1. கலப்பினத் திருமணத்தைக் குறித்து வேதாகமம் என்ன கூறுகிறது?

2. ஒரு கிறிஸ்தவர் புறஜாதியாரை காதலிப்பது அல்லது விவாகம் செய்வது சரியானதா?

முதல் கேள்விக்கான
பதில்:

கலப்பினத் திருமணம் செய்துகொள்ள கூடாது என்று பழைய ஏற்பாடு இஸ்ரவேலருக்குக் கட்டளையிட்டது (உபாகமம் 7:3-4). இருப்பினும், இதன் காரணம் அடிப்படையாக இனம் சார்ந்ததல்ல, மாறாக மதம் சார்ந்தது. தேவன் மற்ற இனத்தாருடன் சம்பந்தங்கலவாதிருக்கும்படிக் கட்டளை கொடுத்ததின் நோக்கம் அவர்கள் விக்கிரகாராதனைக்காரர்களும் பொய்யான தெய்வங்களை
வணங்குகிறவர்களுமாயிருந்ததுதான். விக்கிரகாரதனைக்காரர்கள், அந்நிய தெய்வங்களை வணங்குகிறவர்கள், மற்றும் புறஜாதியாருடனும் கலப்புத்திருமணம் செய்தால் இஸ்ரவேலர்கள் கர்த்தரைவிட்டு விலகிப் போவார்கள். இதைப்போன்ற ஒரு கோட்பாடே புதிய ஏற்பாட்டிலும் கூறப்பட்டாலும் அதன் நிலை வேறு: “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?” (2 கொரிந்தியர் 6:14). இஸ்ரவேலர்கள் (ஒரே மெய்யான தேவனில் விசுவாசங் கொண்டவர்கள்) விக்கிரகாராதனைக்காரர்களைத் திருமணஞ் செய்துகொள்ளக்கூடாது என்று கட்டளையிடப்பட்டதைப் போலவே, கிறிஸ்தவர்களும் (ஒரே மெய்யான தேவனில் விசுவாசங் கொண்டவர்கள்) அவிசுவாசிகளைத் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று கட்டளை பெற்றனர். இந்தக் கேள்விக்குக் குறிப்பிட்டு பதிலளிக்க வேண்டுமென்றால், இல்லை, கலப்புத்திருமணம் தவறு என்று வேதாகமம் கூறவில்லை.

மார்ட்டின் லூதர் சொன்னதைப் போலவே, குணத்தை வைத்து ஒரு மனிதரை எடைபோடலாமே ஒழிய நிறத்தை வைத்து அல்ல. இனத்தை வைத்து பாரபட்சம் பார்ப்பதற்கு கிறிஸ்தவரின் வாழ்க்கையில் இடமில்லை (யாக்கோபு 2:1-10). துணையைத் தெரிந்தெடுக்கும்பொழுது, தன்னை மணம் செய்துகொள்ளப்போகிறவர் இயேசுக் கிறிஸ்துவின் மீது விசுவாசங்கொண்டு மறுபடி பிறந்தவரா எனப்தை ஒரு கிறிஸ்தவர் முதலில் அறிந்துகொள்ள வேண்டும். துணையை தெரிந்தெடுக்க வேதாகமம் கூறும் தரம் கிறிஸ்துவில் நம்பிக்கை, நிறமல்ல (யோவான் 3:3-5). கலப்பினத்திருமணம் சரியா தவறா என்ற காரியமல்ல, மாறாக, அது ஞானத்தையும், பகுத்தறிதலையும் ஜெபத்தையும் குறித்தது.

அதை ஏற்றுக்கொள்ள முடியாத வேற்று மனிதர்களால் கலப்புத்திருமணம் செய்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வரும் பிரச்சினைகள்தான் கலப்பினத்திருமணங்களை குறித்து நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான காரணம். ஒதுக்கப்ப்டுவதும் கேலிக்குள்ளாவதும் பல கலப்பினத் தம்பதிகள் அனுபவிக்கும் ஒன்று. சில வேளைகளில் இது சொந்த வீட்டாரிடமிருந்தே வருகிறது. தங்களது குழந்தைகளின் நிறம் பெற்றோரிடமிருந்தும் கூடப்பிறந்தவர்களிடமிருந்தும் மாறுபடும்பொழுது சில கலப்பினத் தம்பதிகள் மத்தியில் பிரச்சினை வருகிறது. திருமணம் செய்வதற்கு முடிவெடுக்கும்பொழுது இந்தக் காரியங்களைக் கறுத்தில்கொண்டு அவற்றிர்க்குத் தயாராயிருக்க வேண்டும். மீண்டுமாக, ஒரு கிறிஸ்தவர் யாரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் வேதாகமம் இடும் ஒரே கட்டுப்பாடு அந்த நபர் கிறிஸ்துவின் உடலாகிய சபையிலே அங்கத்தினரா என்பதுதான்.

