ஆதி 6:1-2 இன் விளக்கம்:- தேவ குமாரர் என்றால் யார்? இராட்ச்சதர் எவ்வாறு தோன்றினர்?

பூமியை அஸ்திபாரபடுத்தும் போது தேவ புத்திரர் எல்லோரும் கெம்பிரித்தனர் (யோபு 38:4-7). அப்போது இருந்தவர்கள் யார்? மனிதர்கள் அல்ல, தேவ தூதர்கள் தான். எனவே தேவ குமாரர் என்று இங்கு குறிப்பிட்டிருப்பதும் தேவ தூதர்களையே குரிக்கும்.

சோதோம் கொமோரா பட்டணத்தாரை போல விபச்சாரம் பன்னி அந்நிய மாம்சத்தை தொடர்ந்து தங்களுடைய ஆதி மேண்மையை காத்துக் கொள்ளாமல் தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தேவ தூதர்களை குறித்து யூதா 6-7 இல் வாசித்து பாருங்கள்.
இதிலிருந்து நாம் அறிவதென்ன? பெண்ணின் வித்தாக தன் தலையை நசுக்குபவர் தோன்றாதபடிக்கு சாத்தான் மேற்க்கொண்ட ஒரு சதிதிட்டம் தெரிய வருகிறது.

தனது தலைமையை ஏற்றுக்கொண்டு தன்னோடு தள்ளப்பட்ட தேவ தூதர்களில் சிலரை மனித பெண்னோடு உறவுக்கொள்ள செய்வதன் மூலம் பெண்னின் வித்தை மாசு படுத்த சாத்தான் திட்டம் தீட்டினான். இவ்வாறு உறவு கொண்ட அத்தூதர்களுக்கான முதல் தன்டனை அவர்களை சங்கிலியிலே கட்டி அந்தகாரத்தில் வைத்தபோது நிறைவேற்றப்பட்டது (யூதா 6-7, 2பேது 2:4).

பின்னர் ஆபிரகாமின் சந்ததியில் பெண்னின் வித்தாகிய இரட்சகர் வருவார் என்றரிந்த சாத்தான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காணான் தேசத்தில் மீணடும் இவ்விதம் தனது தூதர்கள் மூலம் செயல்பட்டு இராட்ச்சதர்களை உருவாக்கினான் (எண் 13:31-33). இஸ்ரவேலரோடு போரிட்ட ஓக் ஒரு இராட்ச்சதன் (உபா 3:11-13). மீண்டும் தாவீதினா காலத்தில் இதை போன்ற ஒரு முயற்ச்சி நடந்து கொலியாத்தும் அவன் சகோதரரும் இஸ்ரவேலரை அழிக்க முற்ப்பட்டதை 1சாமு 17; 2சாமு 21:15-22 இல் காண்கிறோம்.

தேவன் தமது படைப்பின் செயல்களை முடித்த போது (ஆதி 2:1-25) இராட்ச்சதர்கள் இல்லை. எனவே அவர்கள் உருவானதற்க்கு ஆதி மேண்மையை காத்துக்கொள்ளாமல் மானிட பெண்களோடு உறவு கொண்ட தேவ தூதரே காரணமாவர் (ஆதி 6:4).

இப்பகுதியில் தேவ புத்திரர் என்று குறிபிடப்பட்டிருப்பது சேத்தின் வம்சத்தினர் என்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில் சேத்தின் புத்திரரான மனிதர்கள் காயீன் வம்ச பெண்களோடு உறவு கொண்டால் மனிதர்கள் மட்டுமே பிறக்க முடியும். இராட்ச்சதர்கள் பிறக்க முடியாது என்பது தெளிவு.

மேலும், சேத்தின் வழியினர் தேவ குமாரர் என குறிபாபிடப்பட்டுள்ளனர் எனில் சேத்தின் வம்சத்தில் நோவாவின் குடும்பம் தவிர மீதிபேர் பெரு வெள்ளத்தின் போது அழிக்கபட்டிருக்க மாட்டார்கள் அல்லவா? எனவே தேவ புத்திரர் என்பது தேவ தூதர்களையே குறிக்கும்.

காபிரியேல், மீகாவேல் என்றழைக்கபடும் தூதர்கள் வேதத்தில் ஆண் பாலில் கூறப்பட்டுள்ளனர் (தானி 10:13; 12:1; லூக்கா 1:11,19, 26-27; வெளி 12:7). தேவ தூதர்கள் ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்வதில்லை (மத் 22:30; மாற் 12:25) என்று மட்டுமே கர்த்தர் குறிப்பிட்டுள்ளார். பெண் தூதரகளை பற்றி வேதம் கூறவில்லை.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.