தொடக்கநூல் (ஆதியாகமம்) : 21 முதல் 40ம் அதிகாரம் வினாடி வினா




தொடக்கநூல் (ஆதியாகமம்) : 21 முதல் 40ம் அதிகாரம் வினாடி வினா 

விடைகள் bold எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது

1.ரெபேக்கா ஈசாக்கை கண்டவுடன் என்ன செய்தாள்?


a).ஈசாக்கை
பணிந்துக்கொண்டாள்.
b).தம் முக்காட்டை எடுத்து தம்மை மூடிக்கொண்டாள். Ref: 24:65
c). தான் யாரென்று ஈசாக்குக்கு அறிமுகப்படுத்திக்கொண்டாள்.



2. தன் மகனுக்கு எதிரான வார்த்தை ஆபிரகாமுக்கு மிகுந்த வேதனையாயிருந்தது. யார் அந்த மகன்?


a).சிம்ரான்
b).ஈசாக்கு
c).இஸ்மயேல் Ref: 21:11

3. என் தலைவரே! என் வார்த்தையைக் கேளும்.இது யாருடைய கூற்று?


a).ஆபிரகாம்
b).இத்தியர்
c).எப்ரோன் Ref: 23:14,15

4. உமது முகத்தை காண்பது கடவுளின் முகத்தை காண்பதுபோல் உள்ளது என்று யார் யாரிடம் சொன்னது?


a).யாக்கோபு ஏசாவிடம் Ref: 33:10
b).ஏசா ஈசாக்கிடம்
c).ராகேல் யாக்கோபிடம்


5. "பெயேர்செபா" என்று அழைக்கப்பட்டதின் காரணம் என்ன?


a).அந்த இடத்தில் ஆணையிட்டுக்கொண்டதால்
b).இந்த கிணற்றை தோண்டியது நான்தான் என்பதற்கு சான்றாக Ref: 21:30
c).உடன்படிக்கை செய்துகொண்டதால்


6. யாக்கோபு ராகேலிடம் "நான் என்ன கடவுளா"? என ஏன் சினம் கொண்டார்?


a).நீர் எனக்கு பிள்ளைகளைத் தாரும். இல்லையேல் செத்துப்போவேன் என்றதால் Ref: 30:1,2
b).லேயாள்மேல் பொறாமை கொண்டதால்
c).என் பணிப்பெண் உடன் கூடி வாழ் என்றதால்


7. நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது அறிந்துக்கொண்டேன். இது யார் யாரிடம் கூரியது?


a).கடவுள் ஆபிரகாமிடம்
b).ஆபிரகாம் தன்
வேலைக்காரரிடம்
c).ஆண்டவரின் தூதர் ஆபிரகாமிடம் Ref: 22:11]

8. யோசேப்பு தான் கண்ட கனவை தன் தந்தைக்கும்,சகோதரர்களுக்கும் சொல்லிய பொழுது அவர்கள் என்ன சொன்னார்கள்?


a).உன் கனவுப்படி உன்னை வணங்குவோம்
b).பொறாமை கொண்டனர் Ref: 37:11
c).தங்கள் மனதில் வைத்துக்கொண்டனர்


9. இஸ்மயேல் எத்தனை வருஷம் உயிர் வாழ்ந்தார்?


a).137 வருஷம் Ref: 25:17
b).127 வருஷம்
c).135 வருஷம்


10. லேயாள் தூதாயிம் கனிகளை ஈடாகக் கொடுத்து யாரை வாங்கினாள் ?


a).தன் மகனை
b).வேலைக்காரியை
c).தன் கணவனை Ref: 30:16

11. அவள் என்னைக்காட்டிலும் நேர்மையானவள்.அவள் யார்?


a).தீனா
b).தாமார் Ref: 38:26 c).லேயாள்


12. கனவுக்கு பொருள் [அர்த்தம்] சொல்வது யாருக்குரியது?


a).கடவுள் Ref: 40:8
b).யோசேப்பு
c).பார்வோன்


13. கடவுளோடும்,மனிதரோடும் போராடி வெற்றிக்கொண்டவர் பெயர் என்ன?


a).இஸ்ரயேல் Ref: 32:27
b).யாக்கோபு
c).ஆடவர்


14. யாக்கோபு ராகேல் மீது வைத்திருந்த அன்பின் மிகுதியால் கூடுதலாக எத்தனை ஆண்டுகள் சில நாட்களாக எண்ணினார்?


a).7 ஆண்டுகள்
b).14 ஆண்டுகள் Ref: 29:18-30
c).10 ஆண்டுகள்


15. உனக்குரிய சாபம் என்மேல் விழட்டும் என்று யார் யாரிடம் கூறியது?


a).ஈசாக்கு ஏசாவிடம்
b).ராகேல் யாக்கோபிடம்
c).ரெபேக்கா யாக்கோபிடம் Ref: 27:13





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.