நெகேமியா விளக்கவுரை 4:13-18


வசனம் 4:13
அப்பொழுது நான்: அலங்கத்துக்குப் பின்னாக இருக்கிற பள்ளமான இடங்களிலும் மேடுகளிலும், பட்டயங்களையும், ஈட்டிகளையும், வில்லுகளையும் பிடித்திருக்கிற ஜனங்களைக் குடும்பங் குடும்பமாக நிறுத்தினேன்.

நெகேமியா உடனே செயல்ப்படத் துணிந்தான். அவன் காத்திருந்து பார்க்கவில்லை. மதில்களைப் பாதுகாக்கத் திட்டமிட்டான். அவன் அலங்கத்துக்குப் பின்னாக இருக்கிற பள்ளமான இடங்களிலும் மேடுகளிலும் பட்டயங்களையும், ஈட்டிகளையும், வில்லுகளையும் பிடித்திருக்கிற ஜனங்களைக் குடம்பம் குடம்பமாக நிறுத்திவைத்தான். அவர்கள் போரிட்டு, வென்று பாதுகாத்துக் கொள்ளத் தயாராக நிறுத்தப்பட்டனர். கர்த்தருடைய வேலைக்காக குடும்பங்குடும்பமாக உழைத்தல் என்பது மிகவும் மகிமையான செயல் ஆகும்.

வசனம் 4:14
அதை நான் பார்த்து எழும்பி, பிரபுக்களையும் அதிகாரிகளையும் மற்ற ஜனங்களையும் நோக்கி: அவர்களுக்குப் பயப்படாதிருங்கள். நீங்கள் மகத்துவமும் பயங்கரமுமான ஆண்டவரை நினைத்து, உங்கள் சகோதரருக்காகவும், உங்கள் குமாரருக்காகவும், உங்கள் குமாரத்திகளுக்காகவும், உங்கள் மனைவிகளுக்காகவும், உங்கள் வீடுகளுக்காகவும் யுத்தம்பண்ணுங்கள் என்றேன்.

அந்த ஜனங்கள் சற்றே பயந்திருந்தனர் என்பதனை நெகேமியா அறிந்தபோது பிரபுக்கள், அதிகாரிகள், மற்ற ஜனங்கள் யாவரையும் தன்னிடத்தே அழைத்து, அவர்களுக்குப் பயப்படாதிருங்கள் என்று கூறினான். தேவனாகிய கர்த்தர் இதுபோல் தமது மக்களுக்குப் பலமுறை கூறியுள்ளார். எரேமியாவைத் தமது பணிக்காக அழைத்தபோது அவனிடத்தில் தேவன் அவ்வாறுதான் கூறினார். நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம். உன்னைக் காக்கும்படி நான் உன்னுடனே இருக்கிறேன் என்றார். (எரேமி.1:8, உபா.31:6-8, ஏசா.1:2,5, லூக்.12:7,32). நெகேமியாவும் அதே காரணத்தை விளக்கிக்கூறுகிறான். மகத்துவமும் பயங்கரமுமான ஆண்டவரை நினைத்து..... உங்கள் குடும்பங்களுக்காகவும் உங்கள் வீடுகளுக்காகவும் யுத்தம்பண்ணுங்கள் என்று சொன்னான். பரலோகத்தின் சிங்காசனத்திலே வீற்றிருக்கிறவர் யார் என்பதனையும் எவ்வளவு சீக்கிரம் நாம் மறந்து விடுகிறோம். நாம் இது குறித்து நினைவூட்டப்பட வேண்டியவர்களாக இருப்பது என்னே!

வசனம் 4:15
எங்களுக்குச்செய்தி தெரியவந்ததென்றும், தேவன் அவர்கள் ஆலோசனையை அபத்தமாக்கினாரென்றும், எங்கள் பகைஞர் கேட்டபோது, நாங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் வேலையைச் செய்ய அலங்கத்துக்குத் திரும்பினோம்.

