தலைப்பு:-
"பொய்யாக குற்றம் சாம்டப்பட்டவனின் ஜெபம்"
தலைப்பில் உள்ள "சிகாயோன்" என்பதற்கு பரவசம், அலைந்து திரிதல் அல்லது
தவறு செய்தல் என பொருள் கொள்ளலாம்.
உட்பிரிவுகள்:-
வச.1-2 விடுவிக்கும்பபடி வேண்டுதல்.
வச.3-5 நான் தவறு செய்திருந்தால்
வச.6-9 நியாயத்திற்காக வேண்டுதல்
வச.7-13 தேவனின் செயல்கள்
வச.14-16 தீயோரின் முடிவு
வச.17 நான் கர்த்தரை துதிப்பேன்.
வசனங்களுக்கான
விளக்கங்கள்:-
வச.1-6 : தான் செய்யாத தவறுக்காக குற்றம் சாட்டப்பட்டதால் வந்த வேதனையால்
தாவீது பாடினபாடன பாடலே இந்த சங்கீதம் (வச. 3-6). வேதனையுடன் பாடினாலும்
தனது நம்பிக்கையை இழக்காமல் இருப்பதை ஆரம்பத்திலிருந்தே கூறியுள்ளார்.
எச்சூழலிலும் கர்த்தரை நம்புவீராக.
வச.1
அ). "என்" தேவனாகிய கர்த்தாவே என்று சொல்லும் அளவிற்க்கு கர்த்தரில்
நெருங்கியிருந்தார். நாம் எந்த அளவு கர்த்தரோடு வாழ்கிறோம்....??
ஆ). "நான் உம்மை நம்பி இருக்கிறேன்". கர்த்தரை நம்புவது எனில் அவர்
நேரடியாக வந்து உதவிசெய்வார் என்று நம்புவது என்பதல்ல, நேரடியாகவோ,
மனிதர் மூலமாகவோ, அவர் தெரிந்தெடுக்கும் ஏதாவது ஒரு வழியில் உதவி
செய்வார் என்று நம்புவது ஆகும். எந்த மனிதனிடமும், சூழ்நிலையிலும்,
மருந்திலும் உதவி கிடைக்கும் என நம்புவது சரியன்று. மனிதனோ, சூழ்நிலையோ,
மருந்தோ எதுவாயினும் தேவனுடைய வழிநடத்துதலின்றி நமக்கு உதவ முடியாது.
வச..4. நன்மைக்கு தீமை செய்வது கொடுமை, நன்மைக்கு நன்மை செய்வது மனித
பண்பு, தீமைக்கு நன்மை செய்வது கிறிஸ்துவனின் கடமை (மத் 5:44; ரோம
12:20-21).
வச.8 நியாரயம் செய்யும்படி கர்த்தரடம வேண்டனார் தாவீது. மற்றவர் தவறாக
நம்மை குற்றம் சாட்டினால் நாம் என்ன செய்கிறோம்? திருப்பி தாக்குவதை
விட்டு கர்த்தரிடத்தில் விண்ணப்பிப்பதே சிறந்தது. (ரோ 12:17-21.
வச.9 தேவன் மனிதனின் என்னங்ளையும் அவனது சுபாவங்களையும்
அறிந்திருக்கிறார். பாவத்தில் வாழ்கிறவருக்கு இது பயம் அளிப்பதாகவும்,
கர்தருடைய பிள்ளைகளுக்கு இது மகிழ்ச்சியாகவும் அமைகிறது.
வச.11-12. பாவம் செய்கிறவன் மேல் தேவன் நாள்தோறும் கோபங்கொண்டாலும் அவன்
மனம்திரும்ப வாய்ப்பு அளிக்கிறார். தொடர்ந்து பாவத்தில் வாழ்ந்தால் அவன்
இறுதியில் தன்டனை அடைகிறான்.
வச.15-16 மனம்திரும்பாத மனிதனின் செயல்களுக்கு நிச்சயம் தன்டனை உண்டு.
வச.17 தான் என்ன செய்ததாக தாவீது கூறுகிறாரோ அதை நாம் செய்யலாமே. தேவன்
துதிக்கப்படவும் புகழப்படவும் தகுதியுள்ளவர். எனவே, சூழ்நிலை நண்மையாக
மாறும் வரை காத்திராமல் எந்நிலையிலும் கர்த்தரை புகழ்ந்து பாடி
துதிப்பதும் நன்றி செலுத்துவதும் சிறந்ததாகும்.
இந்த சங்கீதத்தில் உள்ள தேவனுடைய பெயர்கள்:-
1. என் தேவனாகிய கர்த்தர்
2. நீதியுள்ளவராய் இருக்கிற தேவரீர்,
3. இருதயங்களையும், உள்ளிந்திரிகளையும் சோதித்தறிகிறவர்,
4. செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கும் தேவன்,
5. நீதியுள்ள நியாயாதிபதி,
6. பாவியின் மேல் சினம் கொள்ளுகிற தேவன்,
7. உன்னதமான கர்த்தர்.