தொடக்கநூல் (ஆதியாகமம் : 1 முதல் 20ம் அதிகாரம் வினாடி வினா




தொடக்கநூல் (ஆதியாகமம் : 1 முதல் 20ம் அதிகாரம் வினாடி வினா

1.கடவுள் ஐந்தாம் நாளில் எவற்றை உருவாக்கினார்?


a).விண்மீன்கள்
b).பறவைகள் Ref: 1:21
c).ஊர்வன



2. கணவன் தன் தாய் தந்தையைவிட்டு மனைவியுடன் ஒன்றித்திருப்பான் . ஏன்?


a).இருவரும் ஒரே உடலாய் இருப்பதால் Ref: 2:24 b).சதையின் சதையாய் ஆனதால்
c).விலா எலும்பில் இருந்து எடுக்கப்பட்டதால்


3. நீ ஏன் சினமுற்றிருக்கிறாய்?இது யாருடைய கூற்று?


a).காயீன்
b).ஆபேல்
c).ஆண்டவர் Ref: 4:6

4. ஆதாம் எத்தனை வருஷம் வாழ்ந்தான்?


a).930 Ref: 5:5
b).912
c).950


5. மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் ஏன் மனம் வருந்தினார்?


a).மனித இதயத்தின் சிந்தனை முழுதும் தீமையே Ref: 6:5,6
b).கடவுளுக்கு கீழ்படியாததால்
c).ஆண்டவரை மறந்ததால்


6. நோவாவின் காலத்தில் எத்தனை நாள் மண்ணுலகில் வெள்ளம் பாய்ந்து பெருகிற்று?


a).40 நாள்
b).150 நாள் Ref: 7:24
c).15 நாள்


7. முதல் உடன்படிக்கையின் அடையாளமாக ஆண்டவர் எதை கொடுத்தார்?


a).விருத்தசேதனம்
b).மேகம்
c).வானவில் Ref: 9:13

8. ஆண்டவரே! எனக்கு என்ன தருவீர்?என ஆபிராம் ஏங்கியது எதற்காக?


a).குழந்தைக்காக Ref: 15:2
b).ஆசீருக்காக
c).உரிமைக்காக


9. தந்தை இறப்பதற்கு முன்னே இறந்த மகன் யார்?


a).தெராகு
b).நாகோர்
c).ஆரான் Ref: 11:28

10. நீ என் சகோதரி எனச்சொல்லிவிடு, என்ற வரியை எங்கெங்கு வாசிக்கிறோம்?


a).தொடக்கநூல் (ஆதியாகமம்) 12 மற்றும் 20ம் அதிகாரத்தில்
b).தொடக்கநூல் (ஆதியாகமம்) 12 மற்றும் 18ம் அதிகாரத்தில்
c).தொடக்கநூல் (ஆதியாகமம்) 19 மற்றும் 20ம் அதிகாரத்தில்


11. உன்னத கடவுளின் அர்ச்சராக இருந்தவர் பெயர் என்ன?


a).மெல்கிசேதேக்கு Ref: 14:18
b).சோதோம் ராஜா
c).சாலேம் ராஜா


12. என்னை காண்பவரை நானும் இங்கே கண்டேன் அல்லவா? இது யாருடைய கூற்று?


a).இஸ்மயேல்
b).சாரா
c).ஆகார் Ref: 16:13

13. ஒரே நாளில் தகப்பனுக்கும் மகனுக்கும் விருத்தசேதனம் செய்யப்பட்டது யார் யாருக்கு?


a).ஆபிரகாம்,இஸ்மயேல்
b).ஆபிரகாம்,ஈசாக்கு
c).லோத்து,ஈசாக்கு Ref: 17:26

14. சோதோம்,கொமோரா நகர்களின்மேல் ஆண்டவர் எதை வானத்திலிருந்து பொழியச்செய்தார்?


a).மழையும்,பனியும்
b).கந்தகமும்,நெருப்பும்  Ref: 17:26
c).நெருப்பும்,இடி,மின்னல்


15. இதோ, உன் சகோதரருக்கு 1000 வெள்ளிக்காசு கொடுத்துள்ளேன். யார் யாருக்கு கொடுத்தது?


a).அபிமெலேக்கு Ref: 20:16
சாராவிடம்
b).ஆபிரகாம்
அபிமேலேக்கிடம்
c).கடவுள் ஆபிரகாமுக்கு




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.