அப்போஸ்தல
உப்தேசத்தில் பெண்களை
பிரதான ஸ்தானத்தில்
அமர்த்தும் வழக்கம் இல்லை.
அதாவது மரபு
இல்லை. மரபை மீறுவோர்
கலகம் செய்வோர் ஆவர்.
I கொரிந்தியர் 11:3
ஒவ்வொரு
புருஷனுக்கும்
கிறிஸ்து
தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப்
புருஷன்
தலையாயிருக்கிறானென்றும்,
கிறிஸ்துவுக்கு
தேவன்
தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள்
அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.
இதற்கு எதிராக யார் என்ன
விளக்கம் தரமுடியும் ?
அதேபோல ஆணை
பெண்ணுக்கு
கீழ்ப்படிந்திருக்கச்
சொல்லி ஒரு வசனம் கூட
கட்டளையிடவில்லை.
ஆனால் அன்புகூறச்
சொல்லுகிறது. ஆனால்
பெண் எப்போதும்
ஆணுக்குக்
கீழ்ப்படிந்திருக்கவே
வேதம் சொல்லுகிறது.
அப்படியிருக்க ஒரு
பெண் எத்தனை
பரிசுத்தவாட்டியாக
இருந்தாலும் ஒரு
ஆணைப் பிடித்து
அணைத்து
திருமுழுக்கு தருவது
கற்பனை செய்தும்
பார்க்கமுடியாத
அருவருப்பாகவே
இருக்கும். ஒரு வேளை
உலகில் ஆண்களுக்கு பஞ்சம்
உண்டாகி வேதம்
சொல்லுவது போல ஏழு
பெண்களுக்கு ஒரு ஆண்
என்ற அளவில்
ஜனத்தொகையின்
சமநிலை சிதைந்து
போனால் மாத்திரமே ஆண்
ஊழியர்களுக்கு பஞ்சம்
உண்டாகும். அதேபோல
திருமணத்திலும் சவ
அடக்கத்திலும்-
ப்ரோட்டோகால் எனும்
மரபின்படி ஆண் தான்
முதலில்
சிருஷ்டிக்கப்பட்டவன்-
இறைவனுக்கு அடுத்த
ஸ்தானத்தில் இருப்பவன்
என்பதால் அவன் வழியே
இந்த முக்கிய
சாக்கிரமெந்துகள்
மேற்கொள்ளப்பட
வேண்டும்.
சிலருடைய
கேள்வி:-
1 Timothy 3:2.
ஆகையால்
கண்காணியானவன்
குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை
உடைய புருஷனும்,
ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த
புத்தியுள்ளவனும்,
யோக்கியதையுள்ளவனும், அந்நியரை
உபசரிக்கிறவனும்,
போதகசமர்த்தனுமாய்
இருக்கவேண்டும்.
இது கண்காணியான
ஆணுக்கு சொல்லப்பட்டது.
ஆண்கள் பல தார மணம்
செய்யும் பழக்கம்
இருந்ததால், பவுல் அது
கூடாது என்று அக்
காரியத்தை
வலியுறுத்தி
ஆண்களுக்கு
சொல்கிறார்.
வாசித்துக்
கொண்டே வந்தால்
ஸ்தீரிகளைப் பற்றி
சம்பந்தமில்லாமல் பேசும்
இவ்வசனம் வருகிறது
11. அந்தப்படியே
ஸ்திரீகளும்
நல்லொழுக்கமுள்ளவர்களும்,
அவதூறுபண்ணாதவர்களும், தெளிந்த
புத்தியுள்ளவர்களும்
எல்லாவற்றிலேயும்
உண்மை
யுள்ளவர்களுமாயிருக்க
வேண்டும்.
அந்தப்படியே?
எந்தப்படியே??
திடீரென்று ஸ்தீரீகளைப்
பற்றிப் பேச வேண்டிய
அவசியம் இங்கு என்ன
வந்தது?? இந்த வசனத்தில்
வரும் ஸ்தீரீகள் யார்?
இவர்களும் கண்காணிகள்
அல்லது உதவிக்காரர்
ஊழியத்திற்கு
அழைக்கப்பட்டவர்களே.
அப்படிப்பட்ட
ஊழியத்திற்கு
அழைக்கப்பட்ட பெண்களின்
தகுதி எப்படியிருக்க
வேண்டும் என்று இங்கு
சொல்லப்பட்டிருக்கிறது.
என்பது தானே பொருள்..?
பதில்:-
ஸ்திரீகளுக்கும்
புருஷர்களுக்கும்
மாற்றி மாற்றி
சொல்லுவதாகவே இதைக்
கொள்ளவேண்டும்.
எப்படியெனில் ஏற்கனவே
முந்தைய அதிகாரத்தில்
உபதேசிக்கவோ
அதிகாரம் செலுத்தவோ
அனுமதியில்லை என்று
சொல்லியிருக்கிறார்.
அவரே அதை எப்படி
மாற்றி சொல்லுவார் ?
இன்னும்
புரியவேண்டுமானால்
இந்த வேதபகுதியிலுள்ள
வசன எண்களை
நீக்கிவிட்டு ஒரு கடிதம்
போல
வாசித்துப்பார்க்கவும்.
இருபாலருக்கும்
பொதுவானதாக இந்த
வசனங்களை வாசித்தால்
அசிங்கமாக
இருக்கும்.
பவுலடிகள்
பெண்கள் மீது மிகுந்த
மரியாதையுள்ளவர்
என்றே நான் நம்புகிறேன்.
(ஒரே புருஷனையுடைய
மனைவி
கண்காணியாகலாம் என்று
பவுலடிகள் கூறுவதாக
எடுத்துக்கொள்ளணுமா,
என்ன ???)
”வேதத்திலுள்ள எந்தத்
தீர்க்கதரிசனமும்
சுயதோற்றமான
பொருளை
யுடையதாயிராதென்று
நீங்கள் முந்தி
அறியவேண்டியது.”
(2.பேதுரு.1:20)
எனவே சொந்த
வியாக்கியானங்கள்
கொடுக்கும் துணிகரம்
நமக்கு வேண்டவே
வேண்டாம்.