வசனம் 4:19-20
நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மற்ற ஜனங்களையும் நோக்கி: வேலை பெரிதும் விஸ்தாரமுமாயிருக்கிறது. நாம் அலங்கத்தின்மேல் சிதறப்பட்டு ஒருவருக்கு ஒருவர் தூரமாயிருக்கிறோம். நீங்கள் எவ்விடத்திலே எக்காளச் சத்தத்தைக் கேட்கிறீர்களோ அவ்விடத்திலே வந்து, எங்களோடே கூடுங்கள். நம்முடைய தேவன் நமக்காக யுத்தம்பண்ணுவார் என்றேன்.
நெகேமியா அவர்களுக்கு விளங்க கூறி வேலைபெரிதும் விஸ்தாரமுமாயிருக்கிறது. ஒருவருக்கொருவர் நாம் தூரமாயிருக்கிறோம். எக்காள சத்தத்தை எங்கே கேட்கிறீர்களோ அவ்விடத்திலே கூடுங்கள் என்று சொன்னான். மேலும் அவன் முக்கியமான அழகிய ஒரு செய்தியைக் கூறுகிறான். நம்முடைய தேவன் நமக்காக யுத்தம் பண்ணுவார் என்கிறான். அனைத்து சத்துவமும் எங்கே உள்ளதென்று நெகேமியா அறிவான். அதைச் சொல்ல அவன் ஒருபோதும் மறக்கவில்லை.
நாமும் தேவனுடைய வேலையைச் செய்யும் பணியில் வேறுபட்டுள்ளேர். சிலர் மிகத் தொலைவில்கூட உள்ளனர். நாம் ஒன்றுபடி வேண்டியுள்ளர். ஒருவருக்காக ஒருவர் தேவனிடத்தில் வேண்டுதல் செய்வதே அந்த ஒன்றுபடுதல் ஆகம். ஆனால் என்றோ ஒருநாள் எக்காள சத்தத்தினால் நாம் ஒன்று சேர்க்கப்படுவோம். கர்த்தர்தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும் தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார். (1.தெச.4:15-18).
வசனம் 4:21
இப்படியே நாங்கள் வேலைசெய்துகொண்டிருந்தோம். அவர்களிலே பாதிப்பேர் கிழக்கு வெளுக்கும் நேரமுதல் நட்சத்திரங்கள் காணுமட்டும் ஈட்டிகளைப்
பிடித்திருந்தார்கள்.
அவ்வாறே அவர்கள் செயல்ப்பட்டனர். இப்படியே நாங்கள் வேலைசெய்து கொண்டிருந்தோம் என்று கூறப்பட்டுள்ளது. அவர்களைத் தடுப்பது ஏதமில்லை. அந்தப் பகைஞரின் முயற்சிகளை அவர்கள் புறக்கணித்து அவர்களின் தாக்குதலை எதிர்க்கக் காத்திருந்தனர். தேவனுடைய வார்த்தைகளான, கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப் பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்திற்கு தகுதியானவன் அல்ல (லூக்.9:62) என்ற சத்தியத்திற்கு நெகேமியா ஒர் எடுத்துக்காட்டாக விளங்குகிறான்.
மேலும் நெகேமியா வேலைநேரத்தையும் குறிப்பிட்டு அவர்களில் பாதிப்பேர், கிழக்கு வெளுக்கும் நேரம் முதல் நட்சத்திரங்கள் காணுமட்டும் ஈட்டிகளைப் பிடித்திருந்தார்கள் என்று கூறிகிறான். இது பகலின் மிக அதிக நேரம். அது மட்டுமன்றி சூரியன் அஸ்தமித்த நேரம் தொடங்கி நட்சத்திரங்கள் தோன்றும் நேரம் வரையிலான குறகிய நேரம்கூட சேர்த்துக் கணக்கிடப்படுகின்றதன்றோ? தேவனுடைய திருப்பணியில் நம்மில் எத்தனை பேர் அத்துணைப்பகல் நேரத்தையும் செலவிடுகிறவர்களாக உள்ளோம் என்பதனை எண்ணிப் பார்க்கக்கடவோம்.