இரண்டாம் கேள்விக்கான
பதில்:

கிறிஸ்தவர் புறஜாதியாரை காதலிப்பது விவேகமற்ற செயலாகும், புறஜாதியாரை திருமணம் செய்யவும் கூடாது. அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக” என்று கொரிந்தியர் 6:14-ல் கூறப்பட்டுள்ளது. இரண்டு வித்தியாசமான காலை மாடுகள் ஒரு நுகத்தை சுமக்கும் படத்தை இந்த வசனம் காட்டுகிறது. இவ்விரெண்டும் இணைந்து சுமை தூக்கும்படி ஓதுழைக்காமல், ஒன்றோடொன்று விரோதமாக செயல்படும். இந்த வேத பகுதியில் விவாகம் என்று குறிப்பிடவில்லை, ஆனால் இது விவாகத்தை பற்றி தான் சொல்லுகிறது என்று அறிந்து கொள்ளலாம். பேலியாலுக்கும் (சாத்தானுக்கும்) தேவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இந்த வேத பகுதி கூறுகிறது. அதே போல, கிறிஸ்தவர் மற்றும் புறஜாதியார் இருவரும் விவாகம் செய்யும்போது அவர்களுக்கு எந்த விதமான ஆவிக்குரிய சம்மந்தமும் இருக்காது. அவர்கள் இரட்சிக்கபடும்போது பெற்ற பரிசுத்த ஆவியானவர் தங்கும் வாசஸ்தலம் என்று பவுல் விசுவாசிகளுக்கு நினைப்பூட்டுகிறார் (2 கொரிந்தியர் 6:15-17). ஆகையால், அவர்கள் இந்த உலகத்தில் பிரிக்கப்பட்டவர்களாக இருக்கவேண்டும்—அவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள், ஆனால் உலகத்திற்குரியவர்கள் அல்ல—இது வாழ்கையில் மற்ற காரியங்களுக்கு பொருந்தும், ஆனால் அதை விட இந்த மிக நெருக்கமான உறவாகிய விவாகத்திறகு மிகவும் முக்கியமானது.

பின்னும் வேதம் சொல்லுகிறது, “மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்’ (1 கொரிந்தியர் 15:33). விசுவாசி அவிசுவாசியுடனே ஏற்படுத்தும் எந்த நெருக்கமான உறவும் தேவனோடு இருக்கும் அவன்/அவள் உறவுக்கு தடையாக மாறும். நாம், காணாமல் போனவர்களை ஆதாயப்படுத்த வேண்டும், ஆனால் அவர்களோடு நெருக்கமான தொடர்பு வைக்க கூடாது. அவிசுவாசிகளோடு நல்ல நட்புகளை வைப்பது தவறு அல்ல, ஆனால் அதை விட்டு அடுத்த நிலைக்கு போக கூடாது. நீ ஒரு அவிசுவாசியை காதலிக்கும்போது, எது முக்கியமாக இருக்கும், காதலா அல்லது ஆத்தும ஆதாயமா? நீங்கள் ஒரு அவிசுவாசியை திருமணம் செய்தால், எப்படி உங்கள் விவாகத்தில் ஆவிக்குரிய நெருக்கத்தை கட்டி எழுப்ப முடியும்? இந்த உலகத்தில் முக்கியமான ஒன்றில்—அதாவது இயேசு கிறிஸ்துவில்—உங்களுக்கு கருத்து வேறுபாடு இருந்தால், எப்படி ஒரு சிறந்த திருமண வாழ்கையை நீங்கள் பராமரிக்க முடியும்?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.