அடுத்த கேள்வி:-
”தேவனானவர்
சபையிலே முதலாவது
அப்போஸ்தலரையும்,
இரண்டாவது
தீர்க்கதரிசிகளையும்,
மூன்றாவது
போதகர்களையும்,
பின்பு
அற்புதங்களையும்,
பின்பு குணமாக்கும்
வரங்களையும்,
ஊழியங்களையும்,
ஆளுகைகளையும்,
பலவித பாஷைகளையும்
ஏற்படுத்தினார்”.
இந்த வரங்களை கூட
ஆண்களுக்கு ஆவியானவர்
கொடுக்கிறார் என அதே
அதிகாரத்தில் 11 ஆம் வசனம்
கூறுகிறது
”இவைகளையெல்லாம்
அந்த ஒரே ஆவியானவர்
நடப்பித்து, தமது
சித்தத்தின்படியே
அவனவனுக்குப்பகிர்ந்து
கொடுக்கிறார்
இதில் அவனவன் என
குறிப்பிடுவது
ஆண்களைத்தான் என நான்
கருதுகிறேன்
அப்படிப் பார்த்தால் எந்த
வசனத்தையும் பெண்கள்
தனக்கென்று எடுத்துக்
கொள்ள முடியாது.
எல்லாமே ஆண்
பாலுக்குத்தான்
சொல்லப்பட்டிருக்கிறது!!
பெண்கள் வேதம் வாசிக்க
அவசியமில்லை!!
அப்படி தானே..?
இதேவிதமான கேள்வி
எழும் என்று
எதிர்பார்த்தேன். எனவே
நானும் நிதானமாக
வேதத்தை வாசித்தேன்.
அதில் குறிப்பிட்ட வேத
பகுதியிலிருந்து நான்
பெற்றுக்கொண்ட
வெளிச்சம் எனக்குப்
போதுமானதாக
இருக்கிறது. சிலரைப்
போல, கருதுகிறேன்,
நினைக்கிறேன்,
என்பதாக யூகமான
விசுவாசம் எனக்குத்
தேவையில்லை.
சிலருடைய நல்லெண்ணம்
பாதிக்கப்படுமே என்ற
பாகுபாடும் எனக்குக்
கிடையாது. தங்களிடம்
சத்தியம் இருப்பதாக
நினைத்திருக்கும்
நண்பர்கள் சத்தியத்தை
எடுத்துச் சொன்னால்
அதனை ஏற்றுக்கொள்ள
ஆவலுடன்
இருக்கிறேன்.ஆனால்
இன்னும் அரச இலை
நுனியளவு கூட ஏறிவர
விரும்பாத
நண்பர்களுக்கு சமமாக
போராட என்னால்
முடியாது.
நான் வாசித்த
வேதபகுதியிலிருந்து....
11.ஸ்திரீயானவள்
எல்லாவற்றிலும்
அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு
கற்றுக்கொள்ளக்கடவள்.
12. உபதேசம்பண்ணவும்,
புருஷன்மேல்
அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு
நான் உத்தரவு
கொடுக்கிறதில்லை;
அவள்
அமைதலாயிருக்க
வேண்டும்.
13.என்னத்தினாலெனில்,
முதலாவது ஆதாம்
உருவாக்கப்பட்டான்,
பின்பு ஏவாள்
உருவாக்கப்பட்டாள்.
14. மேலும், ஆதாம்
வஞ்சிக்கப்படவில்லை,
ஸ்திரீயானவளே
வஞ்சிக்கப்பட்டு
மீறுதலுக்கு
உட்பட்டாள்.
15. அப்படியிருந்தும்,
தெளிந்த
புத்தியோடு
விசுவாசத்திலும்
அன்பிலும்
பரிசுத்தத்திலும்
நிலைகொண்டிருந்தால்,
பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்.
(1.தீமோத்தேயு.2)
1. கண்காணிப்பை
விரும்புகிறவன்
நல்லவேலையை
விரும்புகிறான்,
இது உண்மையான
வார்த்தை.
2. ஆகையால்
கண்காணியானவன்
குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை
உடைய புருஷனும்,
ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த
புத்தியுள்ளவனும்,
யோக்கியதையுள்ளவனும், அந்நியரை
உபசரிக்கிறவனும்,
போதகசமர்த்தனுமாய்
இருக்கவேண்டும்.