வசனம் 4:22
அக்காலத்திலே நான் ஜனங்களைப் பார்த்து: இராமாறு நமக்குக் காவலுக்கும் பகல்மாறு வேலைக்கும் உதவ, அவரவர் தங்கள் வேலைக்காரரோடுங்கூட எருசலேமுக்குள்ளே இராத்தங்கக்கடவர்கள் என்று சொல்லி,
மற்றுமொரு செயல் திட்டத்தை, நெகேமியா அறிவிக்கிறான். ஒவ்வொரு இராமாறு காவலுக்கும் பகல்மாறு வேலைக்கும் உதவ அவரவர் தங்கள் வேலைக்காரரோடுங்கூட எருசலேமுக்குள்ளே இராத்தங்க வேண்டும் என்று கூறுகிறான். எருசலேமைப் பாதுகாப்பின்றி விட்டுச் செல்ல அவன் விரும்பவில்லை. அதனால் இந்தச் செயல் திட்டம்.
வசனம் 4:23
நானாகிலும், என் சகோதரராகிலும், என் வேலைக்காரராகிலும், என்னைப் பின்பற்றிக் காவல்காக்கிற சேவகராகிலும் எங்கள் வஸ்திரங்களைக் களைந்துபோடாதிருந்தோம். அவரவருக்கு ஆயுதமும் தண்ணீரும் இருந்தது.
இந்த வசனம், யூதர்கள் எவ்வளவு தியாகமனதோடு பணியாற்றினார்கள் என்பதை விளக்குகிறது. நெகேமியாவும் அவனுடைய சகோதரரானவர்களும், வேலைக்காரர்களும், வஸ்திரங்களைக் களைந்து போடாதிரந்தனர். வஸ்திரங்களைத் துவைக்கத் தண்ணீர்களண்டையில் செல்லும்போதுகூட தங்கள் ஆயுதங்களுடன் சென்றனர்.
கர்த்தரின் ஆயுதசாலையிலே, பட்டயத்தைப்பற்றி தேவவசனமாகிய ஆவியின் பட்டயம் என கூறப்பட்டிருப்பதை நாம் எபேசியர் 36:17ல் வாசிக்கிறோம். நீ, இந்தப் பட்டயத்தை உனது தேவபணியில், தரித்துக்கொண்டு எங்னும் செல்கின்றாயா? இதன் பொருள் நீ வசனங்களடங்கிய ஒரு வேதபுத்தகத்தைச் சுமந்து செல்ல வேண்டும் என்பதல்ல. உனது மனதிலே வேதவசனங்கள் இருக்கவேண்டும். தாவீது நான் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன் எனக் கூறக் காண்கிறோம் (சங்.119:11). தேவைப்படும் போதெல்லாம் அது அங்கிருந்து நமக்குப் பயன்படவேண்டும். அது நமது மனதில் வைக்கப்பட நாம் தினமும் வேதத்தை வாசித்து, அவசியமானால் மன்பாடம் செய்யவேண்டும். வேதத்தை எடுத்து, திறந்து ஓரதிகாரத்தை வாசித்தால் மட்டும் போதாது. தினசரி வாசித்தலும் மனப்பாடம் செய்தலும் மிக முக்கியமாகும். அப்போதுதான் அது நமது மனதில் பதிய வைக்கப்படும். பரிசுத்த ஆவியின் ஏவதலால் நமக்குத் தேவவைப்படும்போது அது நினைவிற்கு கொண்டுவரப்படும். வேதத்தை நாம் படிக்காமலும், அதைப்பற்றி தியானிக்காமலும் இருந்தோமானால் அது நமக்கு நெஞ்சில் நிற்பது எப்படி?