நெகேமியா விளக்கவுரை 4:8-12


வசனம் 4:8-10
எருசலேமின்மேல் யுத்தம்பண்ண எல்லாரும் ஏகமாய் வரவும், வேலையைத் தடுக்கவும் கட்டுப்பாடு பண்ணினார்கள். ஆனாலும் நாங்கள் எங்கள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி, அவர்கள் நிமித்தம் இரவும்பகலும் ஜாமங்காக்கிறவர்களை வைத்தோம். அப்பொழுது யூதா மனிதர்: சுமைகாரரின் பெலன் குறைந்துபோகிறது. மண்மேடு மிச்சமாயிருக்கிறது. நாங்கள் அலங்கத்தைக் கட்டக்கூடாது என்றார்கள்.

நெகேமியாவிற்கு அவர்களின் திட்டங்கள் தெரிய வந்தது. மனிதர்கள் தங்களின் திட்டங்கள் தனிப்பட்டவைகள் என்று நினைக்கலாம். ஆனால் அனைத்தையும் தேவன் அறிவார் (1.யோ.3:22). மேலும் 8-12 இரா 6ல் கூறியுள்ளபடி சீரியாவின் இராஜாவிற்கு எப்படித் தெரிந்துவிடுகிறதென்று சில சொந்த ஆட்களைச் சந்தேசித்து அந்தத் துரோகி யார் என்று விசாரணை செய்யும்போது ஓர் ஊழியக்காரன்.... நீர் உம்முடைய பள்ளியறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவுக்கு அறிவிப்பான் என்று சொன்னான் என்று காண்கிறோம்.

சத்துருக்களின் திட்டங்களை நெகேமியா கேள்விப்பட்டவுடன் செயல்ப்படத்துவங்கினான். யூதர்கள் தேவனிடத்தில் சென்று தேவனை நோக்கி ஜெபம்பண்ணி, அவர்கள் நிமித்தம் இரவும் பகலும் ஜாமங்காக்கிறவர்களை வைத்தோம் என்று கூறுகிறான். இதற்குமுன் செய்தது போலவே நெகேமியா சரியான முறையைப் பின்பற்றினான். பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி... ராஜாவைப் பார்த்து வேண்டிக்கொள்கிறேன் (2:4-5) என்று நெகேமியா ஜெபத்தோடு செயல்ப்பட்டான். இவை இரண்டும் ஒன்றாக இணைந்திருக்கவேண்டும். ஜெபம் பண்ணி விழித்திருங்கள்.

இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ய+தா மனிதர் சொன்னார்கள் என்பது அங்கு கட்டும் பணியைச் செய்து வந்த அனைத்து மக்களும் ஒப்புக்கொண்டு சொன்னதைத் தான் குறிக்கும். கட்டும் பணியின் அலங்கங்களின் பாதி பகுதி மட்டும் கட்டி முடித்தபின் அவர்கள் மிகவும் சோர்வடைந்திருந்தனர். அதற்குக் காரணம் அப்பணியைச் செய்தவர்கள் அனைவரும் சேர்ந்து சரீரப்படியான பணியில் ஈடுபடவில்லை. மேலும் பாதி வேலை நேரம் என்பது கஷ்டமான வேலையின் நேரமேயாகும். அவர்கள் மகிவும் சோர்வடைந்திருந்தனர். மேலும் அதிகமான குப்பை மேடுகளும் இடிபாடுகளும் சேர்ந்திருந்த குவியல்களினிமித்தம் தொடர்ந்து கட்ட முடியவில்லை. நமது வாழ்க்கையிலும் கூட எத்தனை முறை நாம் பலவகை குப்பை கழிவுகள் போன்ற இடர் பாடுகளினால் தேவனுடைய பணியைச் செய்ய முடியாமல் திகைக்கிறோம். உன்னுடைய வாழ்க்கையில் உள்ள அப்படிப்பட்ட குப்பைகள் என்னவென்பதனை நீ உணர்ந்திருக்கிறாயா? எவ்வளவு அருமையான நேரத்தையும், பணத்தையும் நீ அதற்காக, வீணாக செலவு செய்ய நேர்ந்துள்ளது? இங்கே அதுபோன்ற பயனற்ற காரணங்களுக்காகவே அவர்கள் கட்டும் பணியை நிறுத்திவைக்க
வேண்டியதாயிற்று. பாவம் நெகேமியா. முதலாவது அவனுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அவனது விரோதிகள் அடுத்து அவர்களது பணியிடங்களில் இருந்த குப்பைக்குவியல்கள்.

