பொதுவான பார்வை:-
இயற்கை விதிகளின்படி
ஆண் என்பவன்
கொடுப்பவனாகவும்,
பெண் என்பவள்
பெற்று கொள்பவளாகவும்
இருக்கிறாள்.
ஆணின் இயல்பு
கொடுப்பது
(agressive) ஆகும்.
பெண்ணின் இயல்பு
(receptive) பெற்று
கொள்வது ஆகும்.
ஆன்மிகத்தில்
இரண்டு நிலைகள்
உண்டு. ஒன்று
கடவுளிடமிருந்து
வல்லமையை,
அருளை, இரக்கத்தை
பெற்று கொள்வது.
இரண்டு பெற்று
கொண்ட
வல்லமையை,
இரக்கத்தை, அருளை
மற்றவர்களுக்கு
கொடுப்பது,
சொல்வது. இதன்
மூலம அதை
குறித்து அறியாதவர்கள்
அதைக் குறித்து
அறிய வழி வகை
செய்வது.
அறிந்தவர்கள் அவர்கள்
செல்லும்
பாதையில் இருந்து
மாறாமல் இருக்க
வழி செய்வது.
முதல் நிலையில்
கடவுள் மட்டுமே
ஆணாக
கருதப்படுகிறார்.
ஏனெனில் அவர்
மட்டுமே
கொடுப்பவர்.
அவரிடமிருந்து
பெற்றுக் கொள்ள
வேண்டுமானால்
ஆண், பெண் என
அனைவருமே பெண்
தன்மையுடன்
இருந்தால் (receptive
nature) மட்டுமே
அவரிடமிருந்து
பெற்று கொள்ள முடியும்.
இரண்டாம்
நிலையில்
இவ்வாறு பெற்று
கொண்ட
வல்லமையை,
அருளை
மற்றவர்களுக்கு
வழங்குவது. இதற்கு
ஆண் தன்மை
கொண்டவர்களே
(agressive nature) தேவை.
ஆண் என்பவன் இந்த
தன்மையை இயல்பாக
பெற்றிருப்பதால்
ஆன்மிகத்தை
பரப்பும் பணியில்
ஆண்களே எல்லா
மதத்திலும் தெரிவு
செய்யப்பட்டுள்ளனர்.
கடவுளிடமிருந்து
பெற்று கொள்வதில்,
பெண் தன்மையும்,
அதை பரப்புவதில்
ஆண்
தன்மையுடனும்
செயல்படுபவர்களே
இதற்கு
சரியானவர்கள்.
ஆகவே ஆண்களே
இதற்கு என
நியமிக்கப்படுகிறார்கள்.
இந்த கருத்து சொந்த
கருத்து அல்ல, ஆய்ந்தறிந்த
வேற்று மத நூல்களின்
சாரம். ஆனாலும் அது
வேதத்துக்கு
எதிராகவும் இல்லை.
அதனால் அவற்றை
முழுவதுமே
ஏற்றுக்கொள்ளவேண்டிய
அவசியமும் இல்லை.
இயேசுவின் கட்டளை
மத் 28:18-20:-
இந்த வசனம் ஆண்களான
அவரது சீடர்களை
பார்த்து இயேசு
கிருஸ்து
கூறியதுதான். இதில்
எந்த சந்தேகமும் இல்லை.
ஏன் எனில் யூத
சமுதாயம் ஆண் ஆதிக்க
சமுதாயமாகும். யூத
சமுதாயம் மட்டுமல்ல,
உலகில் உள்ள எல்லா
சமுதாயமும் ஆண்
ஆதிக்க சமுதாயம்தான்.
(இதற்கான காரணம்
மிகவும்
சுவாரசியமானது)
யூத சமுதாயத்தில் ஆண்
ஆதிக்கத்தின் அளவு
மிகவும் அதிகமாகும்.
தாயும் தந்தையுமான
தேவனை இவர்கள் ஆணாக
மட்டுமே பார்த்தவர்கள்.
இப்படிபட்ட
சமுதாயத்தில்
பெண்களின்
வார்த்தைகளை ஒரு
பொருட்டாக எண்ண
மாட்டார்கள். அது
மட்டுமல்லாது,
சுவிசேஷம்
அறிவிப்பது என்பது
மிகவும் ரிஸ்க்கான
விஷயமாகும். இதற்கு
பெண்களை அனுப்பி
அவர்களுக்கு
பிரச்சனைகளை
ஏற்படுத்த இயேசு
கிருஸ்து
ஒருபோதும்
விரும்பியிருக்க
மாட்டார்.
தங்குவதற்க்கு
இடமில்லாது அலைய
வேண்டிய
சூழ்னிலையில்
சுவிசேஷம் சொல்ல
வேண்டி வந்தாலும்
வரலாம். இந்த
சூழ்னிலைகள்
பெண்களுக்கு ஏற்றது
அல்ல.