யூதர்களுக்குத் தங்களின் திட்டம் தெரியவந்துவிட்டது என்று அந்தச் சத்துருக்கள் கேள்விப்பட்டனர். நெகேமியா கர்த்தரைத் துதித்துப் போற்றினான் கர்த்தர் ஜாதிகளின் ஆலோசனையை விருதாவாக்கி.... (சங்.33:10) என்று தாவீது கூறுகிறான். எல்லா ய+தர்களும் அலங்கங்களைக் கட்டும் பணியை மீண்டும் துவக்கியுள்ளதையும் அந்தச் சத்துருக்கள் காண்கின்றனர். அவர்களின் எல்லாத் திட்டங்களும் பயனற்றுவிட்டதை அறிகின்றனர்.

வசனம் 4:16-17
அன்றுமுதற்கொண்டு என் வேலைக்காரரில் பாதிப்பேர் வேலைசெய்தார்கள், பாதிப்பேர் ஈட்டிகளையும் பரிசைகளையும் வில்லுகளையும் கவசங்களையும் பிடித்து நின்றார்கள். அதிகாரிகள் யூதா வம்சத்தார் எல்லாருக்கும் பின்னாக நின்றார்கள். அலங்கத்திலே கட்டுகிறவர்களும், சுமைசுமக்கிறவர்களும், சுமையேற்றுகிறவர்களும், அவரவர் ஒரு கையினாலே வேலைசெய்து, மறுகையினாலே ஆயுதம் பிடித்திருந்தார்கள்.

ஆனால் யூதர்களைப் பொறுத்தவரையில் அவர்களிடத்தில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது. விரோதிகளின் திட்டங்கள் அவர்களை ஆயதபாணிகளாக வைத்தது. அவர்களில் பாதிப்பேர் ஆயுதந்தரித்தவர்களாக பாதுகாப்பிற்கு நெகேமியாவினால் நிறுத்தப்பட்டனர். ஈட்டிகளையும் வில்லுகளையும் அவர்கள் பிடித்து நின்றனர். மற்றப் பாதிப்பேர் கட்டும் பணியைச் செய்தனர். சுமை சுமக்கிறவர்களும் சுமையேற்றுகிறவர்களும் ஒரு கையினாலே வேலைசெய்து மறுகையினாலே ஆயதம் பிடித்திருந்தார்கள். கட்டுகிறவர்கள் அவரவர் தங்கள் பட்டயத்தைத் தங்கள் இடுப்பிலே கட்டிக் கொண்டவர்களாய் வேலைசெய்தார்கள். அவர்கள் Nடீதவைக்கேற்றபடி குறிப்பிட்ட இடங்களிலே நின்றவர்களாய் போருக்குத் தயாரான நிலையில் இருந்தனர்.

வசனம் 4:18
கட்டுகிறவர்கள் அவரவர் தங்கள் பட்டயத்தைத் தங்கள் இடுப்பிலே கட்டிக்கொண்டவர்களாய் வேலைசெய்தார்கள். எக்காளம் ஊதுகிறவன் என்னண்டையிலே நின்றான்.

கர்த்தர் நம்மை எப்போதும் ஆயத்தமாயிருக்க சொல்லியிருக்கிறாரன்றோ? தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்..... நீதியென்னும் மார்க்கவசத்தையும் தரித்தவர்களாயும் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைத் தரித்தவர்களாயும் விசுவாசமென்னும் கேடகத்தையும்... ரட்சண்யமென்னும் தலைச்சீராவையும் எடுத்துக்கொள்ளுங்கள் (எபேசி.6:10-17) என வேதத்தில் வாசிக்கிறோம். அடுத்து நெகேமியா எக்காளம் ஊதகிறவனை அவனண்டையில் நிற்கும்படி செய்தான். எக்காளம் ஊதும்போது யாவரும் அவ்விடத்தில் வந்து அவன் சொல்லியிருக்கிறபடி செய்ய அவர்களுக்குச்
சொல்லிவைத்தான்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.