சங்கீதம் விளக்கவுரை அறிமுகம் பாகம் 2

சங்கீத புத்தகத்தின்
பகுதிகள்:-

சங்கீத புத்தகத்தை பிரிக்கும் முறையில் பலர் பல வன்னம் கூறுகின்றனர். இதில் நான்கு வகையான பிரிக்கும் முறை உள்ளது அவை எல்லாவற்றையும் தருகிறேன். வாங்க படிக்கலாம்..........

I). இருவகையாக
பிரிக்கும் முறை:-

சங் 70:20 இல் தாவீதின் மன்றாட்டு நிறைவுற்றது என்ற குறிப்பு உள்ளதால் சிலர் 150 சங்கீதங்களை இரண்டு பிரிவாக பிரிக்கின்றனர்.

(#) 1-72
(#) 73-150

கருத்து அடிப்படையில் இது அமையாததால் இது ஏற்றுக்கொள்ள படவில்லை.

II). முப்பகுதி பிரிவு முறை:-

A). தேவனுடைய பெயர்களை அடிப்படையாக கொண்ட மூன்று பிரிவுகள்:-

பழைய ஏற்பாட்டில் தேவனுக்கு இரண்டு பெயர்கள்
கொடுக்கபட்டுள்ளன.

(*) “ஏலோஹீம்”,
(*) “யாவே”.

“ஏலோஹீம்” காணானிய மரபை பின்பற்றியது ஆகும்.
“யாவே” மோசேவுக்கு வெளிபடுத்தியது (யாத் 3:3-15). இது எருசலேம் தேவாலய சூழலில் பயன்படுத்தபட்டதாகும்.

தமிழாக்கம்:-

“ஏலோஹீம்” - “இறைவன்”, “கடவுள்”, “கர்த்தர்”.
“யாவே” - “ஆண்டவர்”.

1). யாவே - ஆண்டவர் சங்கீதங்கள்:-

இந்த பகுதியில் 1-41 சங்கீதங்கள் அடங்கும். இந்த 1-41 சங்கீதங்களில் “யாவே” - “ஆண்டவர்” என்ற வார்த்தை 272 முறையும், “ஏலோஹீம்” என்ற வார்த்தை 15 முறை மட்டுமே இருப்பதாலும் இதை யாவே சங்கீதங்கள் என பிரிக்கின்றனர். இது எபிரேய அடிப்படையிலான கனிப்பு ஆகும். இந்த பகுதியில் உள்ள 1, 2, 33 ஆகிய சங்கீதங்களை தவிர மற்ற எல்லா சங்கீதங்களின் தலைப்பிலும் தாவீதின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

2). ஏலோஹீம் சங்கீதங்கள்:-

இந்த பிரிவில் 42-89 சங்கீதங்கள் அடங்குகின்றன. இந்த சங்கீத பகுதியில் “ஏலோஹீம்’ என்ற வார்த்தை 208 முறையும் “யாவே” என்ற வார்த்தை 75 முறையும் இருப்பதால் இதை “ஏலோஹீம் சங்கீதங்கள்” என்கின்றனர்.

3). யாவே சங்கீதங்கள்:-

இந்த பகுதியில் 90-150 சங்கீதங்கள் உள்ளன. இதில் “யாவே” என்ற வார்த்தை 339 முறையும் “ஏலோஹீம்” என்ற வார்த்தை 9 முறையும் இருப்பதால் இதையும் “ யாவே சங்கீதங்கள்” என பிரிக்கின்றனர்.

இது பெயரளவில் மட்டுமே இருப்பதாலும் கருத்தளவில் இல்லாததாலும் இதையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

B). மனநிலை
அடிப்படையிலான மூன்று பிரிவுகள்:-

1). துயர மனநிலை
பாடல்கள்:-

வியாதி, மரணம், பாவம் இவற்றின் பின்னனியான துக்கம், துயரம் ஆகிய சூழலில் பிறந்த பாடல்களை “துயர மனநிலை பாடல்கள்” என பிரிக்கின்றனர். (எ.கா. 6, 13, 22, 51, 63, 71, 120, 130, 140)

2). மகிழ்ச்சி மனநிலை
பாடல்கள்:-

விடுதலை, வெற்றி, மகிழ்ச்சி, திருமணம் ஆகிய சூழலில் பாடியதை “மகிழ்ச்சி மனநிலை பாடல்கள் என பிரிக்கின்றனர். (எ.கா. 8, 29, 33, 93, 99, 103, 104, 136, 138, 150).

3). சாதாரன மனநிலை
பாடல்கள்:-

மகிழ்ச்சி அல்லது துயரம் என குறிப்பிட்டு சொல்ல முடியாத சூழல், அதாவது பயிற்ச்சி, சட்டம், வரலாறு, திருபயணம் போன்ற அன்றாட சூழலில் பாடிய பாடல்களை “சாதாரன மனநிலை பாடல்கள்” என பிரிக்கின்றனர். (46, 48, 53, 75, 78, 114, 127, 139).

இந்த முறையை அநேக வேத ஆய்வாளர்கள்
அங்கிகரிக்கின்றனர்.

III). நாற்பகுதி பிரிவு:-

வரலாற்று அடிப்படையில் 150 சங்கீதங்களையும் நான்கு பிரிவுகளாக பிரிக்கின்றனர்.

1). விடுதலை ஏக்கமும், பஸ்கா நிகழ்ச்சியும் பல பாடல்களை தோற்றுவித்தன ஏறக்குறை 90 பாடல்கள் இதில் இது முதல் பகுதியாக உள்ளது. (3, 4, 4, 5, 11, 12, 21, 22).

2). உடன்படிக்கையும் அதை சார்ந்த அறிவுரைகளும் அடங்கிய பாடல்கள். (1, 14, 19, 37, 78, 114).

3). படைப்பு, மீட்புக்காக தேவனை புகழ்ந்து பாடும் பாடல்கள். (8, 29, 47, 92, 97, 100, 148, 149, 150).

4). சிறப்பு நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் சமயத்தில் பாடிய பாடல்கள். (2, 72, 84, 87, 121, 133).

இந்த முறையையும் பரவலாக அநேகர்
ஏற்றுக்கொள்கின்றனர்.

IV). ஐம்பகுதி பிரிவு முறை:-

“தால்மூது” என்ற அரமேயு மொழி பெயர்ப்பை பின்பற்றி ஐந்து பிரிவுகளாக பிரிக்கின்றனர். ஆமென் அல்லது அல்லேலுயா என்று வருவதை அடிப்படையாக கொண்டு இதை பிரிக்கின்றனர்.

1. (*) முதல் பகுதி - 1-41
41:13 இல் இரண்டு முறை ஆமென் வரும்.

2. (*) இரண்டாம் பகுதி - 42-72
72:19 இல் இருமுறை ஆமென் வரும்.

3. (*) மூன்றாம் பகுதி - 73-89
89:52 இல் இரு முறை ஆமென் வரும்.

4). (*) நான்காம் பகுதி - 90-106
106:48 இல் ஆமென் அல்லேலுயா வரும்.

5). (*) ஐந்தாம் பகுதி - 107-150
150:6 இல் அல்லேலுயா வரும்.

இந்த முறையை ஏற்றுக்கொள்ள வில்லை காரனம் இந்த ஐந்தாம் பகுதியில் இடை இடையே அல்லேலுயா என வரும் வசனங்கள் இருப்பதே ஆகும்.
(135:21; 140:10; 148:4).

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.