சங்கீதம் 7:1:
என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; என்னைத்
துன்பப்படுத்துகிறவர்கள் எல்லாருக்கும் என்னை விலக்கி இரட்சியும்.
Psalms 7:1
:O LORD my God, in thee do I put my trust: save me from all them that
persecute me, and deliver me:
சங்கீதம் 7:2:
சத்துரு சிங்கம்போல் என் ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய்,
விடுவிக்கிறவன் இல்லாமையால், அதைப்பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும்.
Psalms 7:2:
Lest he tear my soul like a lion, rending it in pieces, while there is
none to deliver.
சங்கீதம் 7:3:
என் தேவனாகிய கர்த்தாவே, நான் இதைச் செய்ததும், என் கைகளில்
நியாயக்கேடிருக்கிறதும்,
Psalms 7:3
:O LORD my God, If I have done this; if there be iniquity in my hands;
சங்கீதம் 7:4:
என்னோடே சமாதானமாயிருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும், காரணமில்லாமல்
எனக்குச் சத்துருவானவனை நான் கொள்ளையிட்டதும் உண்டானால்,
Psalms 7:4:
If I have rewarded evil unto him that was at peace with me; (yea, I
have delivered him that without cause is mine enemy:)
சங்கீதம் 7:5:
பகைஞன் என் ஆத்துமாவைத் தொடர்ந்துபிடித்து, என் பிராணனைத் தரையிலே தள்ளி
மிதித்து, என் மகிமையைத் தூளிலே தாழ்த்தக்கடவன். (சேலா.)
Psalms 7:5:
Let the enemy persecute my soul, and take it; yea, let him tread down
my life upon the earth, and lay mine honour in the dust. Selah.
சங்கீதம் 7:6:
கர்த்தாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து, என் சத்துருக்களுடைய
மூர்க்கங்களினிமித்தம் உம்மை உயர்த்தி, எனக்காக விழித்துக்கொள்ளும்;
நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே.
Psalms 7:6:
Arise, O LORD, in thine anger, lift up thyself because of the rage of
mine enemies: and awake for me to the judgment that thou hast
commanded.
சங்கீதம் 7:7:
ஜனக்கூட்டம் உம்மைச் சூழ்ந்துகொள்ளும்; அவர்களுக்காகத் திரும்பவும்
உன்னதத்திற்கு எழுந்தருளும்.
Psalms 7:7
:So shall the congregation of the people compass thee about: for their
sakes therefore return thou on high.
சங்கீதம் 7:8:
கர்த்தர் ஜனங்களுக்கு நியாயஞ் செய்வார்; கர்த்தாவே, என் நீதியின்படியும்
என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும்.
Psalms 7:8:
The LORD shall judge the people: judge me, O LORD, according to my
righteousness, and according to mine integrity that is in me.
சங்கீதம் 7:9:
துன்மார்க்கனுடைய பொல்லாங்கை ஒழியப்பண்ணும்; நீதிமானை
ஸ்திரப்படுத்துவீராக; நீதியுள்ளவராயிருக்கிற தேவரீர் இருதயங்களையும்
உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவர்.
Psalms 7:9
:Oh let the wickedness of the wicked come to an end; but establish the
just: for the righteous God trieth the hearts and reins.
சங்கீதம் 7:10:
செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என் கேடகம் இருக்கிறது.
Psalms 7:10:My defence is of God, which saveth the upright in heart.
சங்கீதம் 7:11:
தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்.
Psalms 7:11:
God judgeth the righteous, and God is angry with the wicked every day.
சங்கீதம் 7:12:
அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார்;
அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.
Psalms 7:12:
If he turn not, he will whet his sword; he hath bent his bow, and made it ready.
சங்கீதம் 7:13:
அவனுக்கு மரணாயுதங்களை ஆயத்தம்பண்ணினார்; தம்முடைய அம்புகளை அக்கினி
அம்புகளாக்கினார்.
Psalms 7:13:
He hath also prepared for him the instruments of death; he ordaineth
his arrows against the persecutors.
சங்கீதம் 7:14:
இதோ, அவன் அக்கிரமத்தைப்பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; தீவினையைக்
கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான்.
Psalms 7:14
:Behold, he travaileth with iniquity, and hath conceived mischief, and
brought forth falsehood.
சங்கீதம் 7:15:
குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான்.
Psalms 7:15:
He made a pit, and digged it, and is fallen into the ditch which he made.
சங்கீதம் 7:16:
அவன் தீவினை அவன் சிரசின்மேல் திரும்பும், அவன் கொடுமை அவன்
உச்சந்தலையின்மேல் இறங்கும்.
Psalms 7:16:
His mischief shall return upon his own head, and his violent dealing
shall come down upon his own pate.
சங்கீதம் 7:17:
நான் கர்த்தரை அவருடைய நீதியின்படி துதித்து, உன்னதமான கர்த்தருடைய
நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன்.
Psalms 7:17:I will praise the LORD according to his righteousness: and
will sing praise to the name of the LORD most high.