வசனம் 4:11
எங்கள் சத்துருக்களோவென்றால்: நாங்கள் அவர்கள் நடுவே வந்து, அவர்களைக் கொன்றுபோடுமட்டும், அவர்கள் அதை அறியாமலும் பாராமலும் இருக்கவேண்டும். இவ்விதமாய் அந்த வேலையை
ஓயப்பண்ணுவோம் என்றார்கள்.

இந்தக் குப்பை
குவியல்களைக்கூட நெகேமியாவின் சத்துருக்கள் பயன்படுத்த ஆரம்பித்தனர். இங்கே ஏராளமான குப்பை மேடுகள் பெரியகுவியல்களாக உள்ளன. நாங்கள் வருவதை அவர்கள் காணக்கூடாமல் அவை மறைந்துவிடும். நாங்கள் அவர்கள்மேல் விழுந்து அவர்கள் தாக்கும்வரை அவர்கள் அதை உணரமுடியாது என்றெல்லாம் சொல்லிக்கொண்டனர். அந்தக் குப்பைகுவியல்கள் மட்டும் தானாக தீங்கொன்றும் செய்யமுடியாது. அது அங்கே குவியல்களாகமட்டும் அமைந்திருந்து. ஆனால் அது சத்துருக்கள் நெருங்கி வருவதை முழுவதும் முழுவதுமாக மறைத்து நிற்கும். நமது
வாழ்க்கையிலும்கூட அத்தகைய நிகழ்ச்சிகளே நடக்கின்றன. நமது வாழ்க்கையிலுள்ள சில தீய பழக்கக்குவியல்கள் நமது சத்துரு நமக்கு விரோதமாக நம்மை வஞ்சித்து செய்யும் செயல்களை அறிந்துகொள்ள முடியாதபடி நம்மைத் தடுத்து நிறுத்துகின்றன. நாம் அத்தகைய குப்பைகளை நம்மைவிட்டு
அகற்றுவோமாக.

அந்தச் சத்துருக்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதனைத் திட்டமாகக் கூறுகின்றனர். அதாவது அந்த யூதர்களைத் தாக்கிக்கொன்று அந்த வேலையை நடைபெறவிடாமல் தடுத்துப்போட நினைக்கின்றனர். அவர்கள் அந்த வேலையை நிறுத்துமுன் அந்த ய+தர்களைத் தாக்கிக் கொல்லவேண்டும் என்று நினைக்கின்றனர். கொல்லவேண்டுமே என்பது அவர்களுக்குக் கவலையளிக்கவில்லை. முதலில் கொல்லத்தான்வேண்டு
மென்றாலும் அதற்கு அவர்கள் சம்மதித்திருந்தனர். எப்படியாவது கட்டும்பணியை நிறுத்திவிட வேண்டும். அதுதான் அவர்களுக்கு மிகவும் முக்கியம்.

வசனம் 4:12
அதை அவர்களண்டையிலே குடியிருக்கிற யூதரும், பல இடங்களிலுமிருந்து எங்களிடத்துக்கு வந்து, பத்துவிசை எங்களுக்குச் சொன்னார்கள்.

வேலையை நிறுத்தச் செய்யும் முயற்சிகளில் அவர்கள் மேலும் என்ன செய்தார்கள் என்பது
அறிவிக்கப்படவில்லை. ஆனால் அவர்களின் இந்தக் கொடுரமான திட்டங்கள் அங்கே அருகில் இருந்த பல யூதருக்கும் தெரிய வந்தன. அவர்கள்
நெகேமியாவினிடத்தில் வந்த அதை அவனுக்கு அறிவித்தனர். விரோதிகள் எங்கும் வேண்டுமானாலும் நம்மைத் தாக்கத் தயாராக உள்ளனர் என்று அவர்கள் அவனிடம் கூறினர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.