தலைப்பு:-
“சுகவீனத்தின் போது விசுவாச விண்ணப்பம்”
உட்பிரிவு:-
வச.1-5 குணமாக்கும்படி விண்ணப்பம்.
வச.6-7 மன துயரத்தின் விளைவுகள்.
வச.8-10 விடுதலை.
வசனங்களுக்கான
விளக்கங்கள்:-
வச.1-4 தாவீதுக்கு நோய் வந்து, பெலன் குன்றி போன சமயத்தில் தனக்கு இரங்கும்படி வேண்டினார். தன்னுடைய நற்செயல்களை கூறி விண்ணப்பிக்காமல் உமது கிருபையின்படி என்னை இரட்சாசியும் என்றார். அவரின் கிருபையால் தான் நாம் ஆசீர் பெறடாகிறோம்.
வச.2 நான் பெலனற்று போனே என்று தாவீது கூறுவது போன்று நமது பெலவீனம், குறைகள், தகுதியின்மை ஆகியவற்ற கூறி ஜெபிப்பது நல்லது. ஆனால் கிறிஸ்துவுக்குள் நமக்கு பெலன் உண்டு என்பதையும் விசுத்தி ஜெபித்து பெற்றுக்கொள்ள வேண்டும் (பிலி 4:13)
வச.5 தான் மரணமடைந்தால் கர்த்தரை நினைவு கூர்ந்து அவரை துதிக்க முடியாது என்பதால் தன்னை குணமாக்கி நீண்ட ஆயுள் தரும்படி கேட்கிறார்.
வச.8-10 கர்த்தர் மேல் தாவீதின் நம்பிக்கை இந்த பகுதி விளக்குகிறது. நமது விண்ணப்பங்களை கர்த்தர் கேட்டு பதில் தருவார் என நம்பிக்கையோடு விண்ணப்பிக்கக்கடவோமாக.