ஒரு பிராமணர் இரா.மணி ஜயர் இன் சாட்சி பாகம் 2

இடைவிடாமல் விக்கிரகங்களுக்கு பூஜை செய்து வரும் என் நண்பா்களிடமும் கேடடுப் பார்த்தேன்! எவரும் கூறவில்லை இந்த விக்கிரகங்கள் பேசியதாக! ஏமாற்றத்தின் மேல் ஏமாற்றம் அடைத நான், ஒரு வேளை இந்த வேதாகமம் கூறுவது மெய்யாய் இருக்குமோ என்ற எண்ணத்தோடு மேலும் சற்று ஆழமாக வாசிக்கத் தொடங்கினேன்!

அப்பொழுது ஒரு கிறிஸ்தவ நண்பன் இம் மனுக்குலத்தின் இரட்சகா் இயேசு கிறிஸ்து ஒருவரே! “இயேசுக் கிறிஸ்துலாலே அன்றி வேறெருவராலும் இரட்சிப்பு இல்லை. நாம் இரட்சிக்கப் படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷா்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை”(அப்.4.12) என்று என்னிடம் கூறினான். அப்பொழுது கூட இயேசுக்கிறிஸ்துவாகிய கடவுள் இவ்வுலகை இரட்சிக்க வந்த அவதார புருஷா்களில் ஒருவா் என்றுதான் நான் நினைத்தேன்! ஆனால் கிறிஸ்தவ நண்பன் மீண்டும் மீண்டும் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவனாய் இருந்தும். ஒருவன் இயேசுக் கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளாவிடில் அவன் மோட்ச இராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது என்று கூறினான். இவற்றையெல்லாம் அறிந்த பின்பு கூட என் வழக்கமான விக்கிரக ஆராதனை முறைகளை தவறாமல் செய்து வந்தேன்.

ஒரு நாள் என் நண்பன் வேதாகமத்தில் உள்ள தீா்க்கதரிசன வார்த்தைகளை பழைய ஏற்பாட்டினின்று வாசித்து காட்டி, அவை புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவின் வாழவில் எவ்விதம் நிறைவேறிற்று! என்பதையும் விளக்கிக் காடடினான்.

டேப் ரிக்கார்டா் (பதிவு பெட்டி) எத்தனை முறை போட்டாலும், மீண்டும் மீண்டும் அதையே பாடுவது போல. பொருளரியாமல், இந்து சுலோகங்களையும், மந்திரங்களையும் விடாமல் உச்சரித்தும், ஓதியும் வந்தேன். அவற்றின் பொருள் என்னவென்று அறிந்து கொள்ளாமலேயே! சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைபோல, என் முன்னோர், என் பெற்றோர், என் குரு, என்ன சொல்லிக் கொடுத்தார்களோ, அவற்றையே மீண்டும் மீண்டும் பொருளரியாமல் மந்திரங்களாக உச்சரித்தேன்.

இந்து மதத்தின் முதன்மை வேதமான “ரிக்” வேதத்தில் இம் மனுக் குலத்தை மீட்க வந்த இரட்சகா் இயேசு பெருமான் ஒருவரே என்று கூறியிருப்பதை கேட்டறிந்தேன். இந்து மதத்தை அடிப்படையாக கொண்ட வேதங்களும், பிராமணா் நம்பிக்கை வைத்திருக்கும் இதிகாசங்கள் அனைத்துமே ஏகமனதாக கூறுவது மனிதா்களின் பாவங்களை மன்னிப்பதும், அவா்களை இரட்சித்து மோட்சத்தில் சோ்ப்பதும், இயேசு கிறிஸ்து என்ற தெய்வத்தால் மட்டுமே கூடும் என்பதே. ரிக் வேதம் இதனை உள்ளங்கை நெல்லிக்கனி போல திட்டமும் தெளிவுமாக வரையறுத்து கூறுகிறது.

இதுகாறும் என்னை மறைத்திருந்த அஞ்ஞானம் என்னும் மாயத்திரை விலகி, உண்மையான தெய்வம் இயேசுவே என்பதை முழுமையாக அறிந்து கொண்டேன். அன்றே அவா் பாதத்தில் என் இதயத்தை அா்ப்பணித்தேன்.

