சில முக்கிய குறிப்புகள்:-
தலைப்புகள்:-
சங்கீதங்களில் வரும் தலைப்பு நான்கு செய்திகளை வெளிபடுத்தும்.
1 பாடலின் தன்மை
2 வழிபாட்டு குரிப்புகள்
3 இசை குறிப்புகள்
4 ஆசிரியர் குறிப்புகள்
1). பாடலின் தன்மை:-
சங்கீத தலைப்புகளில் “சிர்” என்ற வார்த்தை 30 முறையும் “மிஸ்மோர்” என்ற வார்த்தை 57 முறையும் கூறப்பட்டுள்ளன. இந்த இரு சொற்க்களும் “புகழ்ச்சிப்பாடல்” என மொழி பெயர்க்கபட்டுள்ளன. இவை இரண்டும் அதிகமாக ஆராதனை சமயத்தில் பயன்படுத்தப்பட்டன. “மிஸ்மோர்” என்பது நரம்பு கருவிகளால் பாடப்பட்டன.
“மஸ்கில்” என்ற வார்த்தை 13 முறை குறிபிடப்பட்டுள்ளன. இதை “அறப்பாடல்” என மொழிப்பெயர்த்துள்ளனர். (32, 53, 54) இப்பாடலின் கருத்தையே தலைப்பாக வைத்திருக்கலாம்.
“மிஸ்டாம்” 6 முறை வருகிறது இதை “கழுவாய்” பாடல் என்கின்றனர். (16, 56-60). “காட்டாம்” என்ற அடி சொல்லுக்கு அக்காலத்து மொழியில் “மூடுதல்” என்று பொருள். “தெபில்லா” 5 முறை வருகிறது. இது பெரும்பாலும் புலம்பல், மன்றாட்டு
பாடல்களில் வருகிறது (17, 86, 90, 102, 142).
2). வழிபாட்டு குறிப்புகள்:-
கிரேக்க, லத்தின், அரமேயு மொழி பெயர்ப்பில் வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பாடல் தரப்பட்டுள்ளன.
திங்கள் - 48 - கிரேக்
செவ்வாய் - 82 - அரமேயு
புதன் - 94 - கிரேக்
வியாழன் - 81 - லத்தின்
வெள்ளி - 93 - கிரேக்
சனி - 92 - எபிரேயு
ஞாயிறு - 24 - கிரேக்
“தோடா” இதன் பொருள் “நன்றி” (100). “ஹஸ்கீர்” இதன் பொருள் “நினைவு கூறுதல்” ஆகும். தன் வாக்கை தேவன் நினைவில் கொள்ள வேண்டும் என்பதாகும் (38, 70). 120-134 இந்த பாடல்கள் சீயோன் மலை ஏறி ஆரதனை செய்ய சென்ற போது பாடப்பட்ட பாடலாக இருக்கலாம் என கருதுகின்றனர்.
3). இசை குறிப்புகள்:-
“லா-மெனாசே” இதன் பொருள் “பாடகர் தலைவருக்கு” என்பதாகும். பாடற்குழு தலைவரிடமிருந்த பாடல்கள் அவரிடமிருந்து பெறப்பட்டவை என்று பொருள். இது 55 பாடல்களில் வருகிறது (64-70, 75-77).
“சேலா” இது 39 பாடலில் 71 முறை வருகிறது (3, 4, 9, 20, 24....,). இதன் பொருள் “குரலை உயர்த்து”, “சிறிது இடைவெளி விடு”, “தலை கனி”, “மறுபடியும் பாடு” என பல அர்த்தம் கொண்டதாகும்.
“அல்ஹஷெமினித்” இதன் பொருள் “எட்டாம் கட்டையில் பாடு” என்பதாகும் (6, 12). இது எட்டு கம்பிகளுள்ள நரம்பு கருவிகளை காட்டுகிறது. ஒரு வழிபாட்டின் எட்டாம் பகுதியையும் குறிப்பதாக உள்ளது.
“அல்ஜிட்டித்” இது ஒரு குறிப்பிட்ட இசை கருவியையோ அல்லது இராகத்தையோ குறிப்பதாக உள்ளது (8, 81, 84)
சங்கீதங்களின் வகைகள்:-
1).இறை புகழ் சங்கீதங்கள்:-
அ). இறை புகழ்
8, 19, 29, 33, 100, 103, 104, 108, 111, 113, 114, 117, 135, 136, 145, 146, 147, 148, 149, 150
ஆ). யாவேயின் அரசாட்சி
47, 93, 96, 97, 98, 99 ஆண்டவர் அரசாட்சி செய்கிறார் என வரும்
இ). சீயோன் புகழ்
46, 48, 76, 84, 87, 122
2). புலம்பல் சங்கீதங்கள்:-
அ). தனி நபர் புலம்பல்
5, 6, 7, 10, 12, 13, 17, 22, 25, 26, 28, 31, 35, 36, 38, 39, 41, 42, 43, 51, 54, 55, 56, 57, 59, 61, 63, 64, 69, 70, 71, 86, 88, 102, 109, 120, 130, 140, 141, 142, 143
ஆ). சமூக புலம்பல்
12, 44, 58, 60, 74, 79, 80, 83, 85, 90, 94, 106, 123, 126, 137
3). நம்பிக்கை சங்கீதங்கள்:-
அ). தனி நபர் நம்பிக்கை
3, 4, 16, 23, 27, 62, 121, 131
ஆ). சமூக நம்பிக்கை
116, 125, 129
4). செய் நன்றி சங்கீதங்கள்:-
அ). தனி நபர் செய் நன்றி
9, 30, 32, 34, 40, 41, 92, 107, 115, 138
ஆ). சமூக செய் நன்றி
65, 66, 67, 68, 118, 124
5). அரச சங்கீதங்கள்:-
2, 18, 20, 21, 45, 72, 89, 101, 110, 132, 1446). அறிவுரை கூறும்
சங்கீதங்கள்:-
அ) அறிவை விளக்கும் சங்கீதங்கள்
1, 37, 49, 73, 91, 112, 119, 127, 128, 133, 139
ஆ) இறைவாக்கு சங்கீதங்கள்
14, 50, 52, 53, 75, 82, 95
இ) வரலாற்று சங்கீதங்கள்
78, 105, 68, 77, 85, 106, 129, 136, 144
ஈ) திருவழிபாட்டு சங்கீதங்கள்
15, 24 134