ஆகவே சீடராக
வேண்டியது என்பது
ஆண் பெண் என
இருபாலருக்கும்
பொதுவானது.
அதிலும் பெண்கள்
தாழ்மையை இயல்பாக
பெற்றிருப்பதால்
தேவ்னிடம் பக்தி
செலுத்துவது
அவர்களுக்கு
எளிமையானது.
ஆனால் சீடாரக்க
வேண்டியது என்பது
ஆண் பாலருக்கு
மட்டுமே உரியது.
பெண்கள் ஒரு
குறுகிய வட்டத்தில்
பெண்கள், குழந்தைகள்
போன்றோர் மத்தியில்
ஊழியம் செய்யலாம்.
தங்கள் சாட்சியை
பகிர்ந்து கொள்ளலாம்.
அன்பு சகோதரர்களே!!
வேதம் கூறுகிறது...
கலாத்தியர் 3:28
யூதனென்றும்
கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும்
சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும்
பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும்
கிறிஸ்து
இயேசுவுக்குள்
ஒன்றாயிருக்கிறீர்கள்.
இது பொதுவானது.
கிறிஸ்து என்ற
சரீரத்தில் அனைவர்க்கும்
ஒரே பணி கிடையாது.
பேதமற்ற இயேசுவின்
சரீரமாகிய சபையில்
ஸ்திரியானவளுக்கு
பேச அனுமதி இல்லை..
(வேதம் சொல்லுகிறதை
தான் கூறுகிறேன்.)
இதை பற்றி விரிவாய்
பேசினால் பொதுவாக
பெண்கள்
மனமடிவடைவது
சகஜமே!! வேதம்
பெண்ணுரிமைகளை
மதிக்கிறதில்லை
என்றும்
சொல்லுவார்கள்..
அப்படி
பட்டவர்கள்
கிறிஸ்துவின் சபை
முழுவதும்
பெண்ணாகவே
வேதமெங்கும்
உருவகபடுத்தபடுவதை
அறிவார்களாக!!
சரி,பின் வரும் வசனம்
பெண்கள் சபையில்
பேசுவதை குறித்து
நாம் விளங்கிக்கொள்ள
கூடிய வேத
தீர்மானத்தை தெளிவாய்
விளக்குகிறது.
I கொரிந்தியர் 11:3
ஒவ்வொரு
புருஷனுக்கும்
கிறிஸ்து
தலையாயிருக்கிறாரென்றும்,
ஸ்திரீக்குப் புருஷன்
தலையாயிருக்கிறானென்றும்,
கிறிஸ்துவுக்கு
தேவன் தலை
யாயிருக்கிறாரென்றும்,
நீங்கள்
அறியவேண்டுமென்று
விரும்புகிறேன் .
கவனிக்க!!!
மேற்கண்ட வசனத்தில்
பெண்ணானவள்
யாருக்கும் தலையாக
கொடுக்கப்படவில்லை!!
தலையில் தானே வாய்
இருக்கும்.வாய் தானே
போதிக்கும்.
SIMPLE!!!!
வேதம் காட்டும் சபை
ஒழுங்கில் பெண்கள்
பேச,போதிக்க,
உபதேசிக்க அனுமதி
இல்லை என்பதை
மேற்கண்ட வசனத்தின்படி
குழப்பமில்லாமல்
அறியலாம்.
I கொரிந்தியர் 14:35
அவர்கள் ஒரு
காரியத்தைக்
கற்றுக்கொள்ள
விரும்பினால்,
வீட்டிலே தங்கள்
புருஷரிடத்தில்
விசாரிக்கக்கடவர்கள்;
ஸ்திரீகள் சபையிலே
பேசுகிறது
அயோக்கியமாயிருக்குமே.
சபையில் ஸ்திரி
பேசுகிறதை வேதம்
அயோக்கியம்
என்றால், நாம் ஏற்று
கொள்ளத்தானே
வேண்டும்!!!
அவ்வாறு
இவ்வோழுங்கை ஏற்று
கொள்ள மனதில்லாது
இருப்போமானால் தேவ
நியமனங்களை
மீறினவர்களாவோம்!!
தேவ நியமனங்களில்
ஒன்றை மீறினாலும்
அனைதையையும்
மீறினதாகவே பொருள்
என்று இவர்கள்
அறியார்களா என்ன??
நான் அறிந்தவரையில்,.
போதிக்கிற
ஆசாரியர்களுக்குரிய
ஆசாரிய சுதந்தரத்தில்
கூட இம்மாதிரியான
காரியத்தை வேதம்
அனுமதிக்கிறதில்லை.
எபேசியர் 5:32
இந்த இரகசியம்
பெரியது; நான்
கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும்
சொல்லுகிறேன்.