நெகேமியா விளக்கவுரை 2:18-20

வசனம் 2:18
என் தேவனுடைய கரம் என்மேல் நன்மையாக இருக்கிறதையும், ராஜா என்னோடே சொன்ன வார்த்தைகளையும் அவர்களுக்கு அறிவித்தேன். அப்பொழுது அவர்கள்: எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி, அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள்.

பின்பு நெகேமியா, தேவ அழைப்பின் வல்லமையை ஜனங்களுக்கு விளக்கினான். என் தேவனுடைய கரம் என்மேல் நன்மையாய் இருக்கிறதை இராஜா என்னோடே சொன்ன வார்த்தைகளையும் என்கிற செய்திகளை நெகேமியா ஜனங்களுக்குச் சொன்னான். இராஜா அவனுக்களித்த பொருள்கள், உதவியாட்கள் பற்றியும் கூறினான். இவைகளை அவர்கள் கேள்விப்பட்டவுடனே அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளைத் திடப்படுத்தி, எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்று ஆர்ப்பரித்தார்கள். சிலவேளைகளில் நாம் காண்கிறபடி ஒரு தனியாளின் உற்சாகத்தினால் ஒரு பெரிய வேலை தொடர்ந்து முடிக்கப்படுகிறது. இந்த நல்ல வேலைக்காக அவர்கள் தங்கள் கரங்களை வலுப்படுத்திக் கொண்டனர். நாமும் நம் வேலைகளுக்காக ஒருவர் மற்றவர்களின் கரங்களை வலுப்படுத்துவது எவ்வளவு நலமாயிருக்கும். தளர்ந்த கைகளைத் திடப்படுத்துங்கள்... (ஏசா.35:3, எபி.12:12).

வசனம் 2:19-20
ஓரோனியனான சன்பல்லாத்தும் அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும், அரபியனான கேஷேமும் இதைக் கேட்டபோது, எங்களைப் பரியாசம்பண்ணி, எங்களை நிந்தித்து: நீங்கள் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீங்கள் ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணப்போகிறீர்களோ என்றார்கள். அதற்கு நான் மறுமொழியாக: பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் காரியத்தைக் கைகூடிவரப்பண்ணுவார். அவருடைய ஊழியக்காரராகிய நாங்கள் எழுந்து கட்டுவோம்.
உங்களுக்கோவென்றால் எருசலேமிலே பங்குமில்லை பாத்தியமுமில்லை. உங்கள் பேர் விளங்க ஒன்றும் இல்லையென்று அவர்களுடனே சொன்னேன்.

ஆனால் வேலை துவங்கப்படும் தருவாயில் தொல்லைகள் உருவெடுக்க ஆரம்பித்தன. சன்பல்லாத்தும், தொபியாவும், அவர்களோடு மற்றொருவனாகிய அரபியனான கெஷேமும், நெகேமியாவின் தி;ட்டங்களைப் பற்றிக் கேள்விப்பட்டனர். முன்பு அவர்கள் இதே காரணங்களுக்காக அலைக்கழிக்கப்பட்டனர் எனக் கண்டோம். இப்போதோ அவர்கள் செயல்ப்படத் துவங்கினர். முதலில் அவர்கள் பரிகாசம்பண்ணத் துவங்கினர். பிறகு அவர்கள் நிந்தித்து, நீங்கள் செய்கிற காரியம் என்ன? நீங்கள் இராஜாவுக்கு விரோதமாகக் கலகம் பண்ணப்போகிறீர்களோ? என்று அதட்டிப் பேசினர். இராஜா நெகேமியாவுடன் ஒரு பாதுகாப்புப் படையையே அனுப்பியிருந்த நிலையில் இது தேவையற்ற அற்பத்தனமான கேள்வியாகும்.

ஆனால் அவர்களின் பரிகாசச் சிரிப்பு வேதனையளிப்பதாயிருந்தது. ஒருவனுடைய கோபத்தையும், மற்ற வகைக் கடுமைகளையும் நாம் தாங்கிக் கொள்வது ஒருவேளை எளிதாக இருக்கலாம். ஆனால் பரிகாசம் என்பது எரிச்சலையும் கோபத்தையும் உண்டாக்கக் கூடியதன்றோ! அம் மூவரும் ய+தர்களைப் பரியாசம் பண்ணினார்கள். அலங்கங்கள் கட்டப்படுவதென்பது சன்பல்லாத்துக்கும் தொபியாவிற்கும் கோபத்தை உண்டாக்கியதேனோ? தேவனுடைய மனுஷரையும்,
ய+தர்களையும்
தாக்குவதற்கென்று செலவிடப்பட்டதான பெரிய
பணத்தொகைகளையும், சக்தி முயற்சிகளையும், வரலாற்று வழியாக நாம் பார்க்கும்போது வியப்படையத்தான் செய்கிறோம். ஆனால் தேவனின் விரோதிகள் இத்தகைய தாக்குதல்களைச் செய்ய மிகத் தீவிரமாக இருந்தனர். அவர்களுடைய தீய முயற்சிகள் இருந்துவிட்டுப் போகட்டுமே. பிசாசானவன் நமது சகோதரர்களின் பகைஞன் என்று வேதம் கூறுகிறது. நம்முடைய சகோதரர்மேல் இரவும் பகலும் குற்றம் சுமத்தும் பொருட்டு, என்று சாத்தனைப்பற்றி வெளி 12:10ல் வாசிக்கிறோம். சாத்தான் எப்போதும் அமைதியாக இருக்கமாட்டான். அவன் எதையும் விட்டுக்கொடுக்க மாட்டான். கர்த்தருக்கு ஸ்தோத்திரம், சாத்தானின் நாட்கள் குறைவானது.

நெகேமியா தன்னை எதிர்க்கிறவர்களைக் கர்த்தராகிய தேவனை முன்வைத்துச் சந்திக்கிறான். இராஜாவைப்பற்றி அவன் ஏதும் கூறவில்லை. பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் காரியத்தைக் கைகூடிவரப் பண்ணுவார் என்கிறான் நெகேமியா. பவுலும் ஒருமுறை தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? என்று கூறுகிறான் (ரோ.8:31). நெகேமியா மேலும் அவருடைய (தேவனுடைய) ஊழியக்காரராகிய நாங்கள் எழுந்து கட்டுவோம் என்று கூறுகிறான். நெகேமியா, நாங்கள் கட்டாயம் கட்டுவோம் என்கிற உண்மையை அவர்களுக்குத் தெளிவுபட விளக்குகிறான். யூதர்களின் கர்த்தராகிய தேவன்தாம் அவனை அப்பணிக்கு அனுப்பியது குறித்து மிகவும் பெருமைப்பட்டான். சன்பல்லாத்தும், தொபியாவும் எந்த விதத்திலும் அப்பணியில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. எந்தவிதமான முன்உரிமையும் சுதந்திரமும் அவர்களுக்கு இல்லை. அவர்கள் தேவனாகிய கர்த்தருடைய ஊழியக்காரர்களும் அல்லர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.