(1.தீமோத்தேயு. 3)
மேற்காணும் வேதபகுதி
தொடர்பாக நான்
சிந்தித்தது
என்னவென்றால், வேத
வசனங்கள் இருபாலருக்கும்
பொதுவாகவும்
பொதுவான
வழக்கத்தின்படி
ஆண்பாலை மையமாகக்
கொண்டும்
எழுதப்பட்டிருப்பது
அனைவரும் அறிந்ததே.
ஆனாலும் இந்த வேதப்
பகுதியானது
அப்படியல்ல. ஏனெனில்
பவுலடிகள் எழுதிய
நிருபமானது அது
எழுதப்பட்டபோது
அதிகாரங்களாகவும்
வசனமாகவும்
எழுதப்படவில்லை.
பிறகே
அவ்வாறு
பிரிக்கப்பட்டது. எனவே
இதிலிருந்து நாம்
கவனிக்கவேண்டியது
என்னவென்றால்
பவுலடிகள் தெளிவாக
குழப்பத்துக்கும்
சர்ச்சைக்குமிடமின்றி
எழுதியிருக்கிறார்.
நம்முடைய
விசுவாசத்தின்படி
இதனை எழுதியவர்
பவுலடிகள் என்று நாம்
சொன்னாலும் இது
ஆவியானவரே சபைக்காக
எழுதிக்கொடுத்ததாகும்.
அந்த நடுக்கத்துடன்
வாசித்தோமானால்
நிச்சயமாகவே தெளிவு
பிறக்கும். ஸ்திரீகள்
தொடர்பான
ஆலோசனைகளை எழுதிய
பிறகு ஆண்கள்
தொடர்பானவை
துவங்குவதால் இந்த
வேதபகுதியை
இருபாலருக்கும்
பொதுவானதாகக்
கொள்ளக்கூடாது என்பதே
எனது கருத்தாகும்.
இதற்கு உதவியாக 2- ம்
அதிகாரத்தின் கடைசி
பகுதியையும் 3 ம்
அதிகாரத்தின்
ஆரம்பத்தையும் இணைத்து
வாசித்துப் பார்க்கவும்.
நான் ஒரு சபைக்கு
தலைவராக இருக்கிறேன்
என்று
வைத்துக்கொள்ளுங்கள்;
நான் அவசர காரியமாக
ஏதாவது ஊருக்கு
செல்லும் போது எனது
சபையை நடத்தும்
பொறுப்பை எனது
மனைவியிடம்
ஒப்படைத்துச் செல்வதை
வேதம்
கற்றுத்தரவில்லை.
எனது
சபையின் மூப்பர்களிடம்
ஒப்படைக்கவே
சொல்லுகிறது. அதனை
நான் மீறி எனது
மனைவியிடமே நான்
அனைத்து
பொறுப்புகளையும்
ஒப்படைத்துவிட்டு
மூப்பர்களை ச்சும்மா
எடுபிடிகளைப் போல
நடத்தினால் நான்
கிறிஸ்துவின்
மாதிரியைப்
பின்பற்றவில்லை.
ஏனெனில் இயேசுவானவர்
தமது சபையின்
பொறுப்பை தமது
தாயாகிய மரியாளிடம்
அல்ல, பேதுரு உள்ளிட்ட
அப்போஸ்தலர்களிடமே
ஒப்படைத்துச் சென்றார்.
நான் எனது மூப்பர்களை
நம்பாவிட்டால் அது
அவர்களுடைய பெலவீனம்
அல்ல, என்னுடைய
பெலவீனமாகும்.
எனது அழைப்பே
கேள்விக்குறியாகிறது.
இறுதியாக நம்முடைய
கரத்தில் தவழும் பரிசுத்த
வேதாகமத்தில்
இருபாலருக்கும்
பொதுவான
கட்டளைகளும்
ஆண்களுக்கு
மட்டுமேயான
கட்டளைகளும்
பெண்களுக்கு
மட்டுமேயான
கட்டளைகளும்
கொடுக்கப்பட்டுள்ளது.
அவற்றை ஆவியானவரின்
துணையுடன் வாசித்து
தியானித்தால்
நிச்சயமாகவே சத்தியம்
வெளிப்படும். கர்த்தர்
தாமே நம்மை
நடத்துவாராக.