சபையில் பெண்கள்: பாகம் - 4

அப்போஸ்தல நடபடிகளை
மீண்டும் மீண்டும்
வாசியுங்கள் அதில்
பெண்களில் யாரும்
அப்போஸ்தலர்களாகவோ
சுவிசேடகர்களாகவோ
அனுப்பப்படவில்லை
என்று காண்கிறோம்.
குருத்துவ பணி என்ற
புரிதலில் நாம் அதனை
அப்போஸ்தலர் அல்லது
மேய்ப்பர் அல்லது
சுவிசேஷடகர் என்போம்.
பவுலடிகளின் காலத்தில்
குறிப்பிடப்பட்டுள்ள
சகோதரிகளும் கூட
மூப்பர் பணியினையே
செய்திருக்கின்றனர்.
அதனை விதிவிலக்குகள்
அதாவ்து தகுந்த ஆண்கள்
இல்லாத சமுதாயத்தில்
நிகழ்ந்ததெனக்
கொள்ளுவோம்.

பேதுரு இயேசுவானவரின்
பிரதான சீடனாக
வர்ணிக்கப்படுபவர். ஆனால்
இயேசுவானவர் பரமேறிச்
செல்லப் போகும் சூழலில்
அவரிடம் ஆண்டவர்
கட்டளையிட்டது என்ன,
என்னுடைய ஆடுகளை
மேய்ப்பாயாக என்று
சொல்லவில்லையா ?

15. அவர்கள்
போஜனம்பண்ணின
பின்பு, இயேசு
சீமோன் பேதுருவை
நோக்கி: யோனாவின்
குமாரனாகிய
சீமோனே, இவர்களிலும்
அதிகமாய் நீ
என்னிடத்தில்
அன்பாயிருக்கிறாயா
என்றார். அதற்கு அவன்:
ஆம் ஆண்டவரே, உம்மை
நேசிக்கிறேன் என்பதை
நீர் அறிவீர் என்றான். அவர்:
என் ஆட்டுக்குட்டிகளை
மேய்ப்பாயாக என்றார்.

16. இரண்டாந்தரம் அவர்
அவனை நோக்கி:
யோனாவின்
குமாரனாகிய
சீமோனே, நீ
என்னிடத்தில்
அன்பாயிருக்கிறாயா
என்றார். அதற்கு அவன்:
ஆம் ஆண்டவரே, உம்மை
நேசிக்கிறேன் என்பதை
நீர் அறிவீர் என்றான்.
அவர்:என் ஆடுகளை
மேய்ப்பாயாக என்றார்.

17. மூன்றாந்தரம் அவர்
அவனை நோக்கி:
யோனாவின்
குமாரனாகிய
சீமோனே, நீ என்னை
நேசிக்கிறாயா
என்றார். என்னை
நேசிக்கிறாயா என்று
அவர் மூன்றாந்தரம்
தன்னைக்
கேட்டபடியினாலே,
பேதுரு துக்கப்பட்டு:
ஆண்டவரே, நீர்
எல்லாவற்றையும்
அறிந்திருக்கிறீர், நான்
உம்மை நேசிக்கிறேன்
என்பதையும் நீர் அறிவீர்
என்றான். இயேசு: என்
ஆடுகளை
மேய்ப்பாயாக என்றார்.
(யோவான்.21)

ஒரு வாதத்துக்காகவே
கேட்கிறேன், இதே
கட்டளையை ஏன் ஆண்டவர்
முதன்முதலாக தாம்
தரிசனமளித்த மகதலேனா
மரியாளுக்குத்
தரவில்லை ?

மெய்யாகவே
ஆர்வத்துடனும்
ஈடுபாட்டுடனும்
தேடினால் நிச்சயமாகவே
சத்தியமானது தன்னை
வெளிப்படுத்தும்.

பெண்கள் சபையின்
தலைமைப் பொறுப்பில்
நியமிக்கப்படக்கூடாது
என்பதற்கு வேத வசனத்தின்
ஆதாரம் எங்கே என்ற உங்கள்
கேள்விக்கு உங்கள்
கேள்வியிலேயே பதில்
இருக்கிறது.அதாவது
பெண்கள் சபையின்
தலைமைப்
பொறுப்புக்கு
நியமிக்கப்படலாம்
என்பதற்கு உபதேசப்
பின்னணியில் ஆதாரம்
இல்லையே என்பதே
அதற்கான ஆதாரமாக
இருக்கிறது.

சுபாவத்தின்படியும்
நீங்கள் யோசியுங்கள்,
திருமுழ்க்கு போன்ற
காரியங்களின்
பெண்களுக்கு
சங்கடமில்லையா ?

பெண்கள் பாஸ்டராக
பணியாற்றலாம் என்றால்
எத்தனை வயதிலிருந்து
என்று அடுத்த விவாதம்
துவங்கும். அதுவும்
முடிவில்லாமல் நீண்டு
கொண்டே போகும். எனவே
நாமனைவருமே
வேதத்திலிருந்தே
ஆதாரங்களை
எடுத்துக்கொள்ளுவோம்.
அது உபதேசமாக
மாத்திரமல்லாது
சம்பவங்கள் வழியாகவும்
மறைமுகமாகவும் கூட
சொல்லப்பட்டிருக்கலாம்.

அனேகர் இதை
சமுதாய
கண்ணோட்டமாகவும்
அறிவியல்
கண்ணோட்டமாகவும்
பார்க்கிறார்கள். வேத
காலத்தில் இருந்த நிலை
வேறு இன்று உள்ள
நிலை வேறு. இன்று
அனேக ஆத்துமாக்களை
ஆதாயப்படுத்த வேண்டும்
அதனால் பெண்களும்
குருத்துவ ஊழியத்தில்
ஈடுபடலாம் என்பது
இவர்களின் வாதம். பெண்கள்
ஊழியம் செய்வதையும்
ஆத்தும ஆதாயம்
செய்வதையும் வேதமும்
மறுக்கவில்லை நாமும்
மறுக்கவில்லை.

ஆனால் நம்
வேதம் எந்த காலத்துக்கும்
பொருந்தக்கூடியது.
அது அந்த காலத்தில்
அப்படி இருந்ததானால்
இன்றும் அப்படித்தான்
இருக்கும் அதை
மாற்றுவதற்கு
யாருக்கும்
அதிகாரமில்லை என்பது
எனது கருத்து.

வேதத்தில்
எழுதப்பட்டிருந்தால்
அவ்வளவுதான். அதற்கு
மாற்றுக்கருத்தே இல்லை
நாம் புதுப்புது
அர்த்தங்களை கொடுப்பது
சரியல்ல என்பது
என்னுடைய கருத்து.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.