தகுதியான
ஆண்கள் இருக்கையில்
அவர்களுக்கு இணையாக
பெண்களை நியமிப்பதும்
சரியல்ல என்பது
என்னுடைய கருத்து.
அது வேடிக்கையாகவே
இருக்கும். எப்படியெனில்
இன்றைக்கும் நமது
சாலைகளில் ஆட்டோ,
லாரி போன்ற
வாகனங்களை பெண்கள்
இயக்கினால் எல்லோரும்
திரும்பிப்
பார்க்கிறதில்லையா,
அதுபோலவே இதுவும்
இயற்கைக்கு மாறானது.
ஆனாலும் தகுதியான
தலைவர்கள் இல்லாத
கிராமப் பகுதிகளிலும்
சுவிசேஷம்
அறிவிக்கப்படாத வறண்ட
பிரதேசங்களிலும்இந்த்
பாகுபாட்டை பார்க்க
இயலாது. இன்னொரு
கேள்வியும் இங்கே
எழும்புகிறது,
எத்தனையோ ஸ்தாபனங்கள்
வந்தன, சென்றன,
வந்துகொண்டிருக்கின்றன.
எந்த ஸ்தாபனமாவது
ஒரு பெண்களை அல்லது
ஓரிரு பெண்களை
மிஷினரிகளாக
எங்காவது
அனுப்பியிருக்கிறதா ?
அன்னை தெரசா
போன்றவர்களும் இன்னபிற
தியாக தீபங்களும்
சேவைபுரியவே
வந்தார்கள். அவர்கள்
எப்போதும் ஒரு
அமைப்புக்கு கீழ்பட்டே
இருந்தார்கள். அவர்களே
ஒருபோதும் செய்யாத
கலகத்தை இங்கு ஆண்கள் ஏன்
கொளுத்திவிட்டு
குளிர்காய்கிறார்கள்
என்று எனக்குத்
தெரியவில்லை.
சென்னை ஏஜி சபையில்
பாஸ்டர் மோகன்
அவர்களின் துணைவியார்
எத்தனையோ காலம்
மறைந்தே இருந்தார்கள்.
ஆனால் தற்போதோ
பெண்கள் முகாம் அது
இது என கலக்குகிறார்கள்.
அதையும் ரசிக்கிறோம்.
ஆனாலும் ஏதாவது ஒரு
யுகத்தில் அவர்கள் ஏஜி
சபைகளின்
தலைவியாகமுடியுமா?
இன்னும் டிஜிஎஸ்
அங்கிள் அவர்களின்
துணைவியார் திருமதி
ஸ்டெல்லா தினகரன்
எத்தனையோ விதங்களில்
தன் கணவருக்கு
உறுதுணையாக
இருந்தார்கள். ஆனால்
டிஜிஎஸ் அவர்களின்
மறைவுக்குப் பிறகு
அவர்கள் அந்த ஊழியத்தை
முன்னெடுத்து செல்ல
முடிந்ததா?
இன்னும்
அதுவே கூட அந்த
ஊழியத்தின் வீச்சு
குறைந்து வருவதற்குக்
காரணம் என்று
சொல்லுவேன்.
இன்னும்
சொல்லப்போனால் FMPB
போன்ற மிஷினரி
இயக்கங்களுக்காக
அதிகமாகக் கொடுப்பதும்
ஜெபத்தினால்
தாங்குவதும் இன்னும்
மிஷினரிகளான
பிள்ளைகளைப்
பெற்றுக்கொடுத்ததும்
சகோதரிகளே. ஆனாலும்
அதுபோன்ற இயக்கங்களில்
இதுவரை சகோதரிகள் ஏன்
தலைமைப்
பொறுப்புக்கு
வரவில்லை ?
காரணம்
தகுதியான
திறமையுள்ள
சகோதரிகள் இல்லையா ?
ஒருபுறம் தகுதியுள்ள
பெண்களை பிற்போக்கான
காரணங்களால்
ஒதுக்குவதையும்
காண்கிறேன். அதேநேரம்
தகுதியில்லாத சிலர்
ஓஹோ என்று "பூம்"
பண்ணப்படுவதையும்
பார்க்கிறேன்.
ஆனால் பால் தினகரன்
மனைவி சகோதரி
இவாஞ்சலின் அவர்களின்
தகுதி குறித்து
எதுவுமே சொல்லவே
வேண்டாம். இப்படி
சுவிசேஷ பணியில்
இருப்போரைக் குறித்து
இருவேறு கருத்துக்கள்
இருக்கின்றன. இதே
எண்ணத்துடன் பெண்கள்
சபையின் குருவானவர்
எனும் பதவியில்
அமர்த்தப்படுவது
குறித்து
யோசிப்போமானால்
ஓரளவு தெளிவு
வரலாம். அதினால்
பெண்கள் குருத்துவ
பணியில்
அமர்த்தப்படுவது
வேதத்தில் வழக்கம் இல்லை
என்பதே நாம்
அறியக்கூடிய
செய்தியாகும்.
I தீமோத்தேயு 2:12
உபதேசம்பண்ணவும்,
புருஷன்மேல்
அதிகாரஞ்செலுத்தவும்,
ஸ்திரீயானவளுக்கு நான்
உத்தரவு
கொடுக்கிறதில்லை;
அவள்
அமைதலாயிருக்க
வேண்டும.
பெண்கள் குருத்துவ
பணியில் ஈடுபடலாமா
எனும் கேள்விக்கு
சமுதாயக் கண்ணோட்டத்தில்
பதிலளிக்க
வேண்டுமானால் நீட்டி
முழக்கி யார்
வேண்டுமானாலும் எதை
வேண்டுமானாலும்
எழுதலாம். அதற்கு
ஓராயிரம்
மேற்கோள்களும் காரண
காரியங்களும்
நியாயங்களும் இருப்பது
உண்மையே.
ஆனால் இந்த
காரியத்தில் வேதம்
சொல்லுவது என்ன என்று
பார்ப்போனால்-
"குருத்துவ பணியில்
பெண்கள் ஈடுபடலாமா",
(ஞானஸ்நானம் கொடுத்தல், திருவிருந்து கொடுத்தல், திருமணம் நடத்துதல்,
அடக்க ஆராதனை செய்தல்.....,)
என்பது கேள்வியாக
இருப்பதால் பழைய
ஏற்பாட்டின்
பார்வையிலும் சரி,
புதிய ஏற்பாட்டின்
பார்வையிலும் சரி,
வழவழ கொழகொழா
என்று இழுக்காமல்
நேரடியாக
சொல்லவேண்டுமானால்-
வேத வார்த்தைகள் காலம்
மாறினாலும் மாறாத
தன்மையது என்பதை உளத்
தூய்மையுடன்
நம்புவோருக்கு
சொல்லவேண்டுமானால்
பெண்கள் குருத்துவ
பணியில் ஈடுபடுவதற்கு
வேதம்
அனுமதிக்கவில்லை
யென்பதே உண்மையாகும்.
வேதனையானதும் மறுக்க
இயலாததுமான கசப்பான
உண்மையென்னவெனில்
திருச்சபையானது
பெண்களின்
ஆதிக்கத்திலேயே
இருக்கிறது. அதிலும்
முற்போக்குவாதிகளைப்
போல காட்டிக்கொள்ளும்
பெந்தெகொஸ்தே
இயக்கத்தின் சபைகளில்
பெண்களின் ஆதிக்கமே
கொடிகட்டி பறக்கிறது.
(பாஸ்டரம்மாவை
சொல்லுகிறேன்..!)
பாஸ்டர்கள் ம்ன்மோகன்சிங்
போலவும் வீட்டம்மா
சோனியா போலவும்
இருக்கிறார்கள்.
குருத்துவ பணி என்பது
திருமுழுக்கு தருவது,
திருவிருந்தை
பரிமாறுவது,
திருமணம் செய்து
வைப்பது ஆகிய மிக
உயர்ந்த பணிகள்
சம்பந்தப்பட்டதாகும்.
அதேபோல ஆராதனை
பீடத்தின் மையத்தில்
நின்றுகொண்டு
ஆராதிப்பதும்
தகுதியானதல்ல. மேலும்
தற்காலத்தில் பல ஸ்தீரிகள்
( தொலைக்காட்சியில் )
தலைக்கு
முக்காடிடுவதுமில்லை. இதுபோன்ற
அயோக்கியங்களை
தடுத்தாகவேண்டும்.
இதில்
விதண்டாவாதங்களையும்
சொந்த கருத்துக்களையும்
எழுதாமல் நேர்க்கோடாக
வேதத்தை நோக்கி
செல்லவும்.
பெண்கள் குருத்துவ
ஊழியத்தில்
ஈடுபடுவதை பற்றி
வேதம் எங்கும்
குறிப்பிடவில்லை.
வேதம் தீர்க்கதரிசியாக
இருந்த
பெண்களைப்பற்றியும்
ஊழியம் செய்த
பெண்களைப்பற்றியும்
குறிப்பிடுகிறது.
ஆனால் பவுல்
பெண்களுக்கென்றுதனி
கட்டளைகளை
கொடுத்துள்ளார்
அதிலும் குருத்துவம்
பற்றி
குறிப்பிடப்படவில்லை.
எனவே வேதம்
குறிப்பிடாத ஒரு
காரியத்தை ஆதரிப்பது
வேதத்துக்கு எதிரானது.