற ஒற்றுமையும், ஐக்கியமும் அவர்களுக்குள் காணப்படாதபடியால் திரளான கிறிஸ்தவ சபைகளையும் இல்லங்களையும் சாத்தான் மேற்கொண்டு கொக்கரித்துக்
கொண்டிருக்கிறான்!!

இங்கே நான் “பிசாசை துரத்துவதைக் குறித்து” பேசிக்கொண்டிருக்கவில்லை! ஓர் பொதுவான விசுவாசத்தைப் பெற்றுக் கொண்ட எந்த விசுவாசியும் இயேசுவின் நாமத்தில் ஓர் தனிமனிதனாய் நின்றேகூட பிசாசை துரத்திவிட முடியும் என இயேசுமாற்கு 16:17-ல்கூறினார். இன்னும் சொல்லப்போனால், அவிசுவாசிகள்கூட பிசாசை இயேசுவின் நாமத்தில் துரத்தியதாகமத்தேயு 7:22,23வசனங்கள் கூறுகின்றன.

ஆனால், சாத்தான் உருவாக்கி வைத்திருக்கும் பிரச்சனைகளிலிருந்து இந்த ஜனங்களை விடுதலையாக்கி “சாத்தானுடைய கிரியைகளைக் கட்டுவதோ” ஓர் உயர்ந்த அரிய செயலேயாகும். இந்த அரிய செயலை ஒரேயொரு விசுவாசி தனிமையில் செய்துவிட முடியாது. அதற்கு கிறிஸ்துவின் சரீரம் வெளிப்பட வேண்டும்! இவ்வாறு கிறிஸ்துவின் சரீரத்தை வெளிப்படுத்துவதற்குகுறைந்த பட்சம் இரண்டு சீஷர்கள்வேண்டும்.

இதுபோன்ற “சரீரத்தின் மூலமாய்” கிரியை செய்திடும் அதிகாரமே இருளின் வல்லமைகளை தூர விரட்டியடிக்க முடியும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.