சில சமஸ்கிருத சுலோகங்களையும் அவற்றின் தமிழாக்கத்தையும் கீழே தருகிறேன். நீங்களும் வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1.மூல மந்திரம்

ஓம் பிரம்மபுத்திராய நமக!

விளக்கம் – பிதாவின் (பிரம்மா) குமாரனாகிய (புத்திராய்) இயேசுவே உம்மை வணங்குகிறேன். (நமக) (யேவான் 3.16)

>

2.இயேசுவின் பிறப்பு

ஓம் கன்னிசுத்தாய நமக!

விளக்கம்- கன்னியின் வயிற்றில் பிறந்தவரே, உம்மை வணங்குகிறேன். (இயேசு கன்னி மரியாளின் வயிற்றில் பிறந்தவா். (மத்தேயு 1.23)

3.இயேசுவின்
சிலுவைப்பாடுகள்

ஓம் பஞ்சகாய நமக!

விளக்கம்- ஜந்து காயங்கள் (பஞ்ச காய) உடையவரே உம்மை வணங்குகிறேன். ஏசாயா 53.5

ஓம் விருச்சூல
அருந்தாய நமக!

விளக்கம்- சிலுவை மரத்தில் தொங்கினவரே உம்மை வணங்குகிறேன்.

4.இயேசு ஒருவரே மரணத்தைவென்றவா்.

ஓம் ம்ருதம் ஜெயாயட நமக!
விளக்கம்- மரணத்தை வென்றவரே உம்மை வணங்குகிறேன்.
(ஏசாயா 25.8)

5.மாறாத தன்மைகொண்ட தெய்வம் இயேசு

ஒருவரே என்பதற்கு ஆதாரம்.

ஓம் நமச்சிவாய நமக!

விளக்கம் – அன்புள்ளவரே உம்மை வணங்குகிரேன். சிவம் என்றால் அன்பு என்று பொருள்படும்.

ஓம் சதா சிவாய நமக!

விளக்கம் – எப்பொழுதும் அன்புள்ளவனே உம்மை வணங்குகிறேன். “சதா” என்றால் எப்பொழுதும் (Forever) என்று பொருள்படும் வேதம் கூறுகிறது. இயேசு கிறிஸ்த்து நேற்றும் இன்றும் என்றும்
மறாதவராயிருக்கிறார்.
(எபி 13.8)

இயேசுவே மெய் தெய்வம் என்ற உன்மையை நான் கூறும் மந்திரங்களே திட்டவட்டமாக அறிவிக்கின்றன என்று நான் புரிந்து கொண்ட போது ஒரு வித நடுக்கமும், பயமும் என்னை ஆட்கொண்டது. நான் கற்ற மந்திரங்கள் கூறும் அத்தனை அம்சங்களும் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் மட்டுமே காணப்படுவதால் கிறிஸ்து ஒருவரே உண்மையும், உயிருள்ளவருமாகிய தெய்வம். அவரால் மட்டுமே என் பவாங்களை தீா்த்து என்னை இரட்சிக்க முடியும் என்ற உயா்ந்த உண்மையை என் உள்ளம் மனப்பூா்வமாக ஒத்துக் கொண்டது.

மற்றொரு முக்கியமான அம்சம், இயேசுவின் பக்கம் என் வாழ்க்கையை இழுத்தது அவரது பரிசத்தமான, வெற்றிகரமான வாழ்க்கையே! ஆம் அவராலேயன்றி ஒருவரும் அவரைப் போல் பரிசுத்தமாக, தாழ்மையாக, அன்பாக உண்மையாக, வெளிப்படையாக, வரையரைக்குட்பட்ட ஒரு வாழ்க்கை வாழவே முடியாது.

மனிதன் பரிசுத்தமாய் வாழ்வது கடினமானது. என்ற என் எண்ணத்தை மாற்றி, அவரை பின்பற்றி அவரைப் போல் பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம் அடைந்து அந்த உன்னத தெய்வீக நிலைக்குச் செல்ல வேண்டும் என்ற பேரார்வம் என்னுள் எழுந்தது.
இயேசுவின் வாழ்க்கையை, நான் வணங்கிய தெய்வங்களின் வாழ்ககையோடு ஒப்பிட்டு பார்த்த போது, இயேசுவே குறைவற்ற பரிசுத்தா் என்ற உண்மை நிலை புலனாயிற்று